சச்சினுக்கு பாரத ரத்னா – மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும் வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.
இந்த விருது பெறும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத ரத்னா விருது குறித்த அறிவிப்பைக் கேட்டு தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த விருதை தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாகவும் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.
மேலும், இந்திய தேசம் தனது தாய் மண் என்றும் இந்த மண்ணில் பிறந்ததற்காக பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-என்வழி செய்திகள்
வாழ்த்துக்கள் சச்சின்……
இதை காங்கிரஸ் அரசியல் ஆதாயத்திற்காக செய்யாமல் இருந்தால் சரி……..
விருதுக்கு மரியாதை.
பத்தொன்பது வயது நிரம்பினால் மட்டுமே தேசிய அணியில் இடம் என்ற விதிமுறையை உடைத்தவர்….இன்று விளையாட்டு துறைக்கும் பாரத ரத்னா விருது கொடுக்கும் விதியை உருவாக்கி பிரியா விடை பெற்ற என் தலைவனை வாழ்த்தும் தகுதி இல்லாததால் வணங்குகிறேன்…..
மும்பை இந்தியன் அனைவருக்கும் சொந்தம் என்று சொல்லிய அற்புதமான மனிதர்