BREAKING NEWS
Search

போர்க்குற்றவாளி ராஜபக்சே லண்டன் பயணம்… ‘மறக்க முடியாத வரவேற்பு’ தரத் தயாராகும் தமிழ் அமைப்புகள்!

போர்க்குற்றவாளி ராஜபக்சே லண்டன் பயணம்… ‘மறக்க முடியாத வரவேற்பு’ தரத் தயாராகும் தமிழ் அமைப்புகள்!

லண்டன்: இங்கிலாந்துக்கு செல்லும் மகிந்த ராஜபக்சேவுக்கு மீண்டும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புகள் மும்முரம் காட்டி வருகின்றன.

இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் ராணியாக முடிசூட்டிய 60-ம் ஆண்டு நிறைவு விழா லண்டனில் நடைபெற உள்ளது. இதில் காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இந்த விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

ஆனால் இங்கிலாந்து வரும் ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்க புலம்பெயர் ஈழத் தமிழர்கள் முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்து அரசிக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதனையும் மீறி அவர் இங்கிலாந்துக்குள் நுழைந்தால் 2010-ம் ஆண்டு செய்ததைவிட மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

2010-ம் ஆண்டில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்ற ராஜபக்சே சென்றார். அப்போது தமிழர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் ராஜபக்சே நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்தது.

இதனால் ஹோட்டலிலேயே சிறைவைக்கப்பட்டது போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டார் ராஜபக்சே. பின்னர் அவர் தங்கியிருந்த இடத்திலும் முற்றுகைப் போராட்டம் தொடரவே இரவோடு இரவாக, லண்டன் விமான நிலையத்தின் பின் வாசல் வழியாக ஓடி இலங்கைக்கு விமானம் பிடித்தார் ராஜபக்சே.

2010 தமிழர் போராட்டம்...

தற்போது இதைவிட பலமான போராட்டத்தை முன்னெடுத்து ராஜபக்சேவை மிரள வைக்க வேண்டும் என்பது தமிழ் அமைப்புகளின் திட்டம்.

நடத்துங்க… உலகின் எந்த நாட்டுக்குப் போகும் முன்பும் தமிழரை எண்ணி ராஜபக்சே கும்பல் குலை நடுங்கும் அளவுக்கு போராட்டம் நடத்துங்க!

-என்வழி செய்திகள்
7 thoughts on “போர்க்குற்றவாளி ராஜபக்சே லண்டன் பயணம்… ‘மறக்க முடியாத வரவேற்பு’ தரத் தயாராகும் தமிழ் அமைப்புகள்!

 1. M. Senthil

  நடத்துங்க… உலகின் எந்த நாட்டுக்குப் போகும் முன்பும் தமிழரை எண்ணி ராஜபக்சே கும்பல் குலை நடுங்கும் அளவுக்கு போராட்டம் நடத்துங்க!

  – கண்டிப்பாக

 2. யாழ்

  நித்திரையிலும் புலம் பெயர் தமிழனை எண்ணிப் பயப்படும் அளவிற்கு இம் முறை இந்த கொலைவெறியனுக்கு எதிர்ப்புக் காண்பிக்கப்பட வேண்டும். தமிழர் உள்ள எந்த நாட்டிலும் காலடி எடுத்து வைக்க இனி ராஜபக்ஷ்சே கடுமையாக யோசிக்க வேண்டும்.

 3. HOTLINKSIN.COM

  இந்தியாதான் ராஜபக்க்ஷேக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு கொடுக்கும் நாடு… இந்தியா மாதிரி நெனச்சிட்டு அங்கயும் போயிருப்பாரு…
  …………………….

  ஓமனக்குட்டன்களை ஒதுங்கவைக்கும் “மிரட்டல் ” நாயகி!!
  http://www.hotlinksin.com/story.php?id=10733

 4. குமரன்

  ஜூன் இரண்டாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை லண்டனில் விக்டோரியா பதவி ஏற்ற அறுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன.

  இனப்படுகொலை செய்த ராஜபக்சே எப்போது போகிறாரோ?

  காட்டப் படும் எதிர்ப்பு காரணமாக எப்படியும் இந்த முறையும் பயணத்தை ரத்து செய்துவிடுவார் என்றே நினைக்கிறேன்.

  இந்தியாவுக்கு வரும்போதுதான் அந்த அளவு எதிர்ப்பு இல்லாமல் நமது மத்திய மாநில அரசுகள் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள். நல்ல பாதுகாப்பும் தருவார்கள். எல்லாம் நம் தலை எழுத்து.

 5. nellai

  நடத்துங்க… உலகின் எந்த நாட்டுக்குப் போகும் முன்பும் தமிழரை எண்ணி ராஜபக்சே கும்பல் குலை நடுங்கும் அளவுக்கு போராட்டம் நடத்துங்க!
  ஆமாம். கண்டிப்பாக.
  இந்தியா தவிர. இங்கே நிறைய குள்ளநரி கூட்டம். ஒன்று செய்ய முடிந்த பொது செயாமல் இப்பொது கனவு கண்டு கொண்டு இருக்கிறது.

 6. anbudan ravi

  தமிழ் நாட்டில் உள்ள எங்கள் தமிழர்கள் கூனிக்குறிகி வெட்கப்படும் அளவிற்கு ஒற்றுமையாய் இருந்து இலங்கை உறவுகள் வீரமானவர்கள் என்பதை மீண்டும் நிருபியுங்கள். ராஜபக்ஷே என்ற வெறி நாயை ஓட ஓட விரட்டுங்கள். நல்லதே நடக்கும்.

  அன்புடன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *