BREAKING NEWS
Search

கைதாக தயாராய் உதயகுமார்… அரண்போல தடுத்து நிற்கும் மீனவ மக்கள்!

உதயகுமார் எனும் மக்கள் போராளி..!

எல்லாம் வல்ல இறைவன் முன்னிலையில் சத்தியம் செய்து கூறுகிறேன். அணு உலை போராட்டம் என்ற காரணம் சொல்லி நான் யாரிடமும் ஒரு ரூபாயை கூட வாங்க வில்லை!

கூலிப் போராளிகளுக்கும் மக்கள் போராளிகளுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டுமா.. டாக்டர் சுப உதயகுமார்தான் அதற்கு சிறந்த உதாரணம்!

இவர் ஓட்டுப் பொறுக்கியல்ல… மக்களைக் காக்க தன்னை அதிகார வர்க்கத்தின் கைகளில் ஒப்படைத்துக் கொள்ளத் தயாராக நிற்கும் நிஜமான போராளி. அதற்காக அரசுகள் தந்த தேசத் துரோகி பட்டம் சுமப்பவர்.

முப்பொழுதும் மத்திய மாநில அரசுகள் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றி, உதயகுமாருக்கு தேசத்துரோகி பட்டம் தர காத்திருக்கின்றன. ஆனால் உண்மை அவரைக் காத்து நிற்கிறது.

சமீப காலத்தில் இத்தனை நேர்மையும் கொள்கையில் உறுதியும் கொண்ட ஒரு மக்கள் ஒருங்கிணைப்பாளர் யாருமில்லை. ஆனால் அவரையும் அரசியல் கட்சி ஆரம்பிக்க வைத்துவிடுவார்களோ என்ற நினைப்புதான் அச்சத்தைத் தருகிறது.

ஒரு தனிமனிதன் உள்ளத்திலும் வாக்கிலும் செயலிலும் நேர்மையிருந்தால் எந்த அரசும் நடுங்கவே செய்யும் என்பதற்கு உதயகுமாரே உதாரணம்…

‘எங்களுக்கான உண்மையான போராளியை காத்து ரட்சியும்!’ – லூர்து அன்னை ஆலயக் காட்சி

செவ்வாய்க்கிழமை போலீசாரிடம் தன்னைத் தானே ஒப்புக் கொடுக்க சுப.  உதயகுமார் தயாரானார்.

” மக்களை காக்க நான் போராடினேன் . அதற்கு இந்த நாடு எனக்கு கொடுத்த பரிசு ‘தேசத் துரோகி’ என்ற பட்டம். என் மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு நான் அந்த பட்டதை சுமக்க தயாராக இருக்கிறேன் .

‘அண்ணா நீங்கள் போக வேண்டாம்.. நாங்கள் போகிறோம்.. எவ்வளவு பேர் வேண்டுமானாலும் சிறைக்கு… ‘

இந்த தேவாலயத்தில் , எல்லாம் வல்ல இறைவன் முன்னிலையில் சத்தியம் செய்து கூறுகிறேன். அணு உலை போராட்டம் என்ற காரணம் சொல்லி நான் யாரிடமும் ஒரு ரூபாயை கூட வாங்க வில்லை,” என்று அவர் கூறியபோது, அங்கே கூடியிருந்த மொத்த மக்களும் அவருக்காக அழுதனர்.

அந்த அழுகை வெறும் கடமைக்காக அல்ல என்பது, போராட்டங்களில் கூட கவர்ச்சியும் பரபரப்பு பொழுதுபோக்கையும் எதிர்ப்பார்ப்போருக்கு பிடிக்காதுதான்!

தங்களுக்கான ஒரு நிஜமான தலைவனை அரசின் கோரப்பிடிக்குள் சிக்க வைக்க விரும்பாத மக்கள், உதயகுமாரை கைதாகவிடாமல் தடுத்து நிற்கின்றனர். அவரை கைதாக விடமாட்டோம் என்று ஆவேசத்துடன் கூறி, வலுக்கட்டாயமாக படகில் ஏற்றி கடலில் மறைத்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் எந்த நேரமும் அவர்களைச் சமாதானப்படுத்தி காவல் நிலையம் வரத் தயாராக இருக்கிறார் உதயகுமார்!

-என்வழி ஸ்பெஷல்
7 thoughts on “கைதாக தயாராய் உதயகுமார்… அரண்போல தடுத்து நிற்கும் மீனவ மக்கள்!

 1. தினகர்

  “அந்த அழுகை வெறும் கடமைக்கானதல்ல… தங்களின் உறவுக்கானது!”

  என்ன செய்வது, ஊழல் காரணத்தைச் சொல்லி அரசியல் கட்சி ஆரம்பிப்பவர்கள் போராளிகள், ஆனால் மக்களுக்காக போராடுபவர் தேசத்துரோகி. அதை விடக் கொடுமை, இந்திய அரசுச்சின்னத்தை அவமதித்து கார்ட்டூன் போட்டவரை, விசாரணைக்காக நீதிபதியிடம் ஆஜர் செய்து, நீதிபதி நீதிமன்ற காவல் கொடுத்தால் ஐய்யோ ஆத்தா என்று குரல் கொடுக்கிறார்கள் அது அமெரிக்கா வரையிலும் ரேடியோவில் ஒலிக்கிறது. இந்தியாவை அவமதித்தால் கூட பரவாயில்லையாம் ஏனென்றால் அவர் ஊழல் எதிர்ப்பு போராளியாம்.

  தாயின் குரல் வலையை நெறித்து விட்டு, அந்த தாய்க்கு பாலும் பழமும் கொடுத்தால் என்ன பயன் என்று கூட அறியாத அதி புத்திசாலிகள் அவர்கள்.

  க்ரீன்பீஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மஹாராஷ்ராவில் அணு உலை அமைவதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தியது. இங்கே போராட்டம் இல்லை என்றால் கூட பரவாயில்லை, போராடுபவர்களுக்கு துணையாகக்கூட அல்ல, ஆதரித்து குரல் கூட எழுப்ப தயங்குகிறது.

  எங்கெங்கும் அரசியலடா…

 2. malar

  கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் போல் இருக்கிறது.என்ன பண்வது பாவம்…
  தடுக்க நினைத்து இருந்தால் முதலில் அடிக்கல் நாட்டும் போதே தடுத்து இருக்கணும் ..இப்போ அழுது என்ன பண்ணுவது…..

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  வலைப்பூ தலையங்க அட்டவணை
  info@ezedcal.com
  http//www.ezedcal.com

 3. மு. செந்தில் குமார்

  நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

  என்வழியின் செய்தியை, அதன் வீச்சை (reach- ஐ) விரிவுபடுத்தவேண்டும். பெரும்பான்மையான மக்களை சென்றடைய செய்ய வேண்டும்.

  அப்பொழுது மாநிலத்தின் / தேசத்தின் மற்ற பகுதியில் உள்ள மக்களும் நமக்கென்ன என்ற மனநிலையில் இருந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் மனநிலை உருவாகும். .

 4. பதிமகன்

  இந்தக் கட்டுரையை தமிழக தினசரிகள் அனைத்தும் பிரசுரிக்க வேண்டும். மின்சாரம் மக்களின் மனசாட்சியை இருட்டடிப்பு செய்து விட்டது.
  நன்றி என்வழி.
  என்வழி எப்போதுமே தனிவழி.

 5. muthukumar

  வினோ அண்ணா அருமையான பதிவு…இந்த மக்களுக்கு நியாயம் கிடைத்தாக வேண்டும்..

 6. manmathan

  எனது வயது 36 . என் வாழ்நாளில் நான் பார்த்த உண்மையான மக்கள் தலைவன் உதயகுமார் அவர்கள் தான்.

 7. Rajpart

  முல்லை பெரியாறு போராட்டம் தான் நான் பார்த்ததில் சிறந்தது. ஆனால் அதில் வன்முறை நிறைய இருந்தது. நம் மக்கள் எழுச்சி பெரும் பொது அங்கே அற வழியை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அந்த போராட்டம் தனி நபர்,ஜாதி, கட்சி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் உண்மைக்காக போராடினார்கள். ஆனால் கூடங்குளம் பிரச்சனையில் அவர்கள் போராட்டம் ஒரு தேர்ந்த போராளிகள் போல் செயல்படுகிறார்கள். அனைவருடைய நோக்கம் ஒரே மாதிரி இருக்கிறது. பல ஆயிரம் மக்கள் போராடும் போது இவ்வாறு போராடுவது செயற்கையாக இருக்கிறது. எதோ ஒரு சக்தி பின்னால் இருந்து செயல்படுவது தெளிவாக தெரிகிறது. ஆனால் அந்த சக்தி உண்மையா பொய்யா என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *