BREAKING NEWS
Search

கபாலி உரிமையைப் பெற போட்டி போடும் 30 நிறுவனங்கள்… திகைப்பில் கலைப்புலி தாணு!

கபாலிக்காக முட்டி மோதும் முன்னணி நிறுவனங்கள்.. பிரமிப்பில் தாணு!

kabali4

தலைவன்டா!

ந்தியத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முக்கியத்துவம் என்ன… அவரது மவுசு என்ன என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது கபாலி.

லிங்காவில் நன்றாக கல்லா கட்டி, பொய்க் கணக்கு காட்டி சரியாகப் போகவில்லை என்று கூறிய அத்தனை பேரும் இப்போது கபாலியை வாங்க வரிசை கட்டி நிற்கின்றனர்.

ஒருவர், இருவரல்ல… 30 பேர். லிங்கா மீது அவதூறு பரப்பிய ஆசாமி உள்பட. இந்த ஆசாமி வேறு பினாமி மூலமாவது கபாலியைப் பெற்றுவிட முட்டி மோதிக் கொண்டிருக்கிறார் என்பது உபரித் தகவல்!

ஏற்கெனவே இந்தப் படத்தின் அமெரிக்க உரிமையை பெரும் விலைக்கு விற்றிருக்கிறார் தாணு. 300-க்கும் அதிகமான அரங்குகளில் கபாலி தமிழில் வெளியாகப் போகிறது. இது தமிழ் திரையுலக வரலாற்றில் தனி சாதனை. தெலுங்கிலும் படம் வெளியாகவிருக்கிறது. இந்தியில் வெளியிடும் திட்டம் இப்போதைக்கு இல்லை எனத் தெரிகிறது.

அமெரிக்க உரிமை விற்பனையான செய்தி வெளியான அடுத்த கணத்திலிருந்து கலைப்புலி தாணுவின் போன்கள் அத்தனை பிஸி. தமிழ் பதிப்பை வெளியிடும் உரிமையைக் கேட்டு 30 நிறுவனங்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போடுகிறார்களாம்.

தயாரிப்பாளர் தாணுவுக்கு இது மிகப் பெரிய திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. “தலைவன் தலைவன்தாய்யா… சூப்பர் ஸ்டார்னா சும்மால்ல… அந்தப் பெயரை இனி ஒருத்தரும் உச்சரிக்கவே முடியாது. ரஜினி சார் பாக்ஸ் ஆபீஸின் நிரந்த சக்கரவர்த்தி என்பதை நானே கண்கூடாக உணர்கிறேன். முன்னேயாவது நான் யானையில்ல குதிரைன்னு சொன்னாரு.. ஆனா கபாலில அதுக்கான அவசியமே இல்லை… அவர் எப்பவுமே ஜெயிக்கிற குதிரை,” என்று தன் நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி பெருமிதப்படுகிறாராம்.

இந்த நேரத்தில் யாரையும் வெறுப்பேற்றுவதற்காகச் சொல்லவில்லை… கபாலிக்கு முன்பே பூஜை போட்டு படப்பிடிப்பும் தொடங்கப்பட்ட அந்த இன்னொரு படத்தைக் கேட்டு இதுவரை ஒருவர் கூட தாணுவைத் தொடர்பு கொள்ளவில்லையாம்.

‘அந்தப் படத்தையும் வாங்கிக்குங்க.. கபாலியைத் தரேன்’ என்று தாணு கூறி வருகிறாராம்.

படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் எனத் தாணு திட்டமிட்டு வருகிறார். ஆனால் தமிழ்ப் புத்தாண்டு வந்தால் சரியாக இருக்கும் என பலரும் ஆலோசனை சொல்வதால் ஏப்ரலில் வெளியிடலாம் என தாணு ஆலோசித்து வருகிறாராம்!

-என்வழி ஸ்பெஷல்
15 thoughts on “கபாலி உரிமையைப் பெற போட்டி போடும் 30 நிறுவனங்கள்… திகைப்பில் கலைப்புலி தாணு!

 1. உமா ரவி

  இனிமேலாவது தலைவர் ரஜினியின் செல்வாக்கு சில கிணற்று தவளைகளுக்கு தெரிந்தால் நல்லது. இல்லாவிட்டால் புரிய வைப்போம்.
  வாழ்க கலியுக கடவுள் ரஜினி அவர்கள்.

 2. kumaran

  சந்தோஷமான செய்தி , இந்த மாதிரி செய்தி வந்து கிட்டே இருக்கணும்

 3. nandha

  300 திரை அரங்கம் அல்லது 3000 அயுரம் அஹ
  ______

  அமெரிக்காவில் மட்டும் 300 அரங்குகள்.

  -என்வழி

 4. raghul

  நண்பா ..
  புதிய தலைமுறை இயக்குனர் + தாணு தயாரிப்பாளர் — என் முந்திய விருப்பம் (பதிவு) நிறைவேறியது!.

  தற்போதய என் விருப்பம் : இந்த முறை தமிழக TV உரிமை விஜய் TV க்கு கிடைக்க வேண்டும். அவர்கள் நல்ல படி கொண்டு போயி சேரப்பர்கள் நமது வெற்றியை !! அஹில உலக அளவில்..

  தலைவா.. தேவை ஒரு time machine .. To be in Tamil New Year very soon..
  தலைவர் 40 .. ஒரு விழா வேண்டும்…

 5. MK

  செம நியூஸ் மா வினோ.
  இது திரு. தாணுக்கு வேண்டுமானால் திகைப்பாக இருக்கலாம். ஆனால் தலைவரின் உயிர்ருக்கு உயிரான நம் ரசிக தோழர்களுக்கு திகைப்பல்ல இனிப்பான செய்தி. தலைவர் படத்துக்கு ஆயிரமாயிரம் கொடுத்து opening ஷோ பார்த்து தலைவரை ரசித்து மனதார வாழ்த்தும் கோடான கோடி நம் ரசிக பேரு மக்கள் இருப்பதால் தலைவர் படத்தை வாங்க போட்டி பலமாக இருக்கும்.
  இதை….. 49 படங்கள் நடித்து விட்டால் சூப்பர் ஸ்டார் ஆகி உடனே (Time to lead )முதலமைச்சேர் ஆகலாம் என்று கனவு காணும் பு(லி)ல்லுருவிகளும், தலைவரின் புகழை என்றுமே விரும்பாத, வெளியில் நெருங்கிய நண்பனை போன்று காட்டிக்கொள்ளும் உலக (ஊம்…) மொக்கை நாயகன்களும் புரிந்து கொண்டால் சரி.

 6. enkaruthu

  இதுதான் தலைவர். ஆனால் இவரும் இதை பந்தா பண்ண மாட்டார்.எங்களையும் போ கண்ணா என்றும் சொல்லிவிடுவார்.அப்புறம் எல்லோரும் நல்ல இருக்க வேண்டும் என்று தன் எதிரிக்கும் சேர்ந்து வேண்ட போய்விடுவார் இந்த குழந்தை.அட போங்கப்பா ஒரு நல்ல தலைவரை நாங்கள் ரசிகர்கள் வைத்து கொண்டு படும் அவஸ்தை பெரும் அவஷ்தையப்பா .ஆனால் என்றும் இந்த கலியுகத்தின் நல்லவர் நீங்கள்.எப்படி காமராஜர் போன பின்பு அவரது ஆட்சி வராதோ என்று indru

 7. enkaruthu

  எங்கள் தலைவர் மனதிற்கு என்றும் நாங்கள் அடிமை.அந்த தெரு பொட்ட நாயாம் சிங்கரவேலனை எந்த ஆம்பளை நாயும் திரும்பாது .திருச்சி நமது தலைவரின் கோட்டை .அதனால்தான் நம் தலைவர் பெயரை சொல்லியே வாழ்ந்த விஜய் யின் நாயாம் சிங்கரர்வேலனை வைத்து அந்த இடத்தில தலைவர் பெயரை காலி பண்ணலாம் என்று நினைத்தான் அந்த டூபாக்கூர் விஜய் அப்பன் சந்திரசேகர்.இன்று புலி படத்தை பற்றி பொதுமக்கள் வைக்கும் கிண்டலை தாங்க முடியாமல் நான் அழுதுருவேன் என்று புகார் கொடுத்திருக்கிறார்கள்.நீங்கள் அடுத்தவரை கிண்டல் பண்ணும்பொழுது மட்டும் இனிக்கிறதா விஜய் ரசிகர்களே.

 8. enkaruthu

  கலைபுலி தாணு என்னை பொருத்தவரை நேர்மையான தயாரிப்பாளர்.லிங்குசாமியிடம் இந்த மிகவும் கேவலமான முறையில் தோல்வி அடைந்த படமான பிச்சைகார வில்லன் மன்னிக்கவும் கொஞ்சம் லிங்குசாமி குரலில் பேசி விட்டேன் உத்தம வில்லனின் நஷ்டத்தை பற்றி பேசாதீர்கள் என்று சொல்லி இருப்பது நம் தலைவர்தான் என்று தெரிய வருகிறது.இதில் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் இந்த பிச்சகார நாயகன் டை அடித்த மீசையை வேற தடவி கொள்கிறான்.ஒரு 2500 ஒட்டுக்கே இப்படினா.1996 இல் பல.லட்சம் ஓட்டில் மற்றவரை ஜெய்க்க வைத்துவிட்டு எதுவும்தெரியாமல் இமய மலைக்கு போன எங்கள் தலைவரை எப்படி கொண்டாடுவது.

 9. enkaruthu

  இதில் இந்த வைரமுத்து வேறு நம் விழாவுக்கு வந்தவரை எப்படி புகழ்வது என்று தெரியாமல் தலைவர் அரசியலுக்கு வருவது தலைவருக்கே தெரியாதாம் என்று நையாண்டி வேறு.இவரை மட்டும் நீங்கள் பாட்டு எழுத வருவோம் என்று நம்பினீர்களா என்று கேட்டால் அது எனக்கே தெரியாது என்பார்.

 10. enkaruthu

  எப்படி காமராஜர் இறந்த பின்பு அவரின் ஆட்சி இன்று கிடைக்காதா என்று நாம் ஏங்குவதை போல இந்த திருட்டு உலகத்தில் அருமையான கடவுள் மனம் படைத்த எங்கள் தலைவரின் ஆட்சி பார்க்காத நாமும் இப்படிதான் பின்னால் பேசுவோம்.வாழ்க நல்லவர்கள்.

 11. velan

  எல்லாம் அந்த சிங்காரவேலன் பாதுகுடுதான் இருக்கார் !!! முருகா

 12. john

  Linga is very good movie, these people created fake news. I thought , they played with some political back round. If you release second time I would like to watch. Rajini is very fast actor and speed.. very active and more energy. I never saw any one from Indian cinema like him.He is always super star. No one else. His dance is something different from other actors.His hands move like box by box. Best wishes for Kabali – John dubai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *