BREAKING NEWS
Search

தலைவர் ரஜினி பற்றி வதந்தி பரப்பும் எல்லோருக்கும்…

 தலைவர் பற்றி வதந்தி பரப்புவோருக்கு…

DSC_2801 copy

வர் உயிரும் உடலும் அவருக்கு மட்டுமே சொந்தமானதன்று. இதோ இந்த கோடிக்கணக்கான இதயங்களில் அவர் இதயத்தை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம். அந்த உயிர் எந்த உலகுக்குப் போனாலும் நாங்கள் விடாமல் போரிட்டு,  உயிரைக் கொடுத்தாவது எங்கள் உயிரணைய தலைவர் ரஜினியை மீட்போம். அதை இந்த உலகம் ஏற்கெனவே ஒருமுறை பார்த்திருக்கிறது.

கொளுத்தும் ஒரு கோடையில் திருமூர்த்தி மலையிலிருந்து பண்ணாரி வரை வெறும் காலுடன் நடந்து போய் தம் அன்புத் தலைவனின் உயிருக்குப் போராடிய கூட்டம் உள்ள மண் இது!

உலகிலேயே முதல் முறையாக 33 நாடுகளில் வசிக்கும் மக்கள் பிரார்த்தனை செய்து மீட்டெடுத்த உயிர் இந்த ரஜினியுடையது. எத்தனையோ விஷமிகள் பிரச்சாரம் செய்தும் இந்த நேர்மையாளனைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என பக்குவமடைந்த மனம் கொண்டவர்கள் அவரை வாழ வைக்கும் இந்த ‘தெய்வங்கள்’!

இதெல்லாம் தெரிந்துதான் முன்பே ஒரு முயற்சி செய்து, இந்த பாசப் போராட்டம் பார்த்து எம் தலைவரை எங்களிடமே ஒப்படைத்தான் எமன் என்பதை ஒவ்வொரு முறை வதந்தி கிளப்பும் போதும் நினைவில் வையுங்கள்!

ரஜினி என்பது வெறும் பெயரல்ல.. அது ரஜினி எனும் பெரும் சமூகத்தின் உணர்வு. உணர்வுடன் விளையாடதீர்கள்!

-என்வழி.காம்
10 thoughts on “தலைவர் ரஜினி பற்றி வதந்தி பரப்பும் எல்லோருக்கும்…

 1. anbudan ravi

  கேவலமான பிறவிகள் நம் தமிழகத்தில் சற்று அதிகம்….தயவு செய்து இது போன்று செய்திகளுக்கு முக்கியத்துவம் தராதீர்கள்……இது போன்ற சிறு பிள்ளைத்தனமான விளையாட்டுகளுக்கு நாம் வீண் போக வேண்டாம். தலைவர் படம் வெளிவரும் வரை இப்படித்தான்…..எமனையே எமலோத்திர்க்கு அனுப்பியவர் தலைவர்….நாம் சற்றும் கவலைப்படவேண்டாம்.

  அன்புடன் ரவி.

 2. sunder

  அருமையாக சொன்னீர்கள் வினோ ஜி ! சாட்டையடி !!

 3. JB

  // இதெல்லாம் தெரிந்துதான் முன்பே ஒரு முயற்சி செய்து, இந்த பாசப் போராட்டம் பார்த்து கண்ணீருடன் எம் தலைவரை எங்களிடமே ஒப்படைத்தான் எமன் //

  சூப்பர் வினோ.

 4. Jwahar.T

  ரஜினி என்பது வெறும் பெயரல்ல.. அது ரஜினி எனும் பெரும் சமூகத்தின் உணர்வு. உணர்வுடன் விளையாடதீர்கள்!

  உண்மை …., உண்மை….. உண்மை….

  ஜவஹர்.த

  திருப்பூர்

 5. Mettustreet K.Muthu

  “எத்தனையோ விஷமிகள் பிரச்சாரம் செய்தும் இந்த நேர்மையாளனைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என பக்குவமடைந்த மனம் கொண்டவர்கள் அவரை வாழ வைக்கும் இந்த ‘தெய்வங்கள்”..
  சூப்பர் வினோ.

 6. மிஸ்டர் பாவலன்

  நண்பர்களே…

  இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் மௌனம் காப்பது ஏன் தெரியலை?
  வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என நடிகர் சங்கம் ரஜினிக்கு
  ஆதரவு தர வேண்டாமா? உலக நாயகன் விஸ்வரூபம் எடுப்பாரா?

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 7. veera

  இந்த நாட்டில் இந்த மனிதரை பார்த்து மட்டும் ஏன்தான் இவ்வளவு பொறமையோ. இவர் தொட்டிருக்கும் உச்சத்தை, சாதனைகளை, மக்கள் நெஞ்சத்தில் இவருக்கு கொடுத்திருக்கும் இடத்தை பிடித்துவிட வேண்டும் என்று நெஞ்சுக்குள் வஞ்சனையை வளர்த்து வைத்திருக்கும் பல பேர், இவர் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் அது சாத்தியமில்லை என்பதாலும், இப்படி ஏதாவது வதந்திகளை கிளப்பிவிட்டு அற்ப சந்தோசம் அடைகிறார்கள். பாவம் அவர்கள்.
  இந்த பூமி உள்ளவரை நிலைத்திருக்கும் ஒரு சரித்திரத்தை உருவாக்க காத்திருக்கும் ஒரு புனித ஆத்மாதான் இந்த மாமனிதர் என்பதை அறியாதவர்கள்.
  விட்டுவிடுங்கள்…
  வாழ்ந்த சுவடே தெரியாமல் மரிக்கப்போகும் இந்த கேவலமான மானிட பதர்களை.

 8. kumaran

  15 வருடங்களில் தலைவர் நடித்த படங்கள் 4 மட்டும் ! அப்படி இருந்தும் இன்னும் ரசிகர்களை தக்கவைத்து இருக்கிறார்! இன்னும் M G R போல் தொடர்ச்சியாக் படம் நடிப்பது , அரசியல் கட்சி ஆரம்பிப்பது , CM ஆவது , என்று தலைவர் செய்திருந்தால் ரசிகர்களும் , தொண்டர்களுமாய் கோடி கணக்கில் பெருகி இருக்கும் , இந்த உண்மை சோ அவர்களுக்கும தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *