BREAKING NEWS
Search

மக்களின் அரசுகளா… வெளிநாடுகளின் அவுட்சோர்ஸிங் கம்பெனிகளா?

உதயகுமாரை கைது செய்து, மக்களை வன்முறையால் அப்புறப்படுத்தியாவது போராட்டத்தை முடக்க அரசுகள் முடிவு!

கூடங்குளம் போராட்டம்

தாங்கள் ஒன்றும் மக்களின் அரசுகள் அல்ல… வெளிநாடுகள் காலால் இட்டதை தலையால் செய்யத் தயாராக நிற்கும் அவுட்சோர்ஸிங் கம்பெனிகளே என்பதை அழுத்தமாக நிரூபிக்க தயாராகிவிட்டன இந்திய – தமிழக அரசுகள்.

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தை அடக்க, ஒடுக்குமுறையைப் பிரயோகிக்க அனைத்து திட்டங்களையும் தீட்டி முடித்துள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்த வெளிப்படையான உத்தரவுக்கு போராட்டக்குழு மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஒத்துவராவிட்டால், கைது மற்றும் வன்முறை பிரயோகத்துக்கும் தயாராக இருப்பதை அறிவிக்க, போராட்டங்களை ஒடுக்குவதில் ஸ்பெஷலிஸ்டான கூடுதல் டிஜிபி ஜார்ஜை கூடங்குளம் மற்றும் இடிந்தகரைக்கு அனுப்பி வைத்துள்ளார் முதல்வர்.

‘ரஷ்ய ஒத்துழைப்புடன் கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின் நிலையம் எங்களுக்கு வேண்டாம். இந்த அணு மின் நிலையம் செயல்படத் தொடங்கினால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், வாழ்க்கை சீர்குலையும்’ என்ற கோஷத்துடன் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தது அணு மின் நிலைய எதிர்ப்புக் குழு.

கிராமத்தினர், பெண்கள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினருடன் தொடங்கிய இந்த உண்ணாவிரதம் நாளுக்கு நாள் வலுப்பெறவே ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்தது. உதயக்குமார் வெளிச்சத்திற்கு வந்தார்.

இதையடுத்து கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதுதான், எனவே போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 16ம் தேதி கோரிக்கை விடுத்தார்.

ஆனால், செப்டம்பர் 19ம் தேதி அவர் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் மக்களின் அச்சம் போகும் வரை இந்த திட்டத்தை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரினார். அதன் பின்னர் பிரதமரின் உத்தரவின் பேரில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி இடிந்தகரை வந்தார். போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினார். ஆனால் பேச்சு முடிந்த சென்ற அடுத்த சில மணி நேரங்கள் கழித்து, போராட்டக் குழுவினரை கண்டபடி திட்ட ஆரம்பித்துவிட்டார். வெளிநாட்டு ஏஜென்டுகள் என வர்ணித்தார் (பழக்கதோஷம்!)

முல்லைப் பெரியாறு - மக்களை விரட்டிய போலீஸ்

இந்த நிலையில்தான் தமிழக அமைச்சரவையில், கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் போக்கப்படும் வரை அணு மின் நிலைய செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் போடப்பட்டது.

அக்டோபர் 7ம் தேதி தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு குழுவும், போராட்டக்காரர்கள் அடங்கிய குழுவும் பிரதமரை சந்தித்துப் பேசினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து உண்ணாவிரதம் தொடரும் என உதயக்குமார் அறிவித்தார்.

நவம்பர் 7ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூடங்குளம் அணு மின் நிலையத்தை சுற்றிப் பார்த்து ஆய்வு நடத்தி ஒரு ஆபத்தும் இல்லை என்று அறிவித்தார். ஆனால் போராட்டக்குழுவினர் தங்களது நிலையிலிருந்து விலகவில்லை. மாறாக  கலாமை கடுமையாக விமர்சித்தனர். அப்போதுதான் கலாமுக்கு இந்த திட்டத்தில் உள்ள தெளிவின்மை மக்கள் மத்தியில் அம்பலமானது. இதில் மத்திய அரசு இன்னும் கோபமடைந்தது.

முடிவே இல்லாமல் பிரச்சினை நீண்டு வந்த நிலையில்தான் பேராசிரியர் இனியன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்தார். இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை குறித்து முதல்வர் ஜெயலலிதாவை பிப்ரவரி 29ம் தேதி நேரில் சந்தித்துப் பேசினர். இடையில் டெல்லியிலிருந்தும் தொடர்ந்து முதல்வரிடம் பேசினர்.

இதன் பிறகுதான் தமிழக அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது போராட்டக்காரர்களின் பிடிவாதம் தமிழக அரசுக்கு கடும் அதிருப்தியைத் தந்துள்ளதாம் (அதானே, இந்த விஷயத்தில் தன்னை இன்னொருவர் மிஞ்சுவதா!). பல முறை விளக்கம் அளித்த பின்னரும் கூட போராட்டக்காரரர்கள் பிடிவாதமாக அணு உலை வேண்டாம் என்று சொல்வதை முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லையாம். இதை உதயக்குமாரிடமே முதல்வர் நேரில் சொல்லிவிட்டாராம்.

இதையடுத்து அணு மின் நிலையத்தின் செயல்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு காவல்துறையை அவர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும்  தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே கூடுதல் டிஜிபி ஜார்ஜ் இன்று கூடங்குளம் வந்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கத் தொடங்கினால், மின்தடையை பெருமளவில் குறைக்க முடியும் என்ற கருத்தை மக்கள் மத்தியில் முன்னிறுத்துவதில் மத்திய அரசுடன் ஒத்துப் போக விரும்புகிறாராம் ஜெயலலிதா.

ஆனால் உதயக்குமார் தலைமையிலான குழுவினர் போராட்டங்களைத் தொடரப் போவதாக மட்டுமே தொடர்ந்து கூறி வருவதால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.

போராட்டத்துக்கு பணம் தரவில்லை – அமெரிக்கா மறுப்பு

இதற்கிடையில், உதயகுமார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்காவிலிருந்து பணம் வந்தது, ஜெர்மனியிலிருந்து பணம் வந்தது என எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு பத்திரிகை வதந்தி வெளியிடுவதைப் போல கூறி வருகின்றனர் மத்திய மாநில அமைச்சர்களும் அதிகாரிகளும்.

தங்கள் நாட்டிலிருந்து எந்த அமைப்பும் கூடங்குளம் திட்டத்தை எதிர்க்க பணம் தரவில்லை என அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. ஜெர்மனி உள்ளிட்ட ஸ்கான்டினேவியன் நாடுகள் ஏற்கெனவே மறுப்பு தெரிவித்துவிட்டன.

தாங்கள் பிடித்ததாகக் கூறும் ஜெர்மனி உளவாளியை இங்கே வைத்து விசாரிக்காமல், உடனே ரகசியமாக அனுப்பி வைத்தது ஏன் என்ற கேள்விக்கு மத்திய மாநில அரசுகளிடமிருந்து பதில் இல்லை.

ஒரு மக்கள் போராட்டத்துக்கு முன் தொடர்ந்து தாம் தோற்று வருவதை சகிக்காமல், இப்போது வெளிப்படையான அடக்குமுறையை ஆரம்பித்துவிட்டன அரசுகள்.

ஜெயலலிதாவின் புதிய முடிவு

மத்திய அரசுடன் இணைக்கமாகச் செல்ல முடிவெடுத்துள்ள ஜெயலலிதா, அதன் முதல் படியாக அணு மின் நிலையப் பணிகளை தொடங்க மத்திய அரசுக்கு பச்சைக் கொடி காட்டப் போகிறாராம்.

எனவே கூடங்குளத்துக்கு எதிராக புதிய போராட்டங்கள் வெடித்தால் அதை கடுமையாக ஒடுக்குவதற்காக இப்போதே ஜார்ஜை கூடங்குளத்திற்கு முதல்வர் அனுப்பி வைத்துள்ளாராம்.

வன்முறை வெடிக்கலாம்

மேலும் புதிய போராட்டங்களை உதயக்குமார் அறிவித்தால் அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. போராட்டங்களை ஒடுக்க எத்தகைய மோசமான வன்முறையையும் பிரயோகிக்கும் அதிகாரி என பெயரெடுத்தவர் இந்த ஜார்ஜ்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஆவேசமாகக் குவிந்த 1 லட்சத்துக்கும் அதிகமான தேனி மாவட்ட தமிழர்களை அடித்து உதைத்து விரட்டியது இவர் தலைமையிலான போலீஸ்தான். எனவே பெரும் வன்முறை நடக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆக, தன் சொந்த மக்களை அடித்து நொறுக்கி துன்புறுத்தியாவது வெளிநாட்டுக்காரர்களின் அசைன்மென்டை வெற்றிகரமாக முடிக்கப் போகிறார்கள்.

இவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளா… அல்லது வல்லரசுகளின் அவுட்சோர்ஸிங் கம்பெனிகளா?

விதுரன்
12 thoughts on “மக்களின் அரசுகளா… வெளிநாடுகளின் அவுட்சோர்ஸிங் கம்பெனிகளா?

 1. Jegan

  If koodamkulam atomic power project is closed, then kalpauk atomic power project also should be closed…..dont you think that people living there also were human,
  if u say koodamkulam atomic power project is dangerous.then even gas cylinders in every home is also dangerous.it should also be banned….
  If u critisize the eminent scientist mr abdulkalam,then do u feel that mr uday…etc etc were more eminent than him in this field,

 2. R.Ramarajan-Madurai

  Govt must quickly start action to start atomic plant to recovery small industries from dark . If possible try another encounter.
  You want to shut down kudankulam, kalpakam for radiation then for over heat, high carbon density in around area , then shut down Neiveli plant.
  All the plants will closed then people live fear free , STONE AGE Life in darkness.

 3. தினகர்

  ஜெகன், அணு உலை ஆபத்தானது என்று உலக நாடுகள் அனைத்தும் அதை மூடுவதற்கு வழி தேடிக்கொண்டிருக்கும் போது, இங்கே நாம் புதிதாக தொடங்க என்ன அவசியம் என்பது தான் உதயகுமார் போன்றவர்களின் வாதம்.

  என்வழியில் தனி நபரின் யோக்கித்தனத்தை விட நாட்டு மக்களின் நலன் தான் முக்கியம் என்று குறிப்பிட்டிருந்ததை நினைவு கூறுகிறேன்.

  அணு உலை அமைத்துள்ள இடத்தில் மாற்று சக்தியான இயற்கை எரிவாயு மூலம் மின்சார உற்பத்தியை செய்யலாம் என்ற உதயகுமாரின் யோசனை சிந்திக்க வைக்கிறது.. இது வரை இப்படி மாற்று யோசனை இல்லாமல்போராடியபோது அவர் வறட்டு பிடிவாதக்க்காரராகத்தான் தெரிந்தார். உலக அளவில் அணு உலையை மாற்றி இயற்கை எரிவாயு மின்சார உலையாக மாற்றியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ள்து குறிப்பிடத்தக்கது.

 4. Kumar

  கலைஞர் இப்பவாது நம்ம தமிழர்களை காக்க மதிய அரசுடன் பேசுவர இல்லை எப்பவும் போலே தன்னோட பெண்டு பிள்ளைகளை காக்க அமைதி அகிடுவரா??.

 5. மிஸ்டர் பாவலன்

  கூடுதல் செய்தி: (இன்று நான் படித்தது – தினமலர்)

  மத்திய உள்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
  போராட்டக்காரர் உதயகுமார், அவரது கூட்டாளிகள் புஷ்பராயன்,
  மைபா ஜேசுராஜன், பாதிரியார் ஜெயக்குமார், ஜெர்மன் ஹவாலா
  ஏஜன்ட் ஹெர்மானுடன் தொடர்புடைய லால்மோகன் ஆகியோரது
  நடமாட்டங்களை, சி.பி.ஐ., போலீசார் தங்கள் வளையத்தில் கொண்டு
  வந்துள்ளனர். உள்ளூர் கியூ பிரிவு போலீசார் மற்றும் சிறப்பு பிரிவு
  சி.ஐ.டி., போலீசாரும், சி.பி.ஐ.,க்கு துணையாக, களத்தில்
  இறங்கியுள்ளனர். பல்வேறு இடங்களுக்கு உதயகுமார் காரில்
  செல்லும் போது, ஒவ்வொரு காராக மாறிச் செல்வதாக,
  சி.பி.ஐ., போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து,
  சி.பி.ஐ., போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
  இவ்வாறு அவர் கூறினார்.

  செயற்கைக்கோள்: இது தவிர, இடிந்தகரை பகுதியை,
  செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
  எந்த நேரத்திலும், உதயகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள்
  மற்றும் நிதி அளித்த தொண்டு நிறுவனத்தினரை, சி.பி.ஐ.,
  போலீசார் விசாரணைக்கு பிடித்துச் செல்லலாம் என,
  மத்திய உள்துறை வட்டாரங்கள் (home ministry) தெரிவித்துள்ளன.
  உதயகுமார் கைதாகும் வேளையில், இடிந்தகரையில்
  பயிற்சியளிக்கப்பட்ட அவரது ஆதரவாளர்கள், வன்முறையில்
  ஈடுபடலாம் என, போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
  இதை சமாளிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையில்
  போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

  கூடுதல் டி.ஜி.பி., திடீர் ஆய்வு: கூடங்குளம் அணு மின் நிலையத்தில்,
  தமிழக கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.
  கூடங்குளத்திலிருந்து, கடலோர கிராமங்களுக்குச் செல்லும்
  வழிகளை கேட்டறிந்தார். அவரது ஆய்வு மூலம், தமிழக அரசு
  விரைவில் கூடங்குளம் விவகாரத்தில், போலீஸ் மூலம்
  நடவடிக்கை எடுக்கலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
  ஆனால், அணு மின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவே,
  கூடுதல் டி.ஜி.பி., பார்வையிட்டதாக, தமிழக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன (செய்திக் குறிப்புகள்)

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 6. ஊர்க்குருவி.

  சோனியாவின் கவலையெல்லாம் தனது பிள்ளைகளான ராகுல், அல்லது பிரியங்காவை பிரதமராக்கி தனது கடுப்பாட்டுக்குள் இந்தியாவை ஊழல் நாடாக வைத்திருக்கவேண்டும் என்பது.

  “அம்மா திமுக தலைவி” ஆச்சி செல்வி ஜெயலலிதாவின் கவலையெல்லாம் ஐயாவின் திட்டங்களை எல்லாம் மட்டம் பண்ணி, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து வெளியே வந்து தமிழ்நாட்டை தனது அடிமைகளின் மந்தையாக வைத்திருக்க வேண்டும் என்பது.

  ஐயாவின் நோக்கமெல்லாம் தனது கறையை துடைத்து குடும்பத்தை ஒற்றுமைப்படுத்தி வாரிசுகளிடம் நாட்டை கையகப்படுத்தவேண்டும். கனிமொழியின் வழக்கிலிருந்து விடை வாங்கிவிடவேண்டும் என்பது.

  இப்போ ஆட்சியிலிருப்பவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது மின்சாரம். உலகம் உருவாகி இத்தனை ஆண்டாகியும் மின்சாரம் இல்லாத மானிலங்களை வைத்திருக்கும் பெருமையும் உலகத்தில் இந்துய துணைக்கண்டத்துக்குத்தான் உண்டு.

  தமிழ்நாட்டைப்பொறுத்தவரை மின் தட்டுப்பாடு இல்லாத ஒரு காலம் இன்னும் உருவாகவில்லை.

  தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இலவசங்களும், பணமும் அள்ளி இறைப்பவர்கள் அடிப்படை தேவையான மின்சாரத்துக்கு எந்த ஆக்கபூர்வமான முயற்சியும் எடுக்கவில்லை.

  இன்று மின்சாரத்தை முன்னிறுத்தி மோசமான விமர்சனம் ஆட்சியாளர்களை கலங்க வைத்திருக்கிறது. ஆட்சியை தக்கவைக்க குறுமுட்டாக இவர்கள் எதையும் செய்யத்தயாராகி இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை உலகம் நிராகரித்த அணுவில் நிவர்த்தி செய்ய துடிக்கின்றனர்.

  திருவாளர் மௌனம் தியாக திருவிளக்கு இட்ட கட்டளையை திருப்தியாக நிறைவேற்ற மின்சார பொம்மையின் நிலையில் தயாராக உள்ளார்.

  உதயகுமார் கைது செய்யப்படலாம் அதனால் மக்கள் கலவரத்தில் ஈடுபடலாம் அப்படி நடந்தால் பரமக்குடியில் நடந்ததுபோல சில பல உயிர்களை சுட்டுத்தள்ளிவிட்டு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுவதற்காக ஆட்சியாலர்கள் அணுவை கொதிக்கவைக்க முயர்சிக்கலாம் “புக்குஷிமா டா இச்சி” அணு உலைக்கு ஏற்பட்டதுபோன்ற ஒரு நிலை வரும்போது அப்போ ஆட்சியிலிருப்பவர்கள் முன்னைய ஆட்சியாளர்களை குற்றம் சுமத்தி ஒரு ஓய்வுபெற்று பொழுது போகமல் இருக்கும் நீதவானை நியமித்து விசாரணை கமிஷன் அமைத்து விட்டு தமது பழைய பாடத்திட்டத்தை தொடர இலவசங்களுக்காக சிந்தனை செய்வர். மக்களை ஆண்டவன் இருந்தால் ஒருவேளை காப்பாற்றக்கூடும்???

 7. பாலாஜி

  உதயகுமார் சார்.. நீங்க எத்தன கேள்வி கேட்டிங்க
  மத்திய அரசு கிட்ட… நான் உங்க கிட்ட மூணே கேள்வி
  மட்டும் கேட்கப் போறேன்..

  1. “அணு உலை கட்ட போறோம்”னு அரசாங்கம் அறிவிச்ச
  போதும் சரி, கட்ட ஆரம்பிக்கும் போதும் சரி, அப்பல்லாம்
  நீங்க யாரு எங்க இருந்தீங்கனு தெரியவே இல்லையே..
  திடீர்னு மூணு நாலு மாசமா எப்படி உங்களுக்கு
  இவ்ளோ அறிவும் பொறுப்பும் வந்துச்சு ?

  2. இவ்ளோ நாள் போராட்டம் நடத்த மக்கள் மட்டும் தான்
  உங்களுக்கு நிதி கொடுத்தாங்களா இல்ல ..NGOs கிட்ட
  வாங்கினீங்களா? பணம் எந்த ரூட்டில வந்தது? உங்க
  Bank Statements எல்லாம் பிரிண்ட் எடுத்து CBI கிட்ட நீங்க
  கொடுக்க தயாரா?

  3. நீங்க சொல்ற படி அணு உலை stop பண்ணிடலாம்..
  ஆனால் அது கட்ட தேவையான பணம் எங்களோட வரி பணம்..
  சோ நீங்க எங்க பணம் எவளோ ஆச்சுனு கரெக்டா செட்டில்
  பண்ணனும்.. நீங்க தான் அறிவாளி ஆச்சே..
  ஐயா அப்துல் கலாம் கே அறிவுற சொல்றிங்க.. எங்க கணக்க
  கரெக்டா செட்டில் பண்ருங்க சார்.. எங்க மக்கள் ரொம்ப
  கம்மி தான் சார்… மூணு கோடி பேர் தான் சார்…

  -பாலாஜி

 8. anani

  //ஐயா அப்துல் கலாம் கே அறிவுற சொல்றிங்க..//

  நாட்டில் லஞ்ச ஊழலை ஒழிக்க, குழந்தைகள், பெற்றோரிடம் இதை வலியுறுத்த வேண்டும்” ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு குழந்தைகளும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் தந்தை, ஊழல் செய்பவராக இருந்தால், அவரிடம் குழந்தைகள் அன்பாக பேசி, அவரது தவறை உணர்த்த வேண்டும். என்று அப்பாவித்தனமாக அறிவுரை வழங்கிய அவரோட அறிவு என்னென்று சொல்ல.

  அய்யாவோட அறிவுரையை கேட்டீங்களா, தமிழ்த்தாத்தா மொத்த குடும்பத்தையே ஊழலாக்கி வச்சிருக்காரு. அம்மாவுக்கு கொழந்தையே இல்ல அவுகளுக்கு யார் அறிவுரை சொல்லுவாக, கல்லாம் தாத்தாவோட புத்திமதி நடைமுறைக்கு அகுங்களா சாமி?…………..

 9. Ramesh

  @Balaji all of your questions are 100% valid.Those who support udaya kumar should also think about these things.The project was started 20+ years ago.if those people really care about the habitat and occupation of the native people they should have started protesting atleast before the construction had started.is it build overnight or was it hidden under the hood??who said that governments are trying to close the nuclear powerplants???there are countries that depend on nuclear energy for about 90%.regarding the alternate he is suggesting,with present advancements in technologies it is not possible to produce energy commercially at any point,that too in a country like india that would cater millions of people…

 10. மிஸ்டர் பாவலன்

  ரமேஷ், பாலாஜி கருத்துகளுக்கு நன்றி.

  குமுதம் ரிப்போர்ட்டரில் உதயகுமார் பற்றி நீண்ட
  கட்டுரை வந்துள்ளது. அதில் நான் தெரிந்து கொண்டது
  அமெரிக்காவில் பெரும் சம்பளத்தில் பணி செய்து
  கொண்டிருந்த உதயகுமாரும் அவர் மனைவியும்
  அவர்கள் பணியை ராஜினாமா செய்து விட்டு
  கூடங்குளம் அணு ஆலை காட்டப்படும் சமயம்
  நாகர்கோவில் வந்து செட்டில் ஆகி உள்ளனர்.
  அவர்களைப் பற்றிய பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
  அந்தக் கட்டுரையில் உள்ளது.

  மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அவர்கள்
  விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பார் என நம்புவோம்.
  அவரது நல்ல முடிவிற்கு மத்திய அரசு கைகொடுக்கும்.
  தமிழக போலீசுடன், மத்திய ரிசர்வ் போலீசும், இணைந்து
  உதயகுமார் கூட்டத்தின் போராட்டத்தை ஒரு முடிவுக்கு
  கொண்டு வந்தால் நல்லது.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 11. சந்தோஷ் கோபால்

  புரட்சித் தலைவி எது செய்தாலும் இங்கு ஒரு சில தி.மு.க.
  ஆதரவாளர்கள் அவரைக் குறை கூறி எழுதி வருகிறார்கள்.
  ஆயிரக்கணக்கில் Thumbs down செய்து `ஆட்சி நடத்துவது
  சரியில்லை, நிர்வாகத் திறன் போதாது’ எனக் குறை சொல்கிறார்கள்.
  ஆனால் இவர்கள் நேரத்திற்கு தகுந்தவாறு மாறி மாறி பேசுறாங்க.

  புரட்சித் தலைவி கூடங்குளம் பற்றி வாய் திறக்கவில்லை என்றால்
  `திமிரு, ஆணவம், அகம்பாவம்’ என்று கூறுகிறார்கள். இதே கூடங்குளம்
  திறக்க நடவடிக்கை எடுக்க அமைச்சர் குழுவை கூட்டினால் கூடங்குளம்
  மின்சாரமே வந்தாலும் தற்போதைய மின் பற்றாக்குறையை கால்வாசி
  தான் குறைக்கும் என்று கூறுகிறார்கள்.

  பிறகு என்ன தான் செய்யவேண்டும்? செய்தாலும் சங்கரன் கோவில்
  இடைதேர்தல் பயத்தினால் என்கிறார்கள். செய்யவில்லை என்றால் அதற்கும் ஒரு நொட்டு சொல். நாளைக்கே மின்வெட்டு தீர்ந்துவிட்டால்
  கருணாநிதி ஆரம்பித்த திட்டத்தினால் தான் மின்வெட்டு தீர்ந்தது
  என்பார்கள். இந்த அம்மா வந்து ஒன்றும் செய்யவில்லை என்பார்கள்.

  மின்வெட்டு பிரச்சனை தீரவில்லை என்றால் தேர்தலில் வாக்குறுதி
  மட்டும் கொடுக்க தெரியுது ஆனால் மின்வெட்டை போக்க ஒரு
  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பார்கள். உட்கார்ந்தாலும் குற்றம் என்பார்கள். நின்றாலும் குற்றம் என்பார்கள்.

  கூடங்குளமே இயங்கினாலும், 2000 MW மின்சாரம் தான் தயாரிக்கப்படும்,
  அதிலும் தமிழகத்திற்கு 500-1000 MW மின்சாரம் தான் கொடுக்கப்படும்,
  ஆனால் மின்சார பற்றாக்குறை 4000 MW. அதனால் கூடங்குளம்
  இயங்கினாலும் இயங்கவில்லை என்றாலும் தமிழகத்திற்கு
  ஒரு மிக சிறிய ஆறுதல் தானே தவிர, முழு தீர்வு கிடையாது.
  இப்போது அம்மா அவர்கள் ஆரம்பித்துள்ள மின் உற்பத்தி திட்டங்கள்
  தான் அடுத்து வரும் காலங்களில் மின்வெட்டை கணிசமாக போக்கும்….

  -சந்தோஷ் கோபால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *