BREAKING NEWS
Search

அம்மா திரையரங்குகளை வரவேற்போம்.. அண்ணா கலையரங்குகளையும் கவனிக்கலாமே!

அம்மா திரையரங்குகளை வரவேற்போம்.. அண்ணா கலையரங்குகளையும் கவனிக்கலாமே!

0

சென்னை: தமிழக அரசு சார்பில் சமீபமாக  அம்மா குடிநீர் திட்டம், அம்மா உணவகம், அம்மா காய் கனி அங்காடி, அம்மா மருந்தகம் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூடிய விரைவில் அம்மா திரையரங்கமும் உருவாக உள்ளது. இதன் மூலம் சிறு முதலீட்டில் உருவாகும் படங்கள் வெளியிட வாய்ப்பு உருவாகும். மேலும் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதியுடன் இத்திரையரங்குகள் உருவாக உள்ளன.

இத்திட்டத்தில் முதல் கட்டமாக ஏ.சி வசதியுடன் கூடிய 15 அம்மா திரையரங்குகள்  தொடங்கப்படுகிறது. நுங்கம்பாக்கம், ராயபுரம், தங்கசாலை, அண்ணா நகர், துறைமுகம், மதுரவாயல், பெருங்குடி ஆகிய பகுதிகளில் அம்மா திரையரங்குகள் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

சினிமா ரசிகர்களுக்கும், சிறு முதலீட்டில் படம் தயாரிப்பவர்களுக்கும் இது பெரிய விதத்தில் உதவும் என்பதால் இந்த திட்டத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

இந்த அரங்குகளில் அதிகபட்ச கட்டணம் ரூ 25  முதல் 30 ரூபாய்க்குள் இருக்கும். 150 பேர் வரை அமர முடியும்.

அம்மா திரையரங்கம் அமைப்பது பாராட்டுக்குரியதுதான். ஆனால் அதே நேரம், மாவட்டத் தலைநகர்களில் முன்பு தமிழக அரசால் உருவாக்கப்பட்டு, இப்போது கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ள, பெரும் கழிவறை போல நாற்றமடிக்கும் அண்ணா கலையரங்கங்களையும் அம்மா அரசு கவனித்தால் நல்லது!

என்வழி செய்திகள்




6 thoughts on “அம்மா திரையரங்குகளை வரவேற்போம்.. அண்ணா கலையரங்குகளையும் கவனிக்கலாமே!

  1. சுதந்திரன்

    அண்ணா கலையரங்கம் தமிழக அரசால் நடத்தப்படுகிறது. ஆனால், அம்மா திரையரங்கங்கள் சென்னை மாநகராட்சியால் அல்லவா நடத்தப்படுகிறது. அதையும் இதையும் எப்படி ஒப்பீட்டளவில் எடுத்துக்கொள்கிறீர்கள்?

    — சுதந்திரன்
    _____________

    தமிழக அரசுக்குக் கட்டுப்பட்டதுதானே சென்னை மாநகராட்சி?

    -என்வழி

  2. srikanth1974

    மாண்புமிகு; தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி.

  3. குமரன்

    அம்மா உணவகம்,
    அம்மா காய் கனி அங்காடி,
    அம்மா மருந்தகம்,
    அம்மா ஆட்சி,
    அம்மா திரையரங்கம்,
    அம்மா விதைப் பண்ணை

    விரைவில் எதிர்பாருங்கள்
    அம்மா பள்ளி
    அம்மா ஆஸ்பத்திரி
    அம்மா நீதிமன்றம்
    அம்மா சிறை (சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு வந்ததும் நடக்கலாம்!)
    அம்மா நாடு

    ஆனால்

    அம்மா மதுக்கடை வருமா?

  4. குமரன்

    ஒருவேளை அண்ணா திரையரங்கங்களைக் கட்டியது கருணாநிதி என்பது தெரிந்திருந்தால் அவற்றையும் ஆங்காங்கே மருத்துவ மனை ஆக்கி இருப்பாரோ?

  5. anbudan ravi

    என்னைப்பொருத்தவரை இது மிதமான சர்வாதிகாரத்துக்குள் மக்கள் சிக்கிக் கொள்கிறார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஒரு சிலருக்கு இந்த ‘அம்மா’ திட்டங்கள் நன்மை பயக்கலாம். ஆனால் மற்ற சிறு தொழில் அமைப்பாளர்கள் நசுக்கப்பட்டுவிட மாட்டார்களா? மக்களின் அடிப்படை தேவைகள் சரி செய்யப்பட்டுவிட்டதா? மழை நீரை சேகரிக்க ஏரிகள் அனைத்தும் தூர் வாரப்பட்டதா? மணல் கொள்ளை சரி செய்யப்பட்டு விட்டதா? இன்னும் கிராமங்களில் மின்சாரம் இன்றி தவிக்கிறார்களே அவர்களுக்கு பதில் என்ன? விடிவு காலமே வராதா என்ற ஆதங்கம் மேலோங்கி இருக்கிறது.

    அன்புடன் ரவி.

  6. மிஸ்டர் பாவலன்

    அம்மாவின் அதிரடி சாதனைகளைப் பாராட்டி வாழ்த்த வயதில்லை..
    அதனால் வணங்குகிறோம்!

    அடுத்த இருபது ஆண்டு கால அம்மா ஆட்சியில் மேலும் பல அதிரடி
    அம்மா திட்டங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்! நன்றி..

    -=== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *