BREAKING NEWS
Search

‘இல்லாத மின்சாரத்துக்கு மின்வெட்டு நேரமாம்… காமெடி பண்றாங்க!’

ஊரகப் பகுதிகளில் 4 மணிநேரம், புறநகரில் 2 மணி நேரம், தொழிற்சாலைகளுக்கு 1 நாள் மின் விடுமுறை!

சென்னை: வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 27 ) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 2 மணிநேரம் மின்தடை அமலுக்கு வருகிறது.

ஊரகப் பகுதிகளில் இது 4 மணி நேரமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான மின்தட்டுப்பாடு காரணமாக சென்னை தவிர மாநிலத்தின் பிறபகுதிகளில் கடந்த ஆண்டின் துவகத்திலிருந்தே மின்தடை நிலவி வருகிறது. மாநிலம் முழுக்க மின் தேவை 12500 மெவா ஆகவும், கிடைப்பது 8500 மெவா ஆகவும் உள்ளது.

இதனால் அதிமுக பதவிக்கு வந்தபோது 4 மணி நேரமாக இருந்த மின்தடை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது. மழைக்காலத்திலும் கடுமையாக மின்வெட்டு நிலவியது அநேகமாக இந்த ஆண்டாகத்தான் இருக்கும்.

கோவை, திருப்பூரில் 11 மணி நேரம் வரை மின்சாரமில்லாத நிலை நிலவுகிறது.

கிராமப்புறங்களின் இத்தகைய மின்தடை நேரத்தை குறைக்க, சென்னையிலும் மின்தடை அமலுக்கு வருவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பிப். 27 முதல் தினமும் 2 மணி நேரம் மின் தடையும்,  மார்ச் 1 முதல் தொழிற்சாலைகளுக்கு வாரத்துக்கு ஒருநாள் மின் விடுமுறையும் அமலுக்கு வருகின்றன. இதனால் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிப். 27 முதல் மின்தடை நேரம் ஓரளவு குறையலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த அறிவிப்பு கிராமப்புறங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை என்கிறார்கள். கரண்டே இல்லை என்றாகி, நாங்களும் மாற்று வழிகளில் இறங்கிவிட்டோம். ‘இல்லாத மின்சாரத்துக்கு மின்வெட்டு நேரம் அறிவித்திருப்பது காமெடியாக உள்ளது,’ என்பதுதான் வேலூர் பகுதி மக்களின் கமெண்டாக இருந்தது.

வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஏற்கெனவே 10 மணி நேரங்களுக்கு மேல் நிலவும் மின்வெட்டு, எந்த அளவு குறையும் என்று கணிக்க முடியாத நிலையே உள்ளது.

சென்னை மற்றும் சுற்றுப் புறப்பகுதிகளில் ஏற்கெனவே 3 மணி நேரத்துக்கும் மேலாகவே மின்வெட்டு உள்ளது. அதிகாரப்பூர்வமாக 1 மணி நேரம் என்றாலும், எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்படுவது 2 மணி நேரத்துக்கும் அதிகமாகவும் உள்ளது.
-என்வழி செய்திகள்




33 thoughts on “‘இல்லாத மின்சாரத்துக்கு மின்வெட்டு நேரமாம்… காமெடி பண்றாங்க!’

  1. குமரன்

    ///அதிகாரப்பூர்வமாக 1 மணி நேரம் என்றாலும், எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்படுவது 2 மணி நேரத்துக்கும் அதிகமாகவும் உள்ளது.///

    அறிவிக்கப்பட்டு நிறுத்துவதுதான் மின்வெட்டு ……

    அறிவ்க்காமல் நிறுத்தினால் அதன் பெயர் …. Maintenance …..

    கலைஞர் கருணாநிதியின் பிரபலமான வசன – உறுதிமொழி …
    ” நாங்கள் சொன்னதைச் செய்வோம் ….
    சொல்லாததையும் செய்வோம். …”

    திரைப் படங்களில் வரும் பன்ச் டயலாக் …..
    “நான் சொல்லி அடிப்பேன்……..
    சொல்லாமலும் அடிப்பேன் ……”

    இப்போது மின்வாரியத்தின் புதுமொழி ….
    “நாங்கள் அறிவித்து வெட்டுவோம் …..
    அறிவிக்காமலும் வெட்டுவோம் ……..”

  2. தினகர்

    ஆயிரம் தான் சொல்லுங்க.. கலைஞருக்கு இருக்கும் நிர்வாகத் திறமை இந்தம்மாவுக்கு கிடையாது.. அவர் வசனகர்த்தா என்றாலும் டைரக்க்ஷனிலும் திறமையானவர். இவங்க அடுத்தவங்க எழுதின வசனத்தை பேசுகிற வீராங்கனை மட்டும் தான்.

    எட்டு மாசமா உறுப்படியா ஏதாவது பண்ணியிருந்தா நிலமை இவ்வளவு மோசமாகாமலாவது பார்த்து இருக்கலாம். அப்புறம் எதுக்கு முதல்வர், அமைச்சர்கள் என்று நிர்வாகம் ?

    சில கேள்விகள்:

    – எட்டு மாதத்தில் யாருக்கு கூடுதல் மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

    – ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் செய்யப்பட்ட மின் உற்பத்தி ஏன் குறைந்துள்ளது

    – மூன்று மாசத்தில் மின் வெட்டை சீர்படுத்துவேன் என்று எந்த அடிப்படையில் தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்? எந்த தீர்வு திட்டமும் இல்லாமல் வாக்குறுதி கொடுப்பதும் ஒரு வகையில் ஃப்ராடு தானே?

    – தேர்தலுக்கு முன்னால் ‘மின்வெட்டு’ என்று கூக்குரலிட்ட அதிமுகவினர் அதிமுக அனுதாபிகள் எங்கே? பதில் சொல்லுங்கள்

  3. மிஸ்டர் பாவலன்

    எட்டு மாதத்தில் மின்சாரத்தை சரிசெய்ய முடியாத
    காரணங்கள் சில :

    1 ) கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்கள், மற்றும்
    நிர்வாகச் சீர்கேடு.

    2 ) முதல்வர் புதிய மின் நிலையம் துவங்க இருப்பது போல்
    எதையும் செய்யாதது. அடிக்கல் நாட்டி விட்டு அப்படியே
    விட்டு விட்டது.

    3 ) மத்திய அரசு போதிய மின்னுதவி, பிற நிதி ஒதுக்கீடு
    செய்யாதது. (கூட்டணிக் கட்சிகள், காங்கிரஸ் கட்சிகள்
    ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு தான் மத்திய அரசு
    பெரிதும் உதவி செய்வதாக மக்கள் எண்ணுகிறார்கள்).

    4 ) கூடங்குளம் மின் நிலையத்தைத் துவக்க விடாமல்
    குண்டர்களை வைத்து நிறுத்திய உதயகுமார் என்னும் ஆபத்தான
    NRI. மத்திய அரசு ஆரம்பத்திலேயே இவரை ஏதாவது
    குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து மின்நிலையத்தை
    துவக்காதது.

    ஆட்சி அனுபவம் கொண்ட முதல்வர் நல்ல திட்டங்களைத் தீட்டி
    தமிழகத்தில் மின்சாரத்த்தில் தன்னிறைவு கொண்ட மாநிலமாக
    மாற்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    -=== மிஸ்டர் பாவலன் ===-

  4. Ganesh Shankar

    /*ஆட்சி அனுபவம் கொண்ட முதல்வர் நல்ல திட்டங்களைத் தீட்டி
    தமிழகத்தில் மின்சாரத்த்தில் தன்னிறைவு கொண்ட மாநிலமாக
    மாற்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை.*/

    நூற்றுக்கு நூறு சரி.
    அடிக்கிய காரணங்கள் எல்லாம் சரியே.

    இன்னொரு விடயம் இதில் இருக்கிறது.
    இப்போது முதல்வர் அறிவித்திருக்கும் அனல் மின் நிலையத்துக்கு மத்திய சுற்று சூழல் சான்றிதழ் வேண்டும் என்று நினைக்கறேன்.
    அதற்கு தமிழக அரசு எடுத்து செல்லும் போது,கருணாநிதி கூட்டணியில் உள்ள இந்த மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்று நன்கு நாம் பார்க்க வேண்டும்.

    மேலும் இந்த திட்டம் முழுக்க முழுக்க தமிழக அரசால் நடத்தப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    இது எல்லாம் நமது தற்போதைய முதல்வர் இந்த விடயத்தில் காட்டும் அக்கறையை பிரதிபலிகிறது.

    மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்,சும்மா எப்போதும் குற்றம் சொல்லி கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது.

    என்ன சொல்கிறீர்கள் “-=== மிஸ்டர் பாவலன் ===” அவர்களே??

  5. நாகராஜன், சென்னை

    பாவலன் தி.மு.க., மத்திய அரசின் மீது முழுப் பழியையும்
    போட்டிருக்கிறார். தீவிர அ.தி.மு.க. விசுவாசி போல் அவர்
    வாதம் இருக்கிறது.

    180 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்ட உதயகுமார்
    மீது மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    வெறுமனே வழக்கு பதிவு செய்து வைத்தால் போதுமா?
    மற்றும் அவரின் ஆதரவாளர்களின் மேல் இதுவரை எந்த
    நடவடிக்கையையும் எடுக்காமல் மாநில அரசு அவர்களை
    கைது செய்யாமல் இருப்பதன் ரகசியம் என்ன? தங்களை
    யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற இறுமாப்புடன்
    கூடங்குளம் திட்டத்தை தொடர்ந்து எதிர்க்கும் இவர்கள்
    இப்போதோ பிரதமர் மீதே வழக்கு தொடுக்க
    முன்வந்திருக்கிறார்கள். தமிழக அரசுக்கு மக்கள் மேல்
    உண்மையான அக்கறையும் தொழில் துறை
    வளரவேண்டுமென்ற நல்லெண்ணமும் இருந்தால்
    அணுஉலை எதிர்ப்பாளர்களை கைது செய்து
    கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்பட வழி
    செய்ய வேண்டும்.

    -நாகராஜன், சென்னை

  6. தினகர்

    எட்டு மாதத்தில் நிலைமை சீராகவில்லையென்றாலும் இருந்தது ஏன் மோசமானது.. இருப்பதை நிர்வகிக்க தெரியாத இயலாமை தானே..

    கடந்த ஆட்சியில் நிர்வாக சீர்கேடு, ஊழல் என்றே வைத்துக்கொண்டால் கூட, அவர்கள் ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு இன்றைக்கு போல் மோசமாக இல்லையே.

    அன்று இரண்டு மணி நேரம், மூன்று மணி நேர மின் தடைக்கு கூப்பாடு போட்டால், இன்றைய 12 மணி நேர மின் தடைக்கு என்ன செய்ய வேண்டும்.

    மின் தடைக்கு முக்கிய காரணமே அம்மையாரின் பத்தாண்டு ஆட்சியில் உருப்படியான நீண்ட கால திட்டம் ஏதும் போடாதது தான். கலைஞர் திட்டம் போடுவதும் அம்மையார் திறப்பதுவும் தான் நடந்து வந்துள்ளது, இப்போதும் கலைஞர் போட்ட திட்டங்கள் நிறைவேறும் நாளைத்தான் அம்மையார் எதிர்பார்த்துக்கொண்டுள்ளார். அடுத்து வரும் ஆண்டுகளுக்காக எந்த புதிய திட்டமும் இது வரை இல்லை.. மின்வெட்டுக்கு மொத்த காரணமும் அம்மையாரின் திறமையின்மை தான்..

  7. தினகர்

    ” உதயகுமார் என்னும் ஆபத்தான NRI.”

    அது ஏன் NRI.. உங்களுக்கு தேவை என்றால் ஆபத்தானவர் என்று சொல்லுங்களேன். NRI என்றால் என்ன தேச விரோதிகளா? மேலும் இவர் NRI என்று எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள். அவர் பத்து வருடமாக இந்த போராட்டத்தில் அதே ஊரில் இருந்து கொண்டு போராடுகிறார். அப்படி இருக்கையில் எப்படி NRI ஆக இருக்கமுடியும். NRI என்பவர் யார்?. இந்தியகுடிமகனான ஒருவர், ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு மேல் வெளி நாட்டில் வசிப்பவர் தான் NRI ? சும்மாங்காட்டியும் ஏதோ NRI கள் என்றால் தீவிரவாதி என்ற ரீதியில் விமர்சிப்பது நல்லதல்ல.. NRI களால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு வரும் அன்னியசெலாவணியின் தொகையை கணக்கிட்டு பார்த்து விட்டு NRI கள் பற்றி பேசவேண்டும். இந்தியாவில் வசிப்பவர்க்ளை விட தாய் நாட்டின் மீது அதிக பற்றுள்ளவர்கள் NRI கள்

  8. மிஸ்டர் பாவலன்

    ///இப்போது முதல்வர் அறிவித்திருக்கும் அனல்
    மின் நிலையத்துக்கு மத்திய சுற்று சூழல் சான்றிதழ்
    வேண்டும் என்று நினைக்கறேன். அதற்கு தமிழக அரசு
    எடுத்து செல்லும் போது,கருணாநிதி கூட்டணியில்
    உள்ள இந்த மத்திய அரசு என்ன செய்ய போகிறது
    என்று நன்கு நாம் பார்க்க வேண்டும்.///

    கூடங்குளத்தில் உள்ள அணு மின் நிலையத் திட்டம்
    தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
    இதில் வரும் மின்சாரம் 50 % தான் தமிழகத்திற்கு.
    மற்றவை பிற மாநிலங்களுக்கு. (நெய்வேலியிலும் இதே
    நிலை தான்! இதுவும் மத்திய அரசால் நடத்தப் படுகிறது).
    பிற மாநிலங்களில் மத்திய அரசால் நடத்தப்படும்
    திட்டங்கள் 100 % அந்த மாநிலங்களையே சேருகின்றன.

    இந்த நிலையில் முதல்வர் வேற இடத்தில் அறிவித்திருக்கும்
    புதிய மின் நிலையத்தில் 100 % மின் உற்பத்தி அனைத்தும்
    தமிழக மக்களையே சேரும் என்றால் இதற்கு எல்லாக் கட்சிகளும்
    ஒத்துழைக்க வேண்டும். பிற நாடுகளில் கட்சி வேறுபாடு
    தாண்டி நாட்டுப் பற்றும், மாநிலப் பற்றும் இருக்கின்றன.
    ஆனால தமிழகத்தைப் பொறுத்த வரை vote bank politics
    என இருப்பதால் தமிழக முன்னேற்றத்தை விட தனது
    குடும்ப முன்னேற்றத்தையே (இவர்கள் கட்சியையும்,
    குடும்பத்தையும் பிரித்துப் பார்ப்பதில்லை) பார்ப்பதால்
    என்ன நிலை, எவ்வாறு எடுப்பார்கள் என்பதை நாம்
    இன்றே அனுமானிக்க முடியாது. தமிழக அரசியல்வாதிகள்
    மாபெரும் அரசியல் சாணக்கியர்கள்.

    -===== மிஸ்டர் பாவலன் =====-

  9. palPalani

    கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கினால் இப்போதைய தேவையின் அளவைகுரைக்கலாம், அவ்வளவே!

    –௦–

    ஒருவேள, திரு. இதயகுமார் போன்றவர்கள் பணம் வாங்கிகொண்டு போராடுகிறார் என்றால், பணம் கொடுப்பவர்களின் நோக்கம் என்னவாக இருக்கமுடியும்? இந்திய அணு ஆராய்ச்சில் தன்னிறைவு அடைந்துவிடக்கூடாது என்பதேயாகும் அல்லது ரஷ்யாவோடு சேர்ந்து இந்த திட்டத்தை செய்யக்கூடாது என்பதேயாகும். அப்படி பார்த்தால், அவர்கள் இந்த மாதிரி எத்தனையோ உதயகுமார்களை அவர்களால் உருவாக்க முடியும். ஆனால் இங்கு ஒரு உதயகுமாரை எதிர்க்க மத்திய, மாநில அரசுகளுக்கு திராணி இல்லையே?

    அப்படியில்லாமல் திராணி இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்க எது அல்லது யார் தடையாக இருக்கிறார்கள்? மக்களை மதிக்கிரோம்ன்னு பொய் சொல்லாதீங்க!

  10. Ganesh Shankar

    //*இந்த நிலையில் முதல்வர் வேற இடத்தில் அறிவித்திருக்கும்
    புதிய மின் நிலையத்தில் 100 % மின் உற்பத்தி அனைத்தும்
    தமிழக மக்களையே சேரும் என்றால் இதற்கு எல்லாக் கட்சிகளும்
    ஒத்துழைக்க வேண்டும். பிற நாடுகளில் கட்சி வேறுபாடு
    தாண்டி நாட்டுப் பற்றும், மாநிலப் பற்றும் இருக்கின்றன.
    ஆனால தமிழகத்தைப் பொறுத்த வரை vote bank politics
    என இருப்பதால் தமிழக முன்னேற்றத்தை விட தனது
    குடும்ப முன்னேற்றத்தையே (இவர்கள் கட்சியையும்,
    குடும்பத்தையும் பிரித்துப் பார்ப்பதில்லை) பார்ப்பதால்
    என்ன நிலை, எவ்வாறு எடுப்பார்கள் என்பதை நாம்
    இன்றே அனுமானிக்க முடியாது. தமிழக அரசியல்வாதிகள்
    மாபெரும் அரசியல் சாணக்கியர்கள். *//

    இதை தான் நானும் சொல்ல வந்திருக்கிறேன்,இவ்வளவு விரிவாக இல்லாமல்.

    இந்த காரணங்களெல்லாம் இருப்பதனால், நாம் அதை உற்று நோக்க வேண்டும் என்று தான் கூறி இருக்கிறேன்.பார்போம்,என்ன நடக்கிறது என்று.

  11. Kumar

    என்பா தினகரு கலைஞரோட நிர்வாக திறமையை கட்சி போதுகுழுவுல காட்ட வேண்டியது தான.அங்கேயே ஒன்னும் நடகலயம் இவரு நாட்டை நிர்வாகம் பண்ண போறாரா?.இவரு பண்ண நிர்வாக திறமையால் ஒரு லக்ஷம் பேரு இலங்கையில் இறந்துட்டாங்க.இந்த லக்ஷணம் போறதா?

  12. தினகர்

    “இந்த நிலையில் முதல்வர் வேற இடத்தில் அறிவித்திருக்கும்
    புதிய மின் நிலையத்தில் 100 % மின் உற்பத்தி அனைத்தும்
    தமிழக மக்களையே சேரும் என்றால்”

    மின்பகிர்மானம் குறித்தோ, மின் திட்டங்கள் நிறைவேற ஆகும் காலம் குறித்தோ சற்று சிந்தித்து பாருங்கள்.

    மாநில அரசு திட்ட உற்பத்தி முழுவதும் தமிழகத்திற்குத்தான். மத்திய அரசு திட்டத்தில் தான் சதவீத அடிப்படை.

    அம்மா புதிய திட்டம் போட்டுத்தான் மின்சாரம் என்றால் அடுத்து அமையும் ஆட்சி காலத்தில் தான் தமிழகம் ஒளிரும், எந்த மின்வெட்டை காட்டி ஆட்சியை பிடித்தாரோ, அதே மின்வெட்டிற்கு ஆட்சியை இழப்பார்.

  13. குமரன்

    உதயகுமார் என்ற ஆபத்தான NRI என்று சொன்னால் எல்லா NRI களையும் குறை சொல்வதாக ஆகாது. “உதயகுமார் என்ற ஆபத்தான என்.ஆர்.ஐ” என்று சொல்லும்போதே அவரைத் தவிர மற்றவர்கள் ஆபத்திலாதவர்கள் என்று ஆகிறது. எனவே இது குறித்து தினகர் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.

    இன்று தொலைக்காட்சியில் திரு என்.ஆர்.நாராயணமூர்த்தியின் கருத்தை (channel surfing செய்யும்போது) பார்த்தேன். அவர் ” நான் பார்த்தவரையில் இந்தியாவின் மீது தேசப்பற்றில்லாத ஒரு என்.ஆர்.ஐ கூடக் கிடையாது” என்று சொன்னார். நானும் அதே கருத்தைக் கொண்டிருக்கிறேன். தேசம் கடந்து பல ஆயிரம் மெயில் தூரம் கடந்து சென்றவர்களுக்கு, தாம் பிறந்த மண் மீது அளப்பரிய பாசம் வருவது இயல்பே.

  14. குமரன்

    ஜெயாவின் ஆட்சிக் காலத்தில்தான் தமிழக காற்றாலை மின்சக்திக்கான அடித்தளம் இடப்பட்டது என்பது உண்மை.

    ஆனால் அவர் உதயகுமாரை எதற்காக இப்படி மறைமுக ஆதரவு தருகிறார் என்பது விளங்க வில்லை. புரியாத புதிராகவே இருக்கிறது.

    உதயகுமார் என்.ஜி.ஒக்களுக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணத்தைப் போராட்டத்துக்காக பயன்படுத்தியது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. மத்திய அரசு மூன்று என்.ஜி.ஓக்களின் லைசென்சை ரத்து செய்து விட்டது. உதயகுமாரின் வழக்கு மிரட்டலைச் சந்திக்கத் தயார் என்று பிரதமரின் அலுவலகமே அறிவித்து விட்டது. இத்தனை தூரம் பிரதர் அலுவலகமே வெளிப்படையாக அறிவிப்பை வெளியிட்டிருப்பது உதயகுமாரின் பக்கம் தவறும் முறைகேடும் ஊழலும் இருப்பதை உறுதிப் படுத்துகிறது.

    இத்தனை இருந்தும் ஜெயா ஏதோ இவை அனைத்தும் தமிழ்நாட்டில் நடக்காதது போல வாய் மூடி அமைதியாக, ராவணன், திவாகரன், நடராஜன் ஆகியோரின் பிணை மனுக்களை நீதிமன்றம் நிராகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று வழக்கறிஞரோடு விவாதித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அவரது கடந்த இருபதாண்டுகால “வினைப்பயன்” துரத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டை எத்தனைக் கால வினைப்பயனோ, கருணாநிதி மாற்றி ஜெயலலிதா, ஜெயலலிதா மாற்றி கருணாநிதி என்று வினைப்பயன் “விடாது கருப்பு” ரேஞ்சுக்குப் புரட்டி எடுக்கிறது. இவர்கள் இருவரும் அரசியலை விட்டு விலகினால்தான் தமிழ்நாட்டுக்கு ஒளி பிறக்கும்.

  15. குமரன்

    ஜெயா சென்ற ஆட்சிக்காலத்தில் சென்னையில் “கட்டடம் தோறும் மழை நீர் சேகரிப்பு” என்ற சிறந்த திட்டத்தைக் கொண்டுவந்தார்.

    இதன் பலனை கடந்த சில ஆண்டுகளாக சென்னை மாநகரம் நன்கு அனுபவித்து வருகிறது. லாரிகளில் நீர் கொண்டு சப்ளை செய்த காலம் மலையேறிவிட்டது. வேனிற் காலத்தில் கூட தரை நீர் கிடைத்ததால் வெளியிலிருந்து நீர் கொண்டுவரத் தேவை எழவில்லை.

    இதுபோலவே, கட்டடம் தோறும் சோலார் மின்வசதிக்கான திட்டத்தை அவர் அறிமுகம் செய்து கொண்டுவரவேண்டும், புதியதாக ஒரு மின் நிலையத்தை நிறுவுவதை விட, எல்லாக் கட்டடங்களிலும் சோலார் பேணல் அமைக்க அரசு ஊக்கத் தொகை அளித்து அல்லது பேனலின் விலையைத் தமிழகத்தில் குறைத்து வழங்க அதன் உற்பத்தியாளருக்கு நேரடியாக மான்யம்/ வரிச் சலுகை அளித்து வழிவகை செய்ய வேண்டும்.

    இத்திட்டத்தை முதல் தவணையாக எல்லா மாநகராட்சிகளிலும், பின்னர் எல்லா முதல் நிலை நகராட்சிகளுக்கும் விரிவு படுத்தலாம். இதன் மூலம் காலத்துக்கும் domestic consumption என்ற வகையில் மின் பகிர்மானம் குறையும், அரசிடம் இருக்கும் மின்சாரம் தோழிகளுக்கு அதிக அளவில் கிடைக்கும். இது நிரந்தரத் தீர்வாக அமையும்.

  16. குமரன்

    ///தோழிகளுக்கு///

    “தொழில்களுக்கு” என்று படிக்கவும். பிழை பொறுக்கவும்.

    “அவருக்கு இப்போது ஒரு தோழி கூட இல்லையே!”

  17. மிஸ்டர் பாவலன்

    ///ஆனால் அவர் உதயகுமாரை எதற்காக இப்படி
    மறைமுக ஆதரவு தருகிறார் என்பது விளங்க வில்லை.
    புரியாத புதிராகவே இருக்கிறது. //// (குமரன்)

    “மறைமுக ஆதரவு” என நீங்கள் சொல்வது ஏற்றுக்
    கொள்ள முடியவில்லை. நேற்று நான் தொலைக்காட்சியில்
    உதயகுமாரன் பேட்டியைப் பார்த்த போது “மாற்று சக்திகளில்
    தான் மின்சாரம் தயாரிக்க வேண்டும், எங்கள் போராட்டத்திற்கு
    தமிழக அரசின் முழு ஆதரவு இருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
    உதயகுமாரன் பேட்டியின் அடிப்படையில் பார்த்தால் இது
    “நேர்முக ஆதரவு” போலத் தான் தெரிகிறது! தமிழக முதல்வர்
    இந்த உதயகுமாரன் ஆதரவை விட்டு விட்டு மத்திய அரசிற்கு
    முழு ஒத்துழைப்புக் கொடுத்தால் நல்லது. அப்படி அவர்
    சப்போர்ட் கொடுப்பது அவரது புதிய மின் நிலையத் திட்டத்திற்கு
    நண்பர் சொன்னது போல் மத்திய அரசின் சுற்றுப் புறச் சூழல்
    certificate வாங்க வேண்டும். இந்த மினிஸ்ட்ரி ஜெயந்தி நடராஜன்
    கையில் இருக்கிறது (நண்பர் கவனிக்கவும் – இவர் தமிழக காங்கிரஸ்
    MP. இவருக்கும் ப. சிதம்பரத்திற்கும் நல்ல நட்பு உண்டு.) அதனால்
    ஒரு நல்லது செய்தால் அது chain reaction போல் பல நல்லதைத்
    துவக்கும். நண்பர்களே – கட்சி வேறுபாடு தாண்டி நாம் தமிழக
    வளர்ச்சியை நோக்குவோம். நல்லதை பாராட்டுவோம்.

    குமரனின் NRI பற்றிய விளக்கம் மிக அருமை. அதற்கும் நன்றி.

    -==== மிஸ்டர் பாவலன் ===

  18. தினகர்

    எப்படி மதுரைக்காரர்கள், சென்னைவாசிகள் என்று குறிப்பிடுகிறோமோ அதைப்போல் NRI என்பது வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை குறிப்பிடும் அடையாளப்பெயர் ஆகிவிட்டது.

    “இவர் ஆபத்தான மதுரைக்காரர்” அல்லது சென்னைக்காரர் என்று யாரையாவது குறிப்பிடுவீர்களா?..

    உதயகுமாருக்கு ஆதரவாக, எதிர்ப்பாக என்று இருவிதமாக மக்கள் கருத்துக்கள் இருக்கிறது.. அவரை ஆதரிப்பவர்கள் ஆதரிக்கட்டும் எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்டும். சட்டமும் தன் கடமையை செய்யட்டும். ஆனால் தேவையில்லாமல் NRI என்று இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லையே.

  19. தினகர்

    “இவரு பண்ண நிர்வாக திறமையால் ஒரு லக்ஷம் பேரு இலங்கையில் இறந்துட்டாங்க.இந்த லக்ஷணம் போறதா ”

    நீங்கள் எல்லாம் ஒட்டுப்போட்டு கலைஞரை இலங்கைக்கு பிரதமராக தேர்ந்தெடுத்தீர்களா நண்பரே. அவர் தமிழகத்துக்குத்தானே முதல்வராக இருந்தார். இங்கு தானே நிர்வாகம் செய்தார். அவர் ஆட்சியில் மின்சார நிலைமை இன்று இருப்பதை விட நன்றாகத்தானே இருந்தது. அம்மாவின் நிர்வாக குறையை ஏற்றுக்கொள்ளமுடியாமல், சாக்கு போக்கு சொல்ல வழி தெரியாமல், சம்மந்தம் இல்லாத ஏதேதோ விஷயத்தை சொல்ல வந்து விட்டீர்கள். மின் தட்டுப்பாட்டிற்கு ஒட்டு மொத்த காரணம், அம்மையாரின் பத்தாண்டு கால ஆட்சியில் நீண்ட கால திட்டம் போடாதது தான்.

    போர் என்றால் அப்பாவி மக்கள் சாவது சகஜம் தான் என்று முழங்கியவர் தான் இன்றைய முதல்வர் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

  20. Kumar

    why kalaignar has not withdrawn support to the indian govt when SL war was going on.The main reason is to save all the business run by his family memebrs and her daughter.So his goveranance is only to safe guard his family not the people.we also asking the same if kalaignar has done good governance why he hsa not put long term plan for electricity?.

  21. மிஸ்டர் பாவலன்

    ///NRI என்பது வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை குறிப்பிடும் அடையாளப்பெயர் ஆகிவிட்டது.///

    NRI = Non-Resident Indians.

    தமிழில் மொழிபெயர்த்தால்
    “வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்”

    -=== மிஸ்டர் பாவலன் ===

  22. மிஸ்டர் பாவலன்

    ///எந்த மின்வெட்டை காட்டி ஆட்சியை பிடித்தாரோ,
    அதே மின்வெட்டிற்கு ஆட்சியை இழப்பார்./// (தினகர்)

    DMK கட்சி ஆட்சிக்கு வருவதற்கு என்ன அஸ்திரத்தை
    எடுத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு மாண்புமிகு
    தமிழக முதல்வர் நல்ல திட்டங்களை நிறைவேற்றி
    மின்வெட்டு இடரை அகற்ற வேண்டும்.

    பிரதமர் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி உதவி Planning Commission-ல்
    உதுக்கித் தர வேண்டும். தமிழகத்தில் பல தொழில் வாய்ப்புகள்
    இருப்பதால் மக்கள் நலனையும், தொழில் வள நலன்களையும்
    மாநில, மத்திய அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும்.

    -=== மிஸ்டர் பாவலன் ===

  23. தினகர்

    தமிழில் மொழிபெயர்த்தால் “வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்” – நல்லது பாவலன். இவ்வளவு தெளிவாக அர்த்தம் புரிந்த நீங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு நபரை வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர் என்று எந்த அடிப்படையில் சொன்னீர்கள். அது தேவையான அடையாளக்குறியீடு தானா?

  24. தினகர்

    Mr.Kumar, If Kalaignar has not implemented any power projects during his 5 times rule, Tamil Nadu will be in total darkness. All the big and major power projects in Tamil Nadu are initiated and implemented by him. Your madam did not initiate a single long term project during her 0 years of her rule. You may refer Election time postings, campaign advertisements for list of Power Projects implemented by Kalaignar

  25. தினகர்

    “பிரதமர் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி உதவி Planning Commission-ல்
    உதுக்கித் தர வேண்டும்”

    திமுக ஆட்சி காலத்தை விட அதிகபட்ச நிதி ஒதுக்கீடு பெற்று வந்த அம்மையார், மத்திய திட்ட நிதி ஒதுக்கீடு தனக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக பேட்டி கொடுத்திருந்தார்.

  26. மிஸ்டர் பாவலன்

    மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதோடு அந்த
    நிதி நேரத்திற்கு மாநிலங்களுக்கு வழங்கவும்
    வேண்டும். இதைப் பற்றிய வெள்ளை அறிக்கையை
    தமிழக நிதி மந்திரி தான் தர வேண்டும். (ஏகப் பற்ற
    மாற்றங்கள் நடந்ததில் யாருக்கு என்ன துறைன்னு
    தெரியலை. ஹி.. ஹி.. ஹி.. )

    இன்று சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர்
    சந்திப்பில் பெரும் மதிப்பிற்குரிய ஜனதா பார்ட்டி
    தலைவர் மாண்புமிகு சுப்பிரமணியன் சுவாமி
    அவர்கள் உதயகுமாரன் பற்றி சொன்னது:
    “கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான
    போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு வெளிநாட்டு
    சக்திகள் நிதி உதவி அளிப்பதாக நான் ஏற்கனவே
    கூறி இருந்தேன். பிரதமர் மன்மோகன் சிங்கும்
    அதே கருத்தை தற்போது கூறியுள்ளார்.
    உதயகுமார் உள்பட எதிர்ப்பாளர்களை
    தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ”

    -=== மிஸ்டர் பாவலன் ====-

  27. Kumar

    என்பா தினகரு அப்ப கலைஞர் போஸ்டர்ல போட்டதெல்லாம் உண்மையின மக்கள் அவருக்கு ஏன் வோடே போடலே.நீங்க வேணா நம்பலாம்.மக்கள் ரொம்ப உஷாருப்பா.எல்லாத்தையும் நம்ப மாட்டாங்க?

  28. தினகர்

    “அப்ப கலைஞர் போஸ்டர்ல போட்டதெல்லாம் உண்மையின மக்கள் அவருக்கு ஏன் வோடே போடலே.நீங்க வேணா நம்பலாம்.மக்கள் ரொம்ப உஷாருப்பா.எல்லாத்தையும் நம்ப மாட்டாங்க? ”

    எல்லாரும் உங்களை மாதிரி நினைச்சு ஒட்டை மாத்தி போட்டுருப்பாங்க. மக்களில் ஒருவரான நீங்க ‘ அம்மா தான்’ எல்லாம் போட்டாங்கன்னு நம்பும்போது மத்தவங்க நம்ப மாட்டாங்களா என்ன?. அதுக்காக உண்மை மாறிவிடுமா?

    எதுக்கெடுத்தாலும் வழக்கு போடுற உங்க அம்மா’ அவருடைய் லிஸ்டை எதிர்த்து வழக்கு போட்டிருக்கலாமே. அவர் சொன்னதெல்லாம் பொய் என்றால் ஒரு ‘பொய் வழக்காவது’ போட்டிருக்கலாமே.. தன்னுடைய ஆட்சியில் எந்த மின் திட்டமும் போடவில்லை என்ற உண்மை ‘ஷாக்’ அடிக்கிறது போலும்

    அப்படியும் உங்களுக்கு சந்தேகம் தீரல்லைன்னா. மின்சார வாரியத்திற்கு ஒரு ‘Right of information ‘ அப்ளிகேஷன் போட்டு எந்த மின் திட்டம் யார் ஆட்சியில் போடப்பட்டது என்று சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளுங்கள் அண்ணே. அப்படியே என்வழியிலும் அதை பப்ளிஷ் பண்ணுங்கள் எல்லாரும் தெளிவடையட்டும் சும்மா விதண்டா வாதம் வேண்டாம்.

  29. தினகர்

    (ஏகப் பற்றமாற்றங்கள் நடந்ததில் யாருக்கு என்ன துறைன்னு
    தெரியலை. ஹி.. ஹி.. ஹி.. )

    உண்மையை உலகிற்கு எடுத்துரைத்ததற்கு நன்றி

    யாருக்கு என்ன துறைன்னே குழப்பம் இருந்தா, நடக்கிற ஆட்சியின் லட்சணத்தை சொல்ல வேண்டுமா?. இப்படி ஆட்சி நடந்தா மின்சாரம், போக்குவரத்து, குடி நீர் என்று அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் மக்கள் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்படும்

  30. ராம்ஸ்

    சில லட்ச வாக்குகள்தான் இந்த முறை ஆட்சியை மாற்றின. பல தொகுதிகளில் 100, 2000, 3000 வாக்குகளில் திமுக தோத்திருக்கு. அப்படின்னா என்ன அர்த்தம். திமுக மோசம்னு நினைச்சிருந்தா இவ்வளவு ஓட்டு கிடைச்சிருக்குமா? இது தமிழ்நாட்டு தேர்தல், இலங்கைக்கான தேர்தல் அல்ல. சம்பந்தமில்லாமல் எதற்கு கருணாநிதி மீது வஞ்சத்தை துப்புகிறீர்கள் குமார்?

  31. மிஸ்டர் பாவலன்

    புதிய செய்தி:

    -=== CNN – IBN News ====-

    Chennai: A German national has been deported for allegedly
    raising funds for those protesting against the Kudankulam
    nuclear plant in Tamil Nadu. The police said that
    Sonnteg Reiner Hermann, the German national,
    had close links to PS Udayakumar, who is spearheading the protests.

    -== மிஸ்டர் பாவலன் ===-

  32. மிஸ்டர் பாவலன்

    ///யாருக்கு என்ன துறைன்னே குழப்பம் இருந்தா, நடக்கிற ஆட்சியின் லட்சணத்தை சொல்ல வேண்டுமா?.////

    ஹா.. ஹா.. ஹா.. உண்மை. யார் யார் என்ன துறைன்னு முதலில்
    அந்தந்த அமைச்சர்களுக்குத் தெரிஞ்சா தேவலை! இந்த அளவிற்கு
    மாநில அமைச்சர்கள் மாற்றம் ஒரு ஆட்சியில் (எட்டு மாதத்தில்)
    நான் பார்த்ததில்லை. துக்ளக் தர்பார் போல் உள்ளது 🙂

    ////இப்படி ஆட்சி நடந்தா மின்சாரம், போக்குவரத்து, குடி நீர் என்று அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் மக்கள் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்படும்////

    கே. ஜே. யேசுதாஸ் “நல்லதை நினை மனமே! வீணாய் பொல்லாததை
    நினையாதே!” எனக் கச்சேரிகளில் ஒரு நல்ல பாடல் பாடி முடிப்பார்.
    “வோட்டுப் போட்டு விட்டாம். அம்மா ஏதாவது நல்லது பண்ணுவார்!”
    என தமிழக மக்கள் நினைக்கிறோம்.

    -=== மிஸ்டர் பாவலன் ===-

  33. தினகர்

    “வோட்டுப் போட்டு விட்டாம். அம்மா ஏதாவது நல்லது பண்ணுவார்!”

    நல்லது செய்தால் நல்லவர்களின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *