BREAKING NEWS
Search

‘இந்த நாடும் நாட்டு மக்களும் எப்படியோ போகட்டும்… நீங்க மட்டும் நல்லாருங்க!’

நடப்பது துக்ளக் ஆட்சி… அதுக்கு சோ ஆசி!

 

து புதிய படமல்ல… சில மாதங்களுக்கு முன்பு வெளியான புகைப்படம்.  வேதா இல்லத்தின் கதை இலாகா தலைவரான சோவும் அவர் மனைவியும் ஜெயலலிதாவை ஆசீர்வதிக்கிறார்கள்.

‘நீங்க நல்லா இருக்கணும், இந்த நாடு உருப்படாம போகணும்… அதுக்கு உங்க தலைமையில ஒரு ஆட்சி மலரணும்!’ என்று வாழ்த்தியிருப்பாரோ!

குறிப்பு: நடராஜன் கைது, சசி அழுகை நாடகங்களுக்கும் இந்த படத்துக்கும் சம்பந்தமில்லீங்கோவ்!

-என்வழி
10 thoughts on “‘இந்த நாடும் நாட்டு மக்களும் எப்படியோ போகட்டும்… நீங்க மட்டும் நல்லாருங்க!’

 1. குமரன்

  முன்னர் பார்த்தபோதே இந்தத் தலைப்பை நினைத்தேன்.

  ஜெயா தனது தலையைத் தாழ்த்தி வணங்கிய ஒரே நபர் சோவாகத்தான் இருக்கும்.

  சோ என் இப்படி ஜெயாவுக்கு ஓவராக ஜால்ரா போடுகிறார் என்று யோசித்தேன்.

  சோவின் ஒரு நாடகம் “உண்மையே உன் விலை என்ன?”
  அதில் வரும் ஒரு பணக்காரர்/வில்லன் சொல்வார்,
  “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விலை உண்டு”.

  ஜெயாவும் இந்தத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர். அவரது அரசியல் நடவடிக்கைகளில் கூட்டணி ஏற்படுத்தும்போதும், தனது கட்சியினரை நடத்தும் விதத்திலும் இதனை உணரலாம்.

  நான் யோசிப்பதுண்டு, “ஜெயா சோவுக்கு என்ன விலை கொடுக்கிறார்?”

  ஜெயா சோவுக்குக் கொடுக்கும் விலை “இந்தக் கூழைக் கும்பிடு”
  ஜெயாவின் கட்சியினர் அவருக்குப் போடும் கூழைக் கும்பிடை ஜெயா சோவுக்குப் போடுகிறார்.

 2. குமரன்

  சோவின் இடக் கரத்தில் இருப்பது என்ன ?

  நிச்சயமாக அட்சதை அல்ல.

  ஏதாவது நகைப் பை?

  சோ வழக்கமாகத் தருவது நகைப்பை –
  அவர் கையிலுமா நகைப்பை?

 3. தேவன்

  வினோ

  சஷ்டியப்த பூர்ர்த்தி என்றால் அறுபது ஆண்டு நிறைவு.. சில மாதங்களுக்கு முன் தான் சோவுக்கு அறுபது நிறைந்தது என்கிரிரீர்களா…சோவுக்கு எழுபத்தைந்துக்கு மேல் வயதிருக்கும்..

  தேவன்
  ______________

  உண்மைதான். மாற்றியிருக்கிறேன்.
  -வினோ

 4. Raghavan

  கதைஅடிக்க அளவே இல்லையா.. இது ஜெயலலிதா அவர்களின் சஷ்டியப்த பூர்த்தியன்று (4 வருடம் முன்பு) எடுத்தது.. ஜெயலலிதா மேலும் இருவரிடமும் ஆசி வாங்கிய போட்டோ விகடனில் வந்தது, திரு. நம்பியார், திரு.டி.எம்.எஸ் அவர்களிடம் கூட..

 5. Ganesh Shankar

  இதே சோ அவர்கள் 1996 இல் கருணாநிதிக்கு ஆதரவாக ஆட்சி அமைத்து கொடுத்தார். அன்று அது தேவை பட்டது.இன்று நிலைமை தலை கீழ் அவ்வளவு தான்.

  /*‘நீங்க நல்லா இருக்கணும், இந்த நாடு உருப்படாம போகணும்… அதுக்கு உங்க தலைமையில ஒரு ஆட்சி மலரணும்!’ என்று வாழ்த்தியிருப்பாரோ!*/

  இருந்த சூழ்நிலையில்,ஒன்று கருணாநிதி ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும்,இல்லையேல் இவர்கள் வந்திருக்க வேண்டும்.கருணாநிதி என்ன செய்தார் என்று பார்த்தோம்,சரி இல்லை என்றல் மாற்று இவர்கள் தான்.இதற்கு சில அதிகபடியான வேலைகள் தேவை பட்டன,அதனை சோ அவர்கள் செய்தார் என்று நம்புகிறோம,அவளவு தான்.

  இந்த ஆட்சியில் மக்கள் எப்டியாவது போனால் போகட்டும் என்று ஒன்றும் ஜெயலலிதா ஆட்சி செய்யவில்லை.
  எவ்வாறு அப்படி சொல்கிறீர்கள் என்று தான் புரியவில்லை.

  காரணமும்,உதாரணமும்,தகவலும் இல்லாமல் சொல்லுவதை எல்லாம் யார் நம்புவது??

  இவ்வளவு ஏன்?? மக்களே அவருக்கு தானே வோட்டு போட்டார்கள்,அப்ப மக்களையும் சேர்த்து என்வழி குற்றம் சொல்லுகிறதா??

  இன்னொன்று,அவர் அவருக்கு வாழ்த்து சொல்லுவதால் ஏதோ அவருக்கு தான் எப்போதும் சோ ஆதரவு என்று நினைத்துவிட வேண்டாம்.ஜெயலலிதா தவறு செய்தாலும்,தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும்,சோ அவர்கள் எதிர்த்து பேசுவார்.அதை துக்ளக்கை படித்தால் புரியும்.

  குறிப்பாக அண்ணா நூலக மாற்றம,சட்டசபை நடத்தைகள்,கூடங்குளம் விவரத்தில் எல்லாம் அவர் ஜெயலலிதாவின் கருது எதிர்த்து தான் எழுதிக்கொண்டு இருக்கிறார்.

  இங்கே என்வழி சொல்வதை பார்த்தால்,கருணாநிதி ஆட்சி மலர்ந்து இருக்க வேண்டும் போல்.அப்போது மக்கள் சொல்லி இருப்பார்கள் என்வழியை பார்த்து இதே கருத்தை.

 6. மிஸ்டர் பாவலன்

  //ஜெயலலிதா தவறு செய்தாலும்,தனக்கு உடன்பாடு இல்லை
  என்றாலும்,சோ அவர்கள் எதிர்த்து பேசுவார்.அதை துக்ளக்கை
  படித்தால் புரியும்.// (கணேஷ் ஷங்கர்)

  நீங்கள் சொல்றபடி பார்த்தால், சோவும் ஒரு நடுநிலையாளர்
  போலத் தெரிகிறதே!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 7. குமரன்

  தமிழக அரசியலில் ராஜாஜி, சோ, கருணாநிதி ஆகியோர் “சிறப்பாகப்” பேசப் படுகிறார்கள்.

  ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரோ, பக்தவத்சலமோ, காமராஜரோ, எம்.ஜி.ஆரோ, அண்ணாத்துரையோ அரசியல் செய்த விதம் வேறு.

  ராஜாஜி, கருணாநிதி, சோ ஆகியோர் அரசியல் செய்த/ செய்யும் விதம் வேறு. இந்த மூவரும் சூழ்ச்சிகளில் தேர்ந்தவர்கள்.

  ராஜாஜி தான் முதல்வராக வேண்டும் என்பதற்காகச் செய்ததை விட, இன்னார் (சத்திய மூர்த்தி, காமராஜர், 1967 இல் மீண்டும் காங்கிரஸ்) முதல்வர் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவர் சத்திய மூர்த்தி முதல்வர் ஆகாமலும், ௧௯௬௭ இல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராமலும் தடுத்தார். காமராஜர் வருவதைத் தடுக்க முடியாத படிக்கு சத்திய மூர்த்தி செயலாற்றி வெற்றி கண்டார்.

  கருணாநிதியோ தாம் முதல்வராகவேன்றே அரசியல்/ சூழ்ச்சிகள் செய்து வருகிறார். இவரது சூழ்ச்சிக்கு இதுவரை இவரது மகன் ஸ்டாலினே சமயத்தில் அடிபட்டுக் கொண்டிருக்கிறார் என்கின்ற அளவுக்கு சூழ்ச்சிகள் செய்து வருகிறார். பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் ஈழத்தில் மடியும்போது கூடக் கருணாநிதிக்குத் தனது குடும்பத்தினரின் மத்திய அமைச்சுப் பதவிகளுக்கான சூழ்ச்சி அரசியல் பெரிதாகப் பட்டது.

  1996 இல் ரஜினி அரசியலுக்கு வருவதா இல்லையா என்ற கேள்விக்குறியான நிலையில் இருக்கும்போது, சோவும் மூப்பனாரும் கருணாநிதியும் சேர்ந்து “நாங்கள் அரசியலைப் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் குரல் கொடுத்தால் போதும்” என்று சொல்லி ரஜினியை வரவிடாமல் பார்த்துக் கொள்ளும் சூழ்ச்சியைத் தந்திரமாகச் செய்தனர். இத்தனை நடந்தும் இன்னமும் சோவுக்குத் தனது தவறுகள் தெரியவில்லை என்பதுதான் வேதனை.

 8. Ganesh Shankar

  /*1996 இல் ரஜினி அரசியலுக்கு வருவதா இல்லையா என்ற கேள்விக்குறியான நிலையில் இருக்கும்போது, சோவும் மூப்பனாரும் கருணாநிதியும் சேர்ந்து “நாங்கள் அரசியலைப் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் குரல் கொடுத்தால் போதும்” என்று சொல்லி ரஜினியை வரவிடாமல் பார்த்துக் கொள்ளும் சூழ்ச்சியைத் தந்திரமாகச் செய்தனர். இத்தனை நடந்தும் இன்னமும் சோவுக்குத் தனது தவறுகள் தெரியவில்லை என்பதுதான் வேதனை.*/

  இது தவறு.இன்றும் அவர்கள்(சோவும் மூப்பனாரும் கருணாநிதியும்) அப்போது என்ன பேசியிருக்கிறார்கள் என்பது சிறிதளவும் தெரியாது.மேலும்,எந்த ஒரு வாய்ப்பிலும் சோ அவர்கள் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறார்.அது நீங்கள் அவரின் இது பற்றய பேச்சுக்களை கேட்டால் தெரியும்.
  பல முறை அவர்,ஏன் நான் அவரை(சூப்பர் ஸ்டார்) ஆதரிக்கிறேன் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்கு கூட விளக்கம் கொடுத்திருகிறார்.சூப்பர் ஸ்டாரின் நல்ல குணம்,நேர்மை,உண்மை எல்லாமே நாட்டுக்கும்,நாடு மகளுக்கும் நன்மை பயக்கும் என்று கூறியிருக்கிறார்.

  மேலும் சூழ்ச்சிக்கு,சூழ்ச்சி செய்து தான் ஆகா வேண்டும்.நன்மை அப்போது தான் கிடைக்கும்.

  /*நீங்கள் சொல்றபடி பார்த்தால், சோவும் ஒரு நடுநிலையாளர்
  போலத் தெரிகிறதே! */

  நான் அப்படி தான் நினைக்கிறன்.மேலும் ஒரு சில பிரச்னைகளின் கருத்தை மட்டும் கொண்டு ஒருவரை முழுவதுமாக எடை போட முடியாது.அவருடைய கருத்தை தொடருங்கள் அப்போது தெரியும்.நானும் பல விடயங்களில் முன்பெல்லாம் அவ்வாறு தான் நினத்திருந்தேன்.ஆனால்,தொடர்ந்து படித்ததனால் சில விடயங்களை புரிந்து கொள்ள முடிகிறது.இன்றும் எனக்கு அவருடன் சில விடயங்களில் கருத்து வேறு பாடு உண்டு.
  அவரே சொல்லி இருக்கிறார் என்னுடன் கருது வேறுபாடுகள் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று.
  ஆனால்,அவர் சொல்லும் ஒவ் ஒவொரு கருத்திலும் பொருள் இருக்கிறது,அவர் நினைக்கும் காரணத்தை எடுத்து வைக்கிறார்.ஏன் கருணாநிதியும் கூட அவருக்கு இன்றும் நண்பர் தான்.சுய லாபம் இல்லாமல்,அவர் இதை எல்லாம் செய்கிறார்.

  ஏன் சில விடயங்களில்,கருணாநிதிக்கு ஆதரவாக கூட பேசி இருக்கிறார் பழ.கருப்பையாவுக்கு(அவர் வீட்டை அடித்த கருத்து) எதிராக,அதுவும் தனது பத்திரிகையிலேயே,அதுவும் அதே இதழில்.

  ஜெயா தொலைகாட்சியில் வரும் அவருடைய(சோ) பேச்சுக்களை மட்டும் பார்த்தல் அவ்வாறு தான் இருக்கும்.அவர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் பேச்சுக்களை மட்டுமே போடுவார்கள்.மற்றவற்றை போட மாட்டார்கள்.அவர்கள் மட்டும் அவ்வாறு இல்லை.எந்த தொலைகட்சியுமே அவ்வாறு தான்.

  என்வழியில் சொல்லி இருந்தது போல்,மக்களுக்கு பிடித்தது எதுவோ அதை மட்டும் கொடுப்பது பத்திரிக்கை தர்மம் அல்ல.நன்மை பயகுவதை அளிக்க வேண்டும்.
  இருப்பதில்,எதை எடுத்தால் நன்மை பயக்குமோ அதை தெளிவாக மக்களுக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும்,அது தான் பத்திரிக்கை தர்மம் என்று.அதை இன்று வரை அந்த பத்திரிகையில் காண்கிறேன்.

 9. enkaruthu

  சோ அவர்கள் கலைஞர் அவர்கள் சொல்வதை அது ராஜதந்திரம் என்று தெரிந்து நடுநிலையாளர் போல் விமர்சனம் செய்வார்.அது உண்மையும் கூட.அனால் இவரும் கலைஞர் போல நடுநிலையாளர் என்ற போர்வையில் ஜெயாவுக்காக ராஜதந்திரம் செய்வார்.இவரல்லவோ கலைஞரின் ராஜா தந்திர வாரிசு.

 10. Ganesh Shankar

  கலைஞரின் வாரிசு கலைஞரையே விமர்சனம் செயும்ன்கறதே இப்ப தான் புரியுது.மேலும்,சோ தான் செய்ததை பற்றி பேசியது இல்லை.அதே போல்,அவர் கருணாநிதியின் செய்கையை ராஜதந்திரம் என்றெல்லாம் சொன்னது இல்லை.ஒரு தேர்தலில் ஒருவர் தான் வெல்ல முடியும்,அதற்காகத்தான் மக்களே ஒட்டு போடுகிறார்கள்.
  சாநக்யரே,ராஜா தந்திரம் தான் செய்தார்.எது செய்தாலும் அந்த சமயத்தில் நல்லதாக இருந்தால்,அது ராஜா தந்திரம் என்றல்,அந்த தந்திரம் மிகவும் அவசியம்,அது கருணாநிதியின் வாரிசாக இருந்தாலும் சரி,ஜெயாவின் வாரிசாக இருந்தாலும் சரி.
  1996 எல்லாரும் இதை மாற்றி சொன்னார்கள்.ஏன் என்றால் அப்போது கருணாநிதியின் பக்கம் நின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *