BREAKING NEWS
Search

2.ஓ படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார்… பார்க்கக் குவிந்த மக்கள்!

சூப்பர் ஸ்டாரைப் பார்க்கக் குவிந்த மக்கள்!

2-0-1

சென்னை: நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு ‘2.O’ படப்பிடிப்புக்கு வந்த ரஜினிகாந்தைப் பார்க்க ரசிகர்களும் பொதுமக்களும் குவிந்தனர்.

ரஜினிகாந்த் நடித்து ஏற்கனவே வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் ‘2.O’ என்ற பெயரில் தயாராகி வருகிறது.

ரூ 350 கோடி செலவில், ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில், ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சில உடல் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

சில மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு ‘2.0’ படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்க வந்துள்ளார் ரஜினி.

திருக்கழுக்குன்றத்தில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த் திருக்கழுக்குன்றம் சென்றார். அவர் வரும் தகவல் அறிந்ததும் ரசிகர்களும் பொதுமக்களும் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் திரண்டார்கள். ரஜினி காரில் இருந்து இறங்கியதும் அவரை சூழ்ந்து கொண்டு கைகுலுக்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்தனர்.

போலீஸார் பாதுகாப்புடன் ரஜினிகாந்தை படப்பிடிப்பு அரங்குக்குள் அனுப்பி வைத்தனர். பின்னர் ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியும் கதாநாயகி எமிஜாக்சனுடன் ஆடிப்பாடுவது போன்ற டூயட் பாடல் காட்சியும் படமாக்கப்பட்டன.

படப்பிடிப்பு முடிந்ததும் வெளியில் வந்த ரஜினி ரசிகர்களுக்குக் காட்சி தந்தார்.

கபாலி படப்பிடிப்பின்போது மலேசியாவில் தன்னைக் காண வந்த ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத ரஜினி, காரின் மேற்பகுதியைத் திறந்து, நின்றபடி மக்களைப் பார்த்து கையசைத்துச் சென்றார். அதே பாணியில் நேற்று திருக்கழுக்குன்றத்திலும் ரசிகர்களுக்குக் காட்சி தந்த ரஜினி, கையெடுத்துக் கும்பிட்டபடி அவர்களின் வரவேற்பையும் ஆரவாரத்தையும் ஏற்றார்.

-என்வழி




3 thoughts on “2.ஓ படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார்… பார்க்கக் குவிந்த மக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *