BREAKING NEWS
Search

‘தர்மதேவதைக்கே அநீதியா’… திரையுலகினர் உண்ணாவிரதம்.. தமிழகமெங்கும் கடையடைப்பு

‘தர்மதேவதைக்கே அநீதியா’…  திரையுலகினர் உண்ணாவிரதம்.. தமிழகமெங்கும் கடையடைப்பு

 fast-3

சென்னை: தர்மதேவதைக்கே அநீதியா? என்ற வாசகத்துடன் நேற்று ஜெயலலிதாவுக்கு ஆதரவான தங்களின் உண்ணாவிரதத்தை நடத்தி முடித்தனர் தமிழ் திரையுலகினர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று, பெங்களூர் சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், அவருக்கு எதிரான தீர்ப்புக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையிலும் திரையுலகின் அனைத்து அமைப்புகளும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டன.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இந்த உண்ணாவிரதம் நடந்தது.

தர்மதேவதை

மேடையில் தர்ம தேவதைக்கு அநீதியா? என்ற வாசகம் எழுதப்பட்ட பேனர் கட்டப்பட்டு இருந்தது. எதிரில் பெரிய உண்ணாவிரத பந்தலும் போடப்பட்டு இருந்தது. உண்ணாவிரதத்துக்கு காலை 8 மணிக்கே திரையுலகினர் வரத் தொடங்கினார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா பேசும்போது, “ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்கள் உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இந்த மவுன உண்ணாவிரத அறப்போராட்டத்தை துவங்கியுள்ளோம். புரட்சித் தலைவி அம்மா எல்லா சோதனைகளையும் வென்று வெளியே வருவார். தர்மம் வெற்றி பெறும். மீண்டும் அம்மா அரியணை ஏறுவார். இது ஒட்ட மொத்த தமிழ் திரையுலகினரின் பிரார்த்தனை. அது விரைவில் நிறைவேறும்,” என்றார்.

பின்னர் உண்ணாவிரதம் துவங்கியது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார்.

சின்னத் திரை, பெரிய திரையைச் சேர்ந்த பலரும் இன்றைய உண்ணாவிரதத்தில் பங்கேற்றாலும், முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை.

ரஜினி, அஜீத் ஹைதராபாதிலும், கமல் உடல்நலமின்றி ஓய்விலும், விஜய் மும்பையிலும் உள்ளதால் அவர்களால் பங்கேற்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
fast-3 (2)
விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, இயக்குநர் பாலா போன்றவர்கள் பின்னர் வந்து கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தை தொடர்ந்து சென்னையிலும் சென்னை புறநகர் பகுதியிலும் சினிமா படப்பிடிப்புகள் இன்று ரத்து செய்யப்பட்டன. திரையரங்குகள் மூடப்பட்டு, அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. திரையரங்கு உரிமையாளர்கள் தேனாம்பேட்டையில் தனியாக உண்ணாவிரதமிருந்தனர்.

தமிழகம் முழுவதும்..

திரையுலகினர் தவிர்த்து, அதிமுகவினர் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் தமிழகம் முழுவதும் பெருந்திரளாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சென்னை தவிர்த்து பல மாவட்டங்களில் முழுமையான கடையடைப்பு நடந்தது.

-என்வழி செய்திகள்




3 thoughts on “‘தர்மதேவதைக்கே அநீதியா’… திரையுலகினர் உண்ணாவிரதம்.. தமிழகமெங்கும் கடையடைப்பு

  1. குமரன்

    தர்ம தேவதைக்கு அநீதியா ?

    சேச்சே ‘அ’ இடம் மாறிப் போச்சு

    அதர்ம தேவதைக்கு நீதியா ?

  2. குமரன்

    மொட்டைத் தலையுடன் முன்வரிசையில் இருப்பது சத்தியராஜா?

    வழக்கமாகக் கறுப்புச் சட்டை போடும் அவர் இதில் வெள்ளைச் சட்டையுடன் இருக்கிறார் !!

  3. Sargunam

    தலைவர் எப்போதுமே இதுக்கு ஊழல் சம்மந்தப்பட்ட விஷயத்துக்கு எல்லாம் சப்போர்ட் பண்ண மாட்டார்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *