BREAKING NEWS
Search

மீடியா வெளிச்சமில்லாவிட்டாலும் மக்களைப் பேச வைத்த, அரசியல்வாதிகளை மிரள வைத்த திருச்சி மாநாடு!

இதான் மாநாடு!

trichy 7itics

காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திருச்சியில் தன் சக்திக்கு மீறி ஏற்பாடு செய்திருந்த அருமையான மாநாடு அரசியல் உலகை மிரள வைத்துள்ளது என்றால் சற்றும் மிகையல்ல.

இந்த மாநாடு குறித்து ஆரம்பத்தில் அலட்சியம் காட்டிய அத்தனை அரசியல் தலைவர்களும் மீடியாக்களும், மாநாடு நடந்த விதம், கூடிய கூட்டம் பார்த்து வாய் பிளந்தார்கள். ஆனாலும் ரஜினி அரசியலுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பது போல காட்டிக் கொண்டார்கள், குறிப்பாக தொலைக்காட்சி ஊடகம்.

புதிய தலைமுறை, தந்தி டிவி, பாலிமர், நியூஸ் 7 போன்ற சில தொலைக்காட்சிகள் மட்டுமே இந்த மாநாட்டுச் செய்தியை லைவ் செய்தனர். ஊழல்வாதிகள் எங்கே பிரஸ் மீட் வைத்தாலும் அடித்துப் பிடித்து மைக்கை நீட்டிக் கொண்டு நிற்கும் மற்ற தொலைக்காட்சிகள் மெர்சல் ஆடியோ வெளியீடு, அதிமுக இணைப்பு என தமிழகத்தின் அதிமுக்கிய நிகழ்வுகளில் பிஸியாக இருந்தன. வட இந்திய ஊடகங்கள் வழக்கம்போல கண்டுகொள்ளவில்லை.

ஆனால் அச்சு ஊடகங்கள் கைவிடவில்லை. அத்தனை நாளிதழ்களிலும் முதல் பக்கம் அல்லது மூன்றாம் பக்கத்தில் முக்கியச் செய்தி தலைவர் ரஜினியின் அரசியல் வருகைதான்.

fans2

அதே நேரம் மக்களைப் பேச வைத்துவிட்டது இந்த மாநாடு என்பதுதான் உண்மை. ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டார் என்றே பேச ஆரம்பித்துள்ளனர் பலரும். எந்த வகையிலும் ரஜினியின் நேரடித் தொடர்பில்லாத, பங்களிப்பில்லாத ஒரு மாநாட்டுக்கே இவ்வளவு கூட்டம் குவிந்தது என்றால் அவர் கட்சி ஆரம்பித்து களத்தில் இறங்கும்போது எந்த அளவு அதகளப்படும் என்பதை கற்பனை செய்யக் கூட முடியவில்லை என்று ஓரளவு விஷயமறிந்தவர்களும் கமெண்ட் அடிப்பதைக் கேட்க முடிந்தது.

trichy-5

ரஜினிக்கு இளம் தலைமுறை ரசிகர்கள் அதிகமில்லை என்று கூறிக் கொண்டிருப்பவர்கள் இந்த மாநாட்டுக்கு வந்திருக்க வேண்டும். குடும்பம் குடும்பமாக வந்தவர்கள் ஒருபக்கம், உற்சாகத்துடன் துள்ளிக் குதித்து வந்த இளைஞர்கள் ஒரு பக்கம் என அத்தனை குதூகலமான ஒரு அரசியல் மாநாட்டை அண்மையில் யாரும் பார்த்திருக்க மாடடார்கள்.

எதேச்சையாக என்றல்ல.. திட்டமிட்டே மறைத்தாலும் கூட ரஜினி என்ற நல்ல மனிதர், மனித நேய தலைவருக்கு மக்களிடமுள்ள அபிமானம், செல்வாக்கை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது என்பதற்கு சின்ன சாம்பிள் இந்த மாநாடும் அதனையொட்டிய நிகழ்வுகளும்!

-வினோ

என்வழி ஸ்பெஷல்




3 thoughts on “மீடியா வெளிச்சமில்லாவிட்டாலும் மக்களைப் பேச வைத்த, அரசியல்வாதிகளை மிரள வைத்த திருச்சி மாநாடு!

  1. Rajagopalan

    ஆனால் அச்சு ஊடகங்கள் கைவிடவில்லை. அத்தனை நாளிதழ்களிலும் முதல் பக்கம் அல்லது மூன்றாம் பக்கத்தில் முக்கியச் செய்தி தலைவர் ரஜினியின் அரசியல் வருகைதான்.

    Sorry Boss.
    Dinakaran, Times of India pondra sila per endha news poda villai…

  2. kumaran

    8000 பேர் மட்டுமே வந்ததாக ஜூவி செய்தி

  3. ஸ்ரீகாந்த்.1974

    இது அன்பால தானா சேர்ந்த கூட்டம்!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *