BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினி – திருநாவுக்கரசர் சந்திப்பு! 

thirunavukkarasar-rajini3-22-1474531137

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்று நேரில் சந்தித்தார், தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள எஸ் திருநாவுக்கரசர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் விலகியதைத் தொடர்ந்து, சமீபத்தில் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் திருநாவுக்கரசர். அதனைத் தொடர்ந்து முக்கிய கட்சித் தலைவர்களை நேரில் அவர் சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் தலைவர் ரஜினியை இன்று அவர் நேரில் சந்தித்தார். தனுஷ் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நட்பு ரீதியாக ரஜினியைச் சந்தித்ததாக விளக்கமளித்தார்.

rajini-thiru-me

மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்த சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல. எனக்கும் ரஜினிக்கும் இடையே நீண்ட நாட்களாக நல்ல நட்பு உள்ளது. அதன் அடிப்படையில் இன்று அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தேன். மேலும் அவரது கபாலி பட வெற்றிக்கு வாழ்த்தும் தெரிவித்தேன். இதேபோல், ரஜினியும் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றதற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்தார்,” என்றார்.

-என்வழி




3 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு!

  1. Rajagopalan

    Even though clean shaved, thalaivar looks dull.
    May god help him to come out of his worries..
    Happiness return soon.
    Thalaiva Singa Nadai pottu sikiram va…

  2. குமரன்

    திருநாவுக்கரசர் ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான அரசியல் செய்பவர். தமிழகக் காங்கிரசில் அதிரடி அரசியல் செய்துவந்த தலைவரான இளங்கோவனுக்குப் பின் வந்திருக்கும் இவர் கோஷ்டி அரசியலைக் கட்டுப்படுத்திக் கட்சிக்குப் புத்துயிர் தரமுயல்வார் என நம்பலாம். சோனியா, ராகுல் என்ற வட்டத்திலிருந்து காங்கிரஸ் வெளிவர வாய்ப்பில்லாத நிலையில் கொள்கைகள் பழைய கள்ள்ளும், மொந்தையுமாகவே இருக்கும்.

    அதன் துவக்கமே நமது தலைவரையும், ஆர்,எம்.வீயையும் சந்தித்தது.

    பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *