BREAKING NEWS
Search

கபாலி இசை வெளியீட்டு உரிமை… கைப்பற்றியது திங்க் மியூசிக்!

கபாலி இசை திங்க் மியூசிக் வசம்!

Kabali-Music

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தின் இசை உரிமையை கடும் போட்டிக்கிடையில் கைப்பற்றியுள்ளது சத்யம் சினிமாஸின் திங்க் மியூசிக் நிறுவனம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள கபாலி பாடல்கள் குறித்து பெரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர் ரசிகர்கள். கபாலி டீசருக்கு சந்தோஷ் நாராயணன் போட்டிருக்கும் ஒரு நிமிட பின்னணி இசையையே பல ஆயிரம் பேர் தங்களின் மொபைல் ரிங் டோனாக வைத்துள்ளனர்.

படத்தின் பாடல்கள் புதுமாதிரியாக இருக்கும் என்பதால், இசை வெளியீட்டு உரிமையைப் பெற பல நிறுவனங்கள் போட்டி போட்டன. இதில் சத்யம் சினிமாஸின் திங்க் மியூசிக் நிறுவனம் வெற்றிகரமாக கபாலியைக் கைப்பற்றியுள்ளது.

ஏற்கெனவே தாணுவின் கணிதன், தெறி படங்களின் இசையை இந்த நிறுவனம்தான் வெளியிட்டது. ரஜினியின் எந்திரன் பட இசையையும் திங்க் மியூசிக்தான் வெளியிட்டது. இப்போது இரண்டாவது முறையாக ரஜினி பட இசை உரிமையைப் பெற்றுள்ளது.

-என்வழி




2 thoughts on “கபாலி இசை வெளியீட்டு உரிமை… கைப்பற்றியது திங்க் மியூசிக்!

  1. srikanth1974

    \\ரஜினியின் எந்திரன் பட இசையையும் திங்க் மியூசிக்தான் வெளியிட்டது. இப்போது இரண்டாவது முறையாக ரஜினி பட இசை உரிமையைப் பெற்றுள்ளது.//

    இந்த இரண்டு படங்களுக்கு முன்பே சந்திரமுகியின் audio வை திங்க் மியூசிக் நிறுவனம்
    வெளியிட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *