BREAKING NEWS
Search

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் முதல்ல ரஜினிகிட்ட கத்துக்கங்க! – எஸ்வி சேகர்

Rajini-SVS

சென்னை: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் ரஜினியிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் ரஜினி ஒரு பெரும் சக்தியாக உருவெடுப்பார் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்பார்க்கப்பட்டாலும், அவர் தன் வருகையை இன்னும் நேரடியாக அறிவிக்காமல் உள்ளார். இந்த காத்திருப்புக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் முற்றுப்புள்ளி விழும் என்று ரஜினி தரப்பில் உறுதியாகச் சொல்லப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம், கமல் ஹாஸன், விஜய், பிரகாஷ்ராஜ் என பலரும் தங்கள் அரசியல் பிரவேசம் குறித்துப் பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது கருத்து கூறி வரும் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர், “சினிமா to அரசியலுக்கு வருமுன் ரஜினியிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை.. நிதானம், பொறுமை, சிறிய அறிக்கைகள், தேவையின்றி வீராப்பான எதிர்ப்பு. அவர் ஜெயிப்பார்,” என்று கூறியுள்ளார்.

-என்வழி




One thought on “சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் முதல்ல ரஜினிகிட்ட கத்துக்கங்க! – எஸ்வி சேகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *