BREAKING NEWS
Search

மீண்டும் தில்லு முல்லு, மன்மதலீலை!

மீண்டும் தில்லு முல்லு, மன்மதலீலை!

 

யக்குநர் கே பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளி வந்த மறக்க முடியாத படங்களில் முக்கியமானவை சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தில்லு முல்லு மற்றும் கமல் நடித்த மன்மத லீலை.

இந்தப் படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இவற்றை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் கே பாலச்சந்தரின் மகள் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி.

இதே தலைப்புகளைப் பயன்படுத்தி, கவிதாலயா பேனரில் அந்தப் படங்களை ரீமேக் செய்யப் போகிறாராம்.

இதுகுறித்து புஷ்பா கந்தசாமி கூறுகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினியின் தில்லு முல்லு மற்றும் கமல் நடித்த மன்மத லீலை இரண்டுமே சூப்பர் ஹிட் படங்கள். அந்த காலத்தில் புதிய ட்ரெண்டை உருவாக்கின. இந்தப் படங்களை மீண்டும் ரீமேக் செய்கிறோம்,” என்றார்.

இந்தப் படங்களில் ஒன்றை கே பாலச்சந்தர் மீண்டும் இயக்க வாய்ப்பிருக்கிறதா?

“அது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். விரைவில் மற்ற விவரங்களை வெளியிடவிருக்கிறோம்.”

ரஜினி, கமல் வேடங்களில் நடிக்கப் போகும் அந்த அதிருஷ்டசாலிகள் யாரோ?

“பல முன்னணி நடிகர்களது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவாகிவிடும்,” என்றார் புஷ்பா கந்தசாமி.

மன்மதலீலை ஒரு பெண் பித்தனின் கதை. கமல்தான் ஹீரோ. ஏகப்பட்ட ஹீரோயின்கள். கட்டுப்பெட்டித்தனம் மிகுந்த எழுபதுகளில் அந்தக் கதை பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்தாலும், பாலச்சந்தருக்கும் கமலுக்கும் பாராட்டுகளைத் தந்த படம்.

சூப்பர் ஸ்டாரின் தில்லு முல்லு பற்றி கேட்கவே வேண்டாம்… இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் மக்கள் விரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் படம். ரஜினி என்ற கலைஞனின் அற்புதமான நகைச்சுவையை வெளிக்கொணர்ந்த இந்தப் படம், இந்தியில் வெளியான கோல்மால் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னமோ போங்க.. முரட்டுக்காளையை கெடுத்து வச்ச மாதிரி ஆகாம இருக்க வாழ்த்துவோம்!

-என்வழி செய்திகள்
7 thoughts on “மீண்டும் தில்லு முல்லு, மன்மதலீலை!

 1. enkaruthu

  என்னை பொறுத்தவரை பாலசந்தர் ஒரு கேவலமான பிறவி.நன் ஏன் இதை சொல்கிறேன் என்றால் குசேலன் பட ரிலீஸ்ன் பொழுது கர்நாடகாவில் ஒரு பிரச்சினை எழுந்தது. முதலில் தலைவர், தவறு செய்யாத நான் எதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொன்னார். ஆனால் தன நலத்தையே பார்க்கும் இந்த ஐய குலத்தில் பிறந்த இவர் தயாரித்த இந்த படத்துக்காக தலைவர் தன நல்ல பெயரை அடகு வைத்தார் .என்னை பொறுத்தவரை தலைவர்அவர்களின் முகத்தை வெளிஉலகுக்கு காட்டியவர் என்று இவர் மேல் மதிப்பு வைத்தாலும் நான் மிகவும் மதிக்க கூடியவர் இயக்குனர் திரு முத்துராமன் அவர்களே .பாலசந்தர் தன் இனத்தை சேர்ந்தவரான கமலைதான் தூக்க பார்த்தார்.இவர் ஒன்னும் அன்று தலைவரை தூக்க பார்கவில்லை.அனால் இன்று வெட்கமே இல்லாமல் என் கண்டுபிடிப்பு ரஜினி(தலிவர் தன் முயற்சியால் பெரிய ஆள் ஆனார்) என்று பீத்தி கொள்கிறார். என்னை பொறுத்தவரை நம் ரசிகர்கள் கொண்டாடவேண்டியது முத்துராமனைதான் என்பது என் கருத்து.

 2. மிஸ்டர் பாவலன்

  AK-ன் பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.
  அவர் அனைத்தையுமே ஜாதி நோக்கத்தில் பார்ப்பதாக
  தெரிகிறது. KB தான் ஒரு ஐயர், கமல் ஒரு ஐயர் என்பதால்
  கமலுக்கு அதிக சான்ஸ் கொடுத்ததாகச் சொல்வது
  கமல், ரஜினி ரசிகர்கள் இருவராலும் ஏற்கமுடியாது.
  ரஜினிக்கு ஒரு ‘mass hero’ என்ற image உருவானதால் தான்
  தில்லுமுல்லு படத்திற்கு மேல் ரஜினியைத் தன்
  இயக்கத்தில் எடுக்காமல் பிற இயக்குனர்களை வைத்து
  KB எடுத்தார் (ரஜினியின் நெற்றிக்கண், புதுக்கவிதை,
  அண்ணாமலை, முத்து போன்ற பல படங்கள் கவிதாலயா
  தயாரிப்பில் வெளிவந்தவை). கமலஹாசன் கவிதாலயாவின்
  ஒரு படத்திலாவது (guest role இல்லாமல்) ஹீரோ ஆக
  எனக்குத் தெரிந்து நடிக்கவில்லை. KB மீதான AK-யின்
  குற்றச்சாட்டு அவரது ஜாதீய உணர்வைப் பிரதிபலிக்கிறது.
  AK -யின் “தன்னலத்தையே பார்க்கும் ஐயர் குலம்” என்ற
  வரிகள் அவரது ஜாதி வெறியையும் காண்பிக்கிறது.

  -== மிஸ்டர் பாவலன் ===-

 3. mukesh

  கமல் நடித்து வெளி (வெ) வந்த கவிதாலயா தயாரிப்புகள் எனக்குள் ஒருவன், உன்னால் முடியும் தம்பி மற்றும் புன்னகை மன்னன்

 4. மிஸ்டர் பாவலன்

  //கமல் நடித்து வெளி (வெ) வந்த கவிதாலயா தயாரிப்புகள்
  எனக்குள் ஒருவன், உன்னால் முடியும் தம்பி மற்றும் புன்னகை மன்னன்// (முகேஷ்)

  அன்பர் முகேஷிற்கு நன்றி. கே. பாலச்சந்தர் இருவரையும் வைத்து படம்
  தயாரித்தது மிகவும் சந்தோஷம். நீங்கள் சொன்னதும் தான் இந்தப் படங்கள்
  எனக்கு நினைவிற்கு வந்தது. ஆனால் எண்ணிக்கை என்று பார்த்தால்
  கமலை விட கே.பி. ரஜினியை வைத்து அதிக படங்கள் தயாரித்திருக்கிறார்.
  அதனால் கே.பி.-யிடம் AK சொன்னது போல் ‘ஐயர், ஐயர் இல்லை’ என்கிற
  ஜாதி துவேஷம் இல்லை. கமல்-ரஜினி இருவருக்கும் நல்ல மதிப்புக் கொடுப்பவர் கே.பி.

  -மிஸ்டர் பாவலன்

 5. குமரன்

  இப்பலாம் யாரு சார் சாதி பாக்கல? ….
  (டான் அசோக் கட்டுரை – என்வழியில்.)

  இந்த கேள்விக்கு ஒரு பதில் :

  “என்கருத்து” – அவரது பல மறுமொழிகளில் !

 6. மிஸ்டர் பாவலன்

  குமரனின் கருத்து என் கருத்து !

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *