BREAKING NEWS
Search

சும்மா வந்ததல்ல சூப்பர் ஸ்டார் பட்டம்!

சும்மா வந்ததல்ல சூப்பர் ஸ்டார் பட்டம்!

IMG_4899
ன்றைய இளம் ஹீரோக்களுக்கு தாங்கள் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ, படத்தி வாங்கியவர்கள் லாபம் அடைந்தார்களோ இல்லையோ அது பற்றியெல்லாம் கவலையில்லை. தங்களுக்குள் யார் சூப்பர் ஸ்டார் என்பதில் மறைமுக யுத்தம் நட்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

முதலில் அந்த பட்டத்திற்கு உரியவரான ரஜினிகாந்த் நம்மோடு வாழ்ந்துகொண்டு இருக்கும் போது அவர் இடத்திற்கு இன்னொருவரை பட்டம் சூட்ட நினைப்பது கோமாளித் தனமானது. புரட்சித் தலைவர், நடிகர் திலகம், மக்கள் திலகம் போன்ற அடை மொழிகளெல்லாம் மககள் அன்போடு கொடுத்த பாசப் பட்டங்கள். அந்த இடத்திற்கு இன்னொருவரை நினைத்துப்பார்ப்பதென்பது அவர்களின் உழைப்பின் மீது உமிழ்வது போன்றது.

சும்மா வந்ததல்ல சூப்பர் ஸ்டார் பட்டம் என்பதற்கு சான்றுகள் நிறைய உண்டு.

75 ல் ரஜினிகாந்த் என்கிற சிவாஜி ராவ் கெய்க்வாட் சினிமாவில் நுழையும் காட்சியே தீர்க்க தரிசனமான காட்சி “நான் பைரவி புருஷன் வந்திருக்கேன்” என்று கேட்டை திறக்கும் போதே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் திறந்து கொண்டு உள்ளே வந்து உட்கார்ந்து விட்டார். ஆனால் அது துக்கடா கேரக்டர். அப்படிதானே அவர் அறிமுகமாக முடியும். முதல் படத்திலேயே ஹீரோவாக நடிக்க அவர் அப்பா ஒன்றும் சினிமா டைரக்டர் இல்லையே.

அதன் பிறகு சினிமாவில் ரஜினி காட்டிய ஸ்டைலும் கொட்டிய உழைப்பும் மிருக்கதனமானது என்பதற்கு சில சாட்சிகள்…..

தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக கோலோச்சிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மத்தியில் நாம் எப்படி இங்கு நம்மை தக்கவைத்துக் கொள்வது என்கிற பெரும் குழப்பத்துடன் தான் கால வைத்தார் ரஜினி. அதற்காக நடிப்பிலும், உழைப்பிலும் எந்த அளவிற்கு அர்ப்பணிப்பு காட்ட வேண்டுமோ அப்படியொரு அர்ப்பணிப்பை காட்டினார் ரஜினி. 75 லிருந்து 78 வரை எத்தனை எத்தனை வேடங்கள். பல படங்களில் வில்லனாக, தப்புத்தாளங்களில் விபச்சாரியின் கணவனாக, புவனா ஒரு கேள்வி குறி படத்தில் கைவிடப்பட்டவளுக்கு வாழ்வு கொடுப்பவனாக, அவர்கள் படத்தில் கொடுமைக்கார கணவனாக, மூன்று முடிச்சு படத்தில் நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பனாக இப்படி யாரும் ஏற்கத்தயங்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பில் ஜொலித்தவர்.

பதினாறு வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரம் பரட்டையனாக வரும் ரஜினி முகத்தில் காரி துப்புவதுபோல் வரும் காட்சியில் பாரதிராஜா சோப்பு நுரையை தெளித்து காட்சியை எடுத்து விடலாம் என்றபோது ரஜினிதான் “இல்லை…இல்லை காட்சி தத்துரூபமாக வராது” என்று சொல்ல, ஸ்ரீதேவி அப்படி செய்ய மறுத்திருக்கிறார். வேறு வழியில்லாமல் ரஜினி முகத்தில் நிஜமாக எச்சிலை துப்பவைத்து அந்த காட்சியை படமாக்கினார் இயக்குனர் பாரதிராஜா. இப்போது இருக்கும் ஹீரோக்கள் போல கோட் சூட்டும், சிலிக்கான் லைட்டும், அழகிகள் சூழ ஆடும் பாட்டுமாக நடித்து வந்தவரில்லை. கேரவேன்களுக்குள் புகுந்து கொண்டு தன் கேரக்டரை வளர்த்தவரும் அல்ல. நடிக்க வரும் முதல் படத்திலேயே கேமராவை காலுக்கு கீழே வைத்து ( லோ ஆங்கிள் ) ஸ்கிரீனை பார்த்து பஞ்ச் டயலாக் பேசியவர் கிடையாது ரஜினி.

மற்ற நடிகர்கள் பணம் கொடுத்து ரசிகர்களைத் தூண்டிவிட்டு விளம்பரம் தேடுவார்கள்... ஆனால் ரஜினி ரசிகர்கள்? இதோ.. தங்கள் கைக்காசை செலவழித்து மனக் குமுறலை முழுப்பக்க விளம்பரமாகக் காட்டியிருக்கிறார்கள். இது ஒன்றுபோதாதா.. ரஜினி மட்டுமே நிரந்தர சூப்பர் ஸ்டார் என்பதற்கு!

மற்ற நடிகர்கள் பணம் கொடுத்து ரசிகர்களைத் தூண்டிவிட்டு விளம்பரம் தேடுவார்கள்… ஆனால் ரஜினி ரசிகர்கள்? இதோ.. தங்கள் கைக்காசை செலவழித்து மனக் குமுறலை முழுப்பக்க விளம்பரமாகக் காட்டியிருக்கிறார்கள். இது ஒன்றுபோதாதா.. ரஜினி மட்டுமே நிரந்தர சூப்பர் ஸ்டார் என்பதற்கு!

ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்றுக்கொண்ட கேரக்டர்கள் எல்லாவற்றுக்கும் தன் தனித்த நடிப்பால் அப்ளாஸை வாங்கிக்கொடுத்தார்.. ஒரே வருடத்தில் மட்டும் தயாரிப்பாளர்களின் சிரமத்தை போக்க தொடர்ந்து நடித்து 24 படங்களை முடித்துக் கொடுத்திருக்கிறார். இரவு பகல் பாரமல் நடித்துக் கொடுத்து தன் ஆரோக்கியம் பாதிக்க அவரே காரணமானார். தூக்கம் வந்து சூட்டிங் பாதிக்கப்படக்கூடாது என்று ரஜினி செய்த காரியங்கள் யாரும் செய்யத்துணியாதவை. அதில் ஒன்று இரவு படப்பிடிப்பு முடிந்து நான்கு மணிக்கு வந்து படுக்கும் அவர் தன் உதவியாளர்களுக்கு சொல்லி வைத்த உத்தரவுபடி ஆறு மணிக்கெல்லாம் அவர் முகத்தில் ஐஸ் வாட்டரை கொட்டி அவரை எழுப்புவார்களாம்.

இப்படி மூன்று வருடங்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகே 77 – 78 ல் தாணுவின் பைரவி படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் தாணு ரஜினியின் தனித்தன்மையை உணர்ந்து பட போஸ்டரில் ’சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிக்கும் பைரவி என்று விளம்பரம் செய்ய முடிவு செய்கிறார். இது ரஜினிக்கு எப்படியோ தெரிந்து பதறிப்போய் தாணுவின் அலுவலகத்திற்கு வருகிறார். “தாணு சார் பெரியங்க எம்.ஜி.ஆர்., சிவாஜி இவங்கள்லாம் இருக்கும்போது நமக்கு எதுக்கு இந்த பட்டமெல்லாம். அவங்களை நாம் வருத்தப்பட வைக்கூடாது” என்று பெருந்தன்மையோடு மறுத்திருக்கிறார். ஆனால் தாணு அவர்கள் பிடிவாதமாக ”மெகா சூப்பர் ஸ்டார் என்று போட்டுவிடவா” என்று கேட்க, ”ஐயோ சூப்பர் ஸடாரே பரவாயில்ல” என்று ரஜினி மறுக்க, மறுநாள் ஒரு நாளிதழில் சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு பைரவி பட விளம்பரம் முழு பக்கத்தில் வெளிவருகிறது. தர்ம சங்கடத்தில் தவித்தார் ரஜினி.

அவர் நடித்த பதினெட்டு படங்கள் இருநூறு நாட்கள் ஓடிய படங்கள் 38 படங்கள் நூறு நாள் படங்கள், நான்கு படங்கள் ஒருவருடத்திற்கும் மேல் ஓடிய படங்கள். இப்படி வாங்கிய பட்டத்திற்கு தன்னை தகுதியாக்கிக் கொண்டார் ரஜினி. இத்தனை படங்களில் சில படங்களில் தன்னை வைத்து படமெடுத்து நலிந்து போன தயாரிப்பாளர்களை பங்குதாரராக ஆக்கிக்கொண்டு அவர்களுக்கு வாழ்வளித்தார். எந்த தயாரிப்பாளரும் ‘உங்கள் படங்களால் எங்களுக்கு பெரிய நஷ்டம்’ என்று அவர் வீட்டின் முன் நின்றதில்லை.

பட்டத்திற்கு ஆசைப்படும் இன்றைய ஹீரோக்கள் இப்படி தொடர் வெற்றி கொடுத்திருக்கிறார்களா என்பதை அவர்களே சொல்லட்டும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பங்கு போட்டுக்கொள்ள அது என்ன ’பாலகாடு பேக்கரி’யில் விற்கும் பன்னா.

ரஜினியின் பலவருட உழைப்பு. இந்த உழைப்பிற்கு நாம் எந்த வகையிலும் தகுதியானவர்கள் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். சினிமாவில் மட்டுமல்ல..தனிப்பட்ட வாழ்க்கையிலும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையான வாழ்க்கையை வாழ்ந்து வருவதும் ரஜினியை மக்கள் நேசிப்பதற்கு முக்கிய காரணம். அதோடு தான் நேசிக்கும் சினிமாவை வைத்து எந்த விதமான அரசியல் ஆதாயத்தையும் அடைய அவர் முயன்றதில்லை. ஆனால் இன்று சினிமாவில் உள்ள நடிகர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?

ஒரு நடிகர் வீட்டில் நடந்த சம்வத்தை சொன்னால் ரஜினிக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணரலாம். அவர் பங்களாவில் ஒரு பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தனர் ஐந்து தொழிலாளர்கள். அப்போது சூட்டிங் முடிந்து வீடு திரும்பியிருக்கிறார் அந்த ஹீரோ. எதிர்பட்ட இந்த உழைப்பாளர்களை பார்த்திருக்கிறார். உழைக்கும் வர்க்கம் எப்படியிருக்கும்..? வெற்று மேனியும், அழுக்கு வேட்டியுடன், வியர்வை வழிய நின்றிருக்கிறார்கள். காருக்குள்ளிருந்து இதை பார்த்த ஹீரோ தன் உதவியாளரை அழைத்து ‘நான் வந்து போகும் போது இவங்க யாரும் என் கண்ணில் படக்கூடாது’ என்று உத்தரவிட்டிருக்கிறார். வீட்டு வேலை முடியும் வரை அந்த ஹீரோவின் கண்ணில் யாரும் படாமல் ஒளிந்து ஒளிந்தே வேலையை முடித்திருக்கிறார்கள். இது சினிமா காட்சி அல்ல. வலிக்க வைக்கும் நிஜம். சரி இந்த கட்டிட வேலை எதற்காக நடந்தது தெரியுமா… அந்தப் பகுதியில் வசிக்கும் சிலர் தங்களின் அபிமான நடிகர் வீடு இதுதான் என்று பாசத்தோடு பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். இது தெரிந்து தன் வீட்டின் காம்பவுண்ட் சுற்றுச்சுவரை பல அடிகள் உயர்த்திக் கட்ட போட்ட உத்தரவால் நடந்த வேலை!!

ஆனால் ரஜினியின் அசாத்திய பாசம் எவருக்கும் வராது. காமராஜர் அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சி முடிந்து விட்டு காரில் அவர் வெளியேற, தொலைவில் சாலையில் தனியாக நின்றிருந்த இருவர் ரஜினியின் கார் என்பதை பார்த்து விட்டு கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருப்பது தெரிந்தும் உற்சாகத்தில் கையை ஆட்ட பைக்கில் துரத்துகிறார்கள். உடனே ரஜினியின் கார் வேகம் குறைய, அந்த இரண்டு பேருக்காக கண்ணாடியை இறக்கி புன்னகைத்து கையை அசைத்து, ‘இப்படி வேகமா வரவேணாம்… நிதானமா போங்க’ என்று சொல்லிச் செல்கிறார். அந்த பாசத்தை யாரும் சொல்லித் தந்து வரவழைக்க முடியாது. அது ரத்தத்தில் ஊறியது. அதனாலதான் அவர் சூப்பர் ஸ்டார்.

thalaivarudan-kannan

தலைவருடன் கட்டுரையாளர்

எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் பட்டங்களை கொடுத்தது யார் தெரியுமா சாதாரண ரசிகர் ஒருவர்தான். பத்திரிகைகள் அல்ல. திமுகவிலிருந்து விலக்கப்பட்ட ஒருநாள் சத்யா ஸ்டுடியோவில் அதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் எம்.ஜி.ஆர். வெளியே ரசிகர்கள் கூட்டம் உணர்ச்சி பொங்க கூடியிருந்தது. எம்.ஜி.ஆர் வெளியே வந்து தலைகாட்ட அத்தனை பேரும் ஆர்ப்பரித்தனர். அதில் கூட்டத்திலிருந்த வேலூரை சேர்ந்த ரசிகர் ஒருவர் பரவசத்தில் ”புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்க” என்று குரல் கொடுக்க, அன்றிலிருந்து கட்சித் தலைவர் புரட்சித்தலைவர் ஆனார்.

சிவாஜிக்கு அன்று வந்த சினிமா பத்திரிகையான ’பொம்மை’யில் வந்த கேள்வி பதிலில் சிவாஜி ரசிகர் ஒருவர் ‘எங்கள் நடிகர் திலகம் எப்படியிருக்கிறார்’ என்று ஒரு கேள்வியை வைக்க, சிவாஜியும் அந்த அன்பு பரிசை அப்படியே ஏற்றுக்கொண்டார்.

இதை அப்படியே அடுத்த புரட்சித் தலைவர் யார் என்றோ, அடுத்த நடிகர் திலகம் யார் என்றோ போட்டி வைத்தால் எவ்வளவு கேலிக் கூத்தாக இருக்கும். ஒரே ஒரு இமயமலை, ஒரே ஒரு வங்கக் கடல் ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் அது ரஜினி காந்த் என்கிற மாமனிதன் தான்.

பட்டம் என்பது மக்கள் பரிசாக கொடுப்பது யாரிடமிருந்தும் பறித்துக் கொடுப்பது இல்லை. இது சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிந்தால் போதும்!

தேனி கண்ணன்
22 thoughts on “சும்மா வந்ததல்ல சூப்பர் ஸ்டார் பட்டம்!

 1. kane

  விஜய் எல்லாம் ஒரு ஆளாகவும் குமுதமெல்லாம் ஒரு பத்திரிக்கையாக கருதி இவனுங்களுக்கு இப்படி நீளமான எதிர்வினை தேவையா வரிசையாக நடித்த படங்கள் எல்லாம் அட்டர் ப்ளாப் ஆனால் போட்டியாளர் சமீபமாக நடித்த படங்கள் எல்லாம் ஹிட் வழக்கம் போல அப்பனும் மகனும் குறுக்கு வழியில் பெரியவனாக காட்டிகொள்ள மெனக்கேடுகிறார்கள் ஆனால் அவனுடைய மூளையில்லாத ரசிகர்களை தவிர மற்ற எல்லாரும் இவனுங்களை காமெடி பீஸாகதான் பார்க்கிறார்கள்

 2. ramesh

  என்றும் நம் தலைவன் தான் சூப்பர் ஸ்டார்……………………ரஜினி வாழ்க……………………..

 3. makkal neyam.. noble.t

  ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் அப்பா அம்மா ஆசைப்பட்டு தருவதில்லை”
  விளம்பரதொகை கட்டி வாங்குவதும்மில்லை”, ஆரம்பத்தில் சின்னரஜினி என சொன்னபோது ”விவரமில்லாதவர்கள்” என விட்டுவிட்டோம்!
  இப்பவும் அடுத்த சூப்பர் ஸ்டார், எனும்போது ”வெட்கமும்இல்லாதவர்கள்” என மன்னித்துவிடுகிறோம்! இனியாவது திருந்தட்டும்.

 4. venkatesh

  i saw a post in thats tamil just fyi

  Arun • 3 hours ago
  ஒரு உண்மையான ரஜினி ரசிகனின் உணர்வுகள் கோபங்கள் கேள்விகள் இங்கே……!!!!
  ஒவ்வொரு ரஜினி ரசிகனும் படிக்க வேண்டும்………

  நாளை பிறந்த நாள் கொண்டாடும் திரு.விஜய் அவர்களே

  உங்கள் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் உங்கள் திரைபடங்களில் உங்களை ரஜினி ரசிகன் போல் காட்டி கொண்டீர்கள்…..

  அண்ணாமலை தம்பி இங்கு ஆட வந்தேன்டா என்று ஆட்டம் ஆடியது உங்கள் நினைவில் இருக்கிறதா….??

  எனக்கு “பாபா”வ பிடிக்கும் என்று தமிழன் படத்தில் நீங்கள் பேசிய வசனம் நினைவில் இருக்கிறதா…??

  உங்களுக்கு “இளைய தளபதி” என்ற பட்டம்
  எங்கிருந்து முளைத்தது என்று நினைவில் இருக்கிறதா…??

  காலங்கள் கடந்தது….

  அதுவரை ரஜினி ரசிகன் என்று கூறி வந்த நீங்கள் திடீரென்று மக்கள் திலகத்தின் பக்கம் சாய்ந்தீர்கள்…..

  வில்லு படத்தில் “சூப்பர் ஸ்டார் யாரென்று கேட்டால்..??” பாடலை தேவையில்லாமல் திணித்து எங்கள் உணர்வுகள் தூண்டி விட்டீர்கள்…..

  படம் எப்படி ஆனது..?? தியேட்டர் விட்டு ஓடியது

  வேட்டைக்காரன் படத்தில் பாட்ஷா ரஜினி போல் ஸ்டைல் செய்ய முயற்சி எடுத்தீர்கள்
  நல்ல முயற்சி..ஆனா நல்லா இல்ல….

  சிங்கம் தான் குகைல இருக்கனும்..எலி பொந்துல தான் இருக்கனும்…..

  பாபாவில் தோற்று பார்த்த எங்கள் தலைவரை தவறாக கணித்து சச்சினை சந்திரமுகியுடன் மோத விட்டீர்கள்…

  இதில்
  வென்றால் என் மகன் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று உங்கள் தந்தை அறிக்கை
  விட்டதையும் நாங்கள் மறக்கவில்லை, சந்திரமுகி போட்ட ஆட்டத்தில் சச்சின்
  வந்த வேகத்தில் பவிலியன் திரும்பியதையும் மறைக்கவில்லை…….!!

  சந்திரமுகியின் ஆட்டத்தில் சச்சின் கிளீன் போல்ட் ஆனதை மறந்து விட்டீர்களா….???
  .
  .
  .
  .
  இதையெல்லாம் விடுங்கள் ரஜினி ஆக எவனுக்கு தான் ஆசை இருக்காது…

  அப்பொழுதும் கூட உங்கள் மீது மரியாதை இருந்தது எங்களுக்கு உங்கள் நடனத்தை ரசித்தோம் ஒரு ரசிகனாக

  “தலைவா” இது பெயரல்ல ஒவ்வொரு ரஜினி ரசிகனின் உயிர் என்று உங்களுக்கு தெரியும்…ஏன், நீங்களும் அவரை இப்படி அழைத்ததுண்டு……

  அப்படி இருந்தும் எங்கள் உணர்வுகளை கொச்சைபடுத்தி “தலைவா” என்று டைட்டில் வைத்து வேண்டும் என்றே எடுத்தீர்கள் ஒரு படம்…

  நான்
  சுறா படத்த கூட சன் டிவில போடும் போது இரண்டு தடவை
  பாத்திருக்கிறேன்….கருமம் “தலைவா” படம் அந்த டைட்டில் போடும் போதே பாக்க
  சகிகல…..

  (அது அது எங்க இருக்கணுமோ அங்கங்க இருக்கனும்)

  ஆண்டவனே உங்களை அந்த படத்தில் தண்டித்து விட்டார்…பட்ட துன்பங்களும் இன்னல்களும் கொஞ்சமா….???

  இதற்கு எல்லாம் மணி மகுடம் வைத்தாற்போல

  நேத்து வந்துசே ஒரு சேதி…..

  நீங்கள்
  உண்மையான நடிகராக, இல்லை ஒரு மனிதராக இருந்திருந்தால் அந்த சர்வே நடக்கவே
  விட்டிருக்க கூடாது அதை கண்டித்திருக்க வேண்டும்….

  அப்படி
  செய்திருந்தால்….அத்தனை ரஜினி உங்களை கொண்டாடி இருப்பார்கள்….நீங்கள்
  எதிர்க்கவே இல்லை மாறாக இதாண்டா சாமி நல்ல வாய்ப்பு என்று ஏற்று
  கொண்டீர்கள்….

  உங்களையே நீங்கள் தூற்றி கொண்டீர்கள்……

  அப்போ
  இனி சிவ கார்த்திகேயன் அவர்களை இளைய தளபதி சிவகார்த்திகேயன் என்று
  அழைப்போமா….உங்கள் உங்கள் ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா….???

  சொல்லுங்க விஜய் சொல்லுங்க…..

  பட்டமே வேண்டாம் என்று சொன்ன அந்த “தல” எங்கே….நீங்கள் எங்கே…??

  அடுத்த சூப்பர் ஸ்டார் என்று காசு கொடுத்து வாங்க தெரிந்த உங்களுக்கு…அடுத்த மக்கள் திலகம் என பட்டம் வாங்க ஏன் காசு இல்லையா…??

  உண்மைய சொல்லுங்க காசு இல்லையா…?? இல்ல அந்த டைட்டில் வாங்க நெஞ்சில வீரம் இல்லையா..??

  ரஜினி
  என்ன பண்ணாலும் அமைதியா இருப்பாரு அந்த தைரியம்…அவரு எப்பவும் அமைதியா
  தான் இருப்பாரு…ஆனா அவர மாறி நாங்களும் இருப்போம் நெனச்சா தப்பு
  விஜய்….

  அண்ணானு சினிமால பேரு வெச்சதுகே நீங்க பட்ட பாடு
  இருக்கே…எங்களுக்கே பாவமா இருந்துச்சு…..இதுல நீங்க….??? விடுங்க
  அதெல்லாம் என் வாயால சொல்லிக்கிட்டு

  நல்லா பிறந்தநாள கொண்டாடுங்க…உதவி செய்யுங்க ஆனா அத பப்ளிசிட்டி செய்யாதீங்க…அந்த காசுல கூட நாலு பேருக்கு நல்லது பண்ணலாம்….

  ஒரு உண்மையான ரஜினி எனும் மனிதனின் ரசிகன் அல்ல பக்தன் அல்ல..எங்க உறவை சொல்ல வார்த்தையே இல்ல

  ஒன்றை
  உணர்ந்து கொண்டீர்களா விஜய் ஒவ்வொரு முறையும் நீங்கள் ரஜினியை சீண்டி
  பார்க்க நினைத்த போதெல்லாம் அவர் விஸ்வரூபங்கள் எடுத்து வெற்றி
  கண்டுள்ளார்…..அதற்கு காரணம், அவரே சொல்லிருகாரு

  “போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்”
  ஆனா அவரு ஒன்ன சொல்ல மறந்துட்டாரு அந்த ஆண்டவன விட அவர கடவுளா நெனைகுற நாங்க இருக்கோம்……

  உலகின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள் உங்களுக்கு…..

  Arun
  17 • Reply•Share ›

 5. Jkp

  அட விடுங்கப்பா ! சின்னப் பசங்க சூப்பர் ஸ்டார் யாருன்னு தான சொல்லிக்கிட்டு திரியுராyங்க அத தாண்டி வேற எதையும் யோசிக்க முடியில இல்ல அப்பா பறக்குற கொடிய பாத்து காத்தாடி அதை தொட்டு வர ஆசை படும் சிலநேரம் காத்தாடி கொடிய தாண்டிவிட்ட மாதிரி நினைக்கும் ஆனா கொடி இருந்த
  உயரத்திலேயே அதை விட உயரமாய் பறக்கும் காத்தாடி மேல கீழ காற்று அடிக்கிற பக்கம் எல்லாம் அல்லாடும்ன்னு அதுக்கு ஒரைக்காது

 6. raghul

  good article kannan…
  Not worried too much they only talked about who is next ?…

  Balleleika goes global and viral in Choir circles worlover..

  For Compulsory watch, this video…

 7. M. MANO

  சூப்பர் ஸ்டார் – என்றைக்கும் அது நம் தலைவர் மட்டுமே.
  குமுதம் இளைய தலைமுறை நடிகர்களில் யாருக்கு ரசிகர்கள் அதிகம் என்று கணக்கு எடுக்கலாம். ஆனல் இப்படி செய்ய கூடாது. இது நம்மை போன்ற தலைவர் வெறியர்களை உள்ளம் நோக செய்கிறது. குமுதம் – நம்பர் 1 ஜால்ரா புக்.

 8. rajini bala

  சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஏன் இவ்வளவு போட்டி………….?

  அடுத்த சூரியனும்… இல்ல அடுத்த சூப்பர்ஸ்டாரும் இல்ல…….

  ஒரே சூரியன்…..ஒரே சூப்பர் ஸ்டார்…..ஒரே ரஜினி..தான்…dot

  இத்தனைக்கும் காரணம் தலைவர் அந்த பட்டத்துக்கு சேர்த்த மதிப்பு… வேற யாராலையும் இத செய்ய முடியாது dot

  வெற்றிகளை பார்த்து வியந்தவர் தலைவர் இல்ல….வெற்றிகள் தான் இவரை பார்த்து வியந்தது…. !

 9. Raja

  Ore makkal thilagam
  Ore super star
  Ore thala..
  Pattamngarathu thana thedi varanum..
  Nice article..

 10. murugan

  நண்பர் தேனி கண்ணன் அவர்களுக்கு
  அருமையான கட்டுரை
  தலைவர் எதன் பின்னாலும் சென்றதும் இல்லை எதையும் எதிர்பார்ததுமில்லை
  தலைவருடைய சரித்திரத்தில் எல்லாம் அவரை தேடி தாமாக வந்தவை
  அவர் நம்புவதெல்லாம் உயிராக கருதும் தமது ரசிகர்களையும் ,உழைப்பையும் எல்லாம் வல்ல அந்த இறை அருளையும் தான்
  தலைவரைப்பற்றி நமக்கு தெரியும்
  நம்மைபற்றி தலைவருக்கு தெரியும்
  வேறு எவரையும் நாம் ஒரு பொருட்டாக கருதவேண்டிய அவசியமில்லை
  அவருக்கு நிகர் அவரே
  அவரை மிஞ்சுபவரும் அவரே

  தலைவரின் ரசிகன் என்பதில் பெருமிதமும் கர்வமும் கொள்வோம்
  வாழ்க தலைவர்
  வாழ்க வளமுடன் !!!

 11. Ganesan

  இனி எக்காலத்திலும் நாம் குமுதம் வாங்க மாட்டோம் என்று அனைவரும் ஒரு உறுதிமொழி எடுக்க வேண்டும்…

 12. Rajpart

  சரி தான்…….ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் என 2001 ல் ஆரம்பித்தவர் இந்த தல. அப்போ மீடியாக்கள் எப்படி இவ்வளவு துணிச்சலா சொல்றிங்க என கேட்டார்கள். அப்போ கிடைத்த வெற்றி மிதப்பில் நான் தானா வந்தவன் என வசனம் பேசி அதே பத்திரிகையிடம் தன்னம்பிக்கை மிகுந்தவர் என பாராட்டும் பெற்றார். ஓரிரு தினங்களில் தின நாளிதழ் ஒன்று விஜயிடம் இதே கேள்வி கேட்ட பொழுது சூப்பர் ஸ்டார் பட்டம் என்றுமே தலைவர்தான். வேற யாரும் அதை தொட முடியாது. அப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி எழுந்தால் அதில் ஜெயிக்க எனக்கும் ஆசை உண்டு என அடக்கமா சொன்னார். ஆனால் இந்த தல அப்படி பேசியதில் என்ன தப்பு….மனதில் பட்டதை சொல்வேன் அதில் இருந்து பின் வாங்கமாட்டேன் என்றார். அது அப்போது எல்லோருக்கும் தன்னம்பிக்கை யோடு பேசுகிறார் என்று பாராட்டினார்கள். உண்மைதான் ஆனா சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது நீங்கள் சொன்னது போல் யாருக்கும் உரிமை இல்லை என்பது அந்த தலைக்கு புரியல அப்போ. அதற்கு முயற்சி செய்வது தவறு என புரியாத இந்த தல இப்போ புரிந்த பிறகு பட்டம் வேணாம் , ரசிகர் மன்றம் வேணாம் என பிளிறுகிறார்.ஆனா அதிலிருந்து தான் இந்த பிரச்சனையே இன்றைய நடிகர்களுக்கு வேலைய போச்சு……….

 13. மிஸ்டர் பாவலன்

  தேனீ கண்ணன் கட்டுரை சிறப்பா இருக்கு.. வாழ்த்துக்கள்..

  “அடுத்த உலக நாயகன் யாரு?” அப்படீன்னு எதுவும் குமுதம் சர்வே
  வராத வரைக்கும் நல்லது தான் 🙂 🙂

  -== மிஸ்டர் பாவலன் ==-

 14. kumaran

  சூப்பர் என்கிற வார்த்தை க்கு பவர் வந்ததே அதை தலைவருக்கு சூடிய பிறகு தான்

 15. Rajpart

  venkatesh says
  /நீங்கள்
  உண்மையான நடிகராக, இல்லை ஒரு மனிதராக இருந்திருந்தால் அந்த சர்வே நடக்கவே
  விட்டிருக்க கூடாது அதை கண்டித்திருக்க வேண்டும்…./

  சர்வே நடக்க விட்ட மற்ற நடிகர்கள் எல்லாம் உண்மையான நடிகர்களா? மனிதர்களா?

 16. M. MANO

  ராஜேஷ் சொல்வது கண்டிப்பா நடக்கும். நல்ல பதிவு

 17. Thalaivar fan

  @Rajpart
  // since rajni sir has become old i am the NEXT SUPERSTAR and anjaneya is my application for that post-ajithkumar (2002)//
  If u call this open,
  Wat u call it, when vijay n co. was said to b celebrating baba’s “flop” n daring to release Sachin with Chandramukhi in 2005, under the impression tat rajini had lost his power?
  So, this sooo not open or public enuff for u tat he too had the same thing in his mind?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *