BREAKING NEWS
Search

ஒரே ஒரு பாட்ஷாதான்… இரண்டாம் பாகத்தில் அந்த மேஜிக் வராது! – ரஜினி

ஒரே ஒரு பாட்ஷாதான்… இரண்டாம் பாகத்தில் அந்த மேஜிக் வராது! – ரஜினி

basha

ரே ஒரு பாட்ஷாதான்… இரண்டாம் பாகம் எடுத்தா, பாட்ஷா உண்டாக்கிய அந்த மேஜிக் போய்விடும், என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியுள்ளார்.

பாட்ஷா படம் ரஜினியின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் பெரிய மாற்றத்தை உண்டாக்கிய படம். ஒரு ஆட்சியையே மாற்றிய பெருமை அந்தப் படத்துக்கு உண்டு.

தமிழ் சினிமா பார்த்திராத பிரமாண்ட வெற்றியை அந்தப் படம் பெற்றது. இதன் நேரடி தமிழ்ப் பதிப்பு கேரளாவில் நூறு நாட்கள் ஓடியது.

தெலுங்கில் டப் செய்யப்பட்ட பாட்ஷா, நேரடி தெலுங்குப் படங்களைவிட பெரிய வெற்றி பெற்றது.

இந்தப் படம் வெளியாகிகிட்டத்தட்ட 19 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இப்போதும் தொலைக்காட்சியில் இந்தப் படத்தை ஒளிபரப்பினால், வேறு சேனலுக்கு தாவாமல் பார்க்கிறார்கள் மக்கள். இந்தப் படம் முதல் முறை சன் டிவியில் ஒளிபரப்பானபோது, மூன்று மணி நேரம் தமிழகத்தின் தெருக்கள் வெறிச்சோடின. ஏதோ பந்த் நடக்கிறதோ என கேட்க வைக்கும் அளவுக்கு மக்களைக் கட்டிப் போட்டிருந்தது பாட்ஷா.

இந்தப் படத்தை ரீமேக் செய்யப் போவதாக சிலர் கிளம்பினர். ஆனால் தயாரிப்பாளர் ஆர்எம் வீரப்பன், அதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றார்.

உடனே, பாட்ஷா டைப்பில் பல படங்களை தயாரித்து வெளியிட்டனர். விஜய் நடித்த பகவதி, சரத்குமார் நடித்த அரசு என பல படங்களின் கதையமைப்பு பாட்ஷா மாதிரியே இருக்கும்.

இரண்டாவது பாகம்?

இன்னொரு பக்கம் பாட்ஷாவின் இரண்டாம் பாகத்தையாவது எடுக்கலாம் என ரஜினியை அணுகினர். பாட்ஷாவை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, இரண்டாம் பாகக் கதையின் அவுட்லைனை ரஜினியிடம் கூறினார். அவர், முதல் பாகத்தைப் போல இந்த இரண்டாம் பாகம் ஓடுமா என்பதில் சந்தேகமிருக்கிறது என வெளிப்படையாகக் கூறிவிட்டார்.

ஒன் அண்ட் ஒன்லி பாட்ஷா!

இந்த நிலையில், ஜெயா டிவிக்காக சமீபத்தில் ரஜினியை பேட்டி கண்டுள்ளார் நடிகர் விவேக். அப்போது பாட்ஷா இரண்டாம் பாகம் குறித்து ரஜினியிடம் கேள்வி எழுப்பினாராம்.

அதற்கு ரஜினி அளித்த பதில், “ஒரே ஒரு பாட்ஷாதான் தமிழ் சினிமாவில். அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தா, பாட்ஷா உண்டாக்கிய அந்த மேஜிக் போயிரும். இரண்டாம் குறித்து எனக்கு ஐடியா இல்லை!”

-என்வழி




3 thoughts on “ஒரே ஒரு பாட்ஷாதான்… இரண்டாம் பாகத்தில் அந்த மேஜிக் வராது! – ரஜினி

  1. குமரன்

    பாட்ஷா படத்திலேயே அந்தப் பாடல் வந்துவிட்டது.
    ஒரே ஒரு சூரியன்தான்,
    ஒரே ஒரு சந்திரன்தான்,
    ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான்,
    ஒரே ஒரு பாட்ஷாதான்.

  2. மிஸ்டர் பாவலன்

    நன்றி குமரன் அவர்களே! நல்ல பதிவு!
    (பாபா படத்தின் Theme Song-ம் ‘ஏகம்’ (ஒன்று) என்ற பொருளிலேயே
    வரும். பாபா ஒரு நல்ல படம். இன்னும் அதிக நாட்கள் ஓடி இருக்கலாம்.

    -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *