BREAKING NEWS
Search

இந்த கோபமும் கண்ணீரும் வேதனையும் சாபமும்… மக்கள் விரோத அரசுகளைப் பொசுக்கட்டும்!

இந்த கோபமும் கண்ணீரும் வேதனையும் சாபமும்… மக்கள் விரோத அரசுகளைப் பொசுக்கட்டும்!

 

ட்சிக் கொடிகளின் நிறங்கள் மட்டுமே வேறு…
அரசியல்வாதிகள் அனைவருக்கும் சொல்லும் ஒன்றுதான்
செயலும் ஒன்றுதான்.. அது, மக்கள் விரோதம்!

எதிர்க்கட்சியாக இருக்கும் வரை மக்களுக்காக தெருவில் இறங்கு…
அதிகார நாற்காலியில் அமர்ந்ததும் அதே மக்கள் தெருக்களில் புரட்டி எடு.. அதுவே ஜனநாயகம் என உணர்!

தனியொரு அரசியல்வாதிக்கு பலனில்லை எனில் மக்களை அழித்திடு – இது  இன்றைய பாரத வாக்கு!

-என்வழி ஸ்பெஷல்

கூடங்குளம் போராட்டம் – நெஞ்சைப் பதற வைக்கும் படங்கள்
13 thoughts on “இந்த கோபமும் கண்ணீரும் வேதனையும் சாபமும்… மக்கள் விரோத அரசுகளைப் பொசுக்கட்டும்!

 1. chenthil UK

  மக்கள் வயிர் எரிந்தால் அரசாங்கம் மனம் குளிருது போல… வாயில்லா மிருகங்களை circus இல் ஆட்டுவிப்பது போல அரசாங்கம் மக்களை நினைக்கிறது… எதிர்த்தால் சுட்டு தள்ளுவது ஆங்கில அராஜகத்தை மறுபடியும் மக்கள் மேல் திணிகின்றனர் .. பேர் தான் ஜனநாயக ஆட்சி நடபதோ அடக்குமுறை ஆட்சி

 2. குமரன்

  எந்தப் பிரசினைக்கும் அரசின் அணுகுமுறை பேச்சுவார்த்தை அடிப்படையில் அமைவதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

  போலீசை வைத்து அடக்கி ஆளும் முறை என்றுமே உதவாது.

  ஆனால், போலீஸ் அதிகாரிகளும் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் எப்போதும் தமக்கு ஆளும் அரசியல் தலைவரிடம் செல்வாக்கு இருக்க வேண்டும் என்பதற்காக அடக்குமுறை வழிகளையே அவர்களுக்கு போதிப்பார்கள், அறிவுறுத்துவார்கள். அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் எவரானாலும், இந்தமாதிரி அரை வேக்காட்டு அறிவுறுத்தல்களைப் புறம் தள்ளும் அறிவும் பக்குவமும் உடையவர்களாக இருந்தால்தான் நல்லது. அது எளிதில் அமைவதில்லை.

  நம் மக்கள் எதற்குத் தகுதியானவர்களோ அதுதான் நம் மக்களுக்குக் கிடைக்கும்!

  I often say ….
  We get what we deserve
  We deserve what we get!

 3. chozan

  ஜெவின் நடவடிக்கை சரியே , உதயகுமாரை முதலிலேயே கைது செய்திருக்கவேண்டும்

  //அப்பாவி மக்களை தூண்டிவிட்டு அவர்களை பலிகடா ஆக்கியதுதான் மிச்சம். சிறுவர் சிறுமியை கொண்டு யாரவது போராட்டம் நடத்துவார்களா?//

  மின்சாரம் வேண்டும் ஆனால் கூடங்குளத்தில் வேண்டாம். வினோவின் ஒருதலை பட்சமான இதுபோன்ற கட்டுரைகள் வெறுப்பை உண்டாக்குகிறது.
  நீங்கள் எழுதவேண்டியது உதயகுமாரை போன்றவர்களை கண்டித்துதான்.

  பல மாதங்களாக பொறுத்த பிறகுதான் இப்படியோரு போலீஸ் நடவடிக்கை. எடுத்த விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம் நடவடிக்கை தவறு இல்லை.
  _____________________

  உங்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். காரணம் பாதிக்கப் போவது நீங்கள் அல்ல. நாம் நேரடியாக பாதிக்காத வரை, எதைப் பற்றியும் அக்கறை கொள்ளமாட்டோம். அதுபற்றி தொடர்ந்து பேசினால் வெறுப்பு வந்துவிடும்.

  நம்மைப் பொறுத்தவரை, கூடங்குளம் என்றல்ல… எங்குமே அணு உலை வேண்டாம் என்பதே நிலைப்பாடு. காரணம் அணுஉலைகள் மின்சாரம் தயாரிப்பதில் தோற்றுப் போனவை. 1984-ம் ஆண்டிலிருந்து இயங்கும் கல்பாக்கம் அணு உலைகளின் மொத்த மின் உற்பத்தித் திறனே வெறும் 440 மெகாவாட்ஸ். ஆனால் அதைக்கூட முழுசாக உற்பத்தி பண்ண முடியவில்லை. இன்றுவரை முதல் அணு உலையில் 120 மெகா வாட்டும், இரண்டாம் அணு உலையில் 80 மெகாவாட்டும்தான் உற்பத்தி செய்கிறார்கள். மின்னிழப்பு போக, நிகரமாக கிடைக்கும் மின்சாரம் வெறும் 150 மெகாவாட்தான். இது இன்று RTI மூலம் பெறப்பட்ட தகவல். சென்னை நகர மின்தேவையே 300 மெகாவாட்டுக்கு மேல் என்பது உங்களுக்கு தெரியுமா?

  அணுஉலைகள் நிறுவப்படுவதன் பின்னணி வேறு. கேவலம் ஒரு பட்டாசுத் தொழிற்சாலையை பாதுகாப்பாக நடத்தத் துப்பில்லாத இந்த நாட்டுக்கு, அதிகபட்ச ஆபத்தான அணுஉலை ஒரு கேடா?

  அறிவில்லாத மடையன்தான் உதயகுமாரை கண்டிப்பான். உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக நின்று போராடும் அவரை, சொகுசாக உட்கார்ந்து கொண்டு ‘எவன் செத்தாலும் என் வீட்டில் விளக்கெரியணும் என்ற நினைப்பு கொண்டவர்கள்’ கண்டிக்கவே செய்வார்கள். கூடங்குளத்தின் ‘பலன்’ இன்னும் சில ஆண்டுகளில் பல்லிளிக்கும்போது, அதன் பாதிப்பு தெரியாத இடத்தில் ஓடிப் போய் பதுங்கிக் கொண்டிருப்பார்கள் உங்களைப் போன்றவர்கள்.

  -வினோ

 4. மு. செந்தில் குமார்

  மக்கள் ஆட்சியில் : மக்கள் எதற்குத் தகுதியானவர்களோ அதுதான் அவர்களுக்கு கிடைக்கும்! (திரு குமரன் அவர்களின் இந்த கருத்துதான் என் மனதில் எப்பவும் ஓடும் )

  வன்முறையில் ஈடுபடாமல் போராட்டம் நடத்தும் மக்களை ஆயுதம் பயன் படுத்தி கலைப்பது / வன்முறையில் ஈடுபடுவது – கண்டிப்பாக குற்றம். (அறிவளவில் நான் அணு உலை ஆதரவாளன் என்றாலும் கூட)

  புத்தி சாதுர்யத்தால் செய்ய வேண்டியதை, இயலாமையால் வன்முறையால் செய்து இருக்கிறார்கள்.

  இங்கே (தமிழ் நாட்டில்) நியாயத்தை ஆதரிப்பதைவிட, செய்தது தனக்கு விருப்பமான கட்சி என்றால் அமைதி காக்கின்ற மனநிலையை பெற்றிருக்கிறார்கள்.

 5. தினகர்

  ”நியாயத்தை ஆதரிப்பதைவிட, செய்தது தனக்கு விருப்பமான கட்சி என்றால் அமைதி காக்கின்ற மனநிலையை பெற்றிருக்கிறார்கள்.”

  நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறீர்கள் செந்தில் குமார்.
  இது போன்ற கருத்துக்களைத்தான் என் கருத்து, தேவராஜன் போன்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள். உடனே அவர்களுக்கு கட்சி முத்திரை குத்தி விட்டார்கள். பார்த்து இருங்க. உங்களுக்கும் அப்படி ஒரு முத்திரை கிடைக்கலாம். 🙂

 6. Krishna

  மத்திய அமைச்சர் நாராயணசாமி இந்த நடவடிக்கைகள் போதாது, இன்னும் கடுமையாக நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று நேற்றைய பெட்டியில் தெரிவித்தார். இந்த நிகழ்வுகளுக்கு உதயகுமாரே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார். ஆக மத்திய அரசின் அழுத்தம் இந்த விஷயத்தில் மாநில அரசை ரொம்பவே பாதித்துள்ளது. ஆனால் ஒன்று, போராட்டக்காரர்கள் இரண்டு தவறு செய்திருக்கிறார்கள். ஒன்று – பெண்களையும் குழந்தைகளையும் அங்கு அழைத்து வந்தது, இரண்டு – அணு உலைக்கு மிக அருகாமையில் செல்ல முயன்றது. அவர்கள் இந்த இரண்டையும் தவிர்த்திருக்க வேண்டும். நம் நாட்டின் பிரதமரே இவர்களுக்கு வெளி நாட்டிலிருந்து நிதி வருகிறது என்று சொன்ன பிறகு, இதற்கு ஒரு நம்பகத்தன்மை வந்து விடுகிறது. இதையும் அவர்கள் இல்லை என்று நிரூபிக்க கடமை பட்டிருக்கிறார்கள்.
  _______________
  திரு கிருஷ்ணா,
  இந்த விஷயத்தில் பிரதமர் கொஞ்சமும் பொறுப்பின்றி வாய்க்கு வந்ததை உளறினார். நாராயணசாமியையும் மிஞ்சினார் என்பதுதானே உண்மை. பிரதமர் சொன்ன குற்றச்சாட்டுக்கு இன்று வரை ஒரு சின்ன ஆதாரமாவது கொடுக்க முடிந்ததா? பிரதமரே குற்றம்சாட்டிய பிறகும் சட்டம் சும்மாதானே இருந்தது. காரணம் உதயகுமார் மீதும், இந்தப் போராட்டம் மீதும் மத்திய மாநில அரசுகள் சுசாமி தினமலங்கள் சொல்லும் புகார்கள் அத்தனையும் பொய்யானவை என்பதுதான்!

  உதயகுமார் மீது தவறு இருந்தால், ஒரு நிமிடம் கூட இந்த போராட்டக் களத்தில் தாக்குப் பிடிக்க முடியாது. அழித்து நசுக்கியிருப்பார்கள் என்பதை, யோசிக்கத் தெரிந்த அனைவருமே உணரவேண்டாமா!

  -வினோ

 7. குமரன்

  ///அணு உலையை ஆரம்பத்திலேயே எதிர்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்திருக்கவே வந்திருக்காதே. ///

  மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில் இருந்து இந்தியாவும் ரஷியாவும் அணு மின் சக்தி உற்பத்திக்கான கூட்டணி குறித்துப் பேசி வந்தன.

  ராஜீவ் காந்தி ரஷியாவுடனான கூடங்குளம் திட்டத்துக்கான உடன்பாட்டை 1988 -இல் செய்தார். அப்போது தமிழ்நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி என்று நினைக்கிறேன்.

  ஆரம்பத்திலேயே அதுவும் சட்ட மன்றத்திலேயே – 1989 இல் – இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் மார்க்சிஸ்டு கட்சியும் எதிர்த்தன. அப்போது திமுக ஆட்சி.

  தொடர்ந்து எதிருப்பு இருந்துதான் வந்திருக்கிறது. இப்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

  //புத்தி சாதுர்யத்தால் செய்ய வேண்டியதை, இயலாமையால் வன்முறையால் செய்து இருக்கிறார்கள்./// (செந்தில்குமார்)

  அவர்களும் உச்சநீதி மன்றம் வரை பார்த்தாகி விட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்கள் பக்கம் இல்லை. தீர்ப்பு அப்படித்தான் இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே.

  ஆயிரக் கணக்கான கோடிகளின் மீது இருக்கும் பிரமிப்பு ஆயிரக் கணக்கான உயிர்களின் மீது இருப்பதில்லை!! இது வேதனையான உண்மை. இதனால்தான் ஈழத்து உயிர் இழப்பை விட கட்சி அபிமானம் பலருக்கு முக்கியமாகி விட்டது.

  அரசு போலீஸ் மூலம் செய்யும் வன்முறை மக்களை தவறான பாதைக்கே இட்டுச் செல்லும்.

  இதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குறித்த பிரகடனத்தில் எடுத்த எடுப்பிலேயே பின்வருமாறு அறிவிக்கிறது:

  Whereas recognition of the inherent dignity and of the equal and inalienable rights of all members of the human family is the foundation of freedom, justice and peace in the world,

  Whereas disregard and contempt for human rights have resulted in barbarous acts which have outraged the conscience of mankind, and the advent of a world in which human beings shall enjoy freedom of speech and belief and freedom from fear and want has been proclaimed as the highest aspiration of the common people,

  Whereas it is essential, if man is not to be compelled to have recourse, as a last resort, to rebellion against tyranny and oppression, that human rights should be protected by the rule of law,

  அதாவது மனித உரிமை மீறல்களால்தான் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் நடந்து அவற்றால் மனிதகுலத்தின் மனச்சாட்சி கண்மூடித்தனமாகச் சிதைக்கப் படுகிறது.

  மனிதன் தனது இறுதி வாய்ப்பாக அடக்குமுறைக்கும், கொடுங்கோன்மைக்கும் எதிராகக் கிளர்ந்து (ஆயுதம், வன்முறை ஆகியவை வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை) எழாமல் இருக்க வேண்டுமானால் மனித உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும்.

  இதனால்தான் பேச்சுவார்த்தை மூலம் கிடைக்கும் தீர்வு அமிதியானதாக இருக்கிறது. வன்முறையால் தீர்வு தேடும் நிலைக்கு மக்களை அரசு தள்ளக் கூடாது என்கிறோம்.

 8. குமரன்

  /// ஒன்று – பெண்களையும் குழந்தைகளையும் அங்கு அழைத்து வந்தது, ///

  நல்ல வேளை போராட்டக் காரர்களே அழைத்து வரப்பட்டவர்கள் என்ற குற்றச் சாட்டு எழ வில்லை!

  போராட்டத்தின் நோக்கம் பிறிதொரு நாளில் நிகழக் கூடிய உயிர்ப் பழியையும், உடல் உபாதைகளையும் தவிர்ப்பது ஆகும். அப்படி மீறி நிகழும்போது பெண்களும் குழந்தைகளும் கூட பாதிக்கப்படுவார்கள் என்பதுதானே உண்மை.

  இதென்ன பண்டைய காலத்துப் பாரத முறைப்படியான போரா? பெண்களும் குழந்தைகளும் பாதிக்காமல் போர் புரியும் நெறி இந்தியாவுக்கு மட்டுமே உரித்தானது, அதனால்தான் இந்தியா அடிமைப் பட்டது.

  போராட்டத்தின் நோக்கம் உயிர்ப் பழியைத் தடுப்பதும், உடல் உபாதைகளைத் தடுப்பதும் என்னும்போது பாதிப்புக்கு ஆளாகக் கூடிய போராட்டம் நடக்கும் கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன், அவர்கள் வன்முறையில் ஈடுபடும் நோக்கம் அற்றவர்கள் என்பதை இதுவே உறுதியாகச் சாட்சி கூறும் அல்லவா?

 9. Kumar

  தங்க தலைவர் கருணாநிதி இத பத்தி வாயே திறக்கலையே…..அவரும் மத்திய அரசில் தானே இருக்கிறார்….ஈழ மக்களை காப்பாற்ற டெசோ மாதிரி இதுக்கும் ஏதாவது வச்சு மத்திய அரசை நிறுத்த சொல்லுலாமே….அட எதுக்கு சொல்லணும் நிறுத்தலாமே…after all he is part of central govt…..

 10. Kumar

  Vino, now a days you are spitting venom on people who writes against your stand on any issue….words like ஜென்மங்கள், மடையன் doesn’t leave a good taste….

 11. Kumar

  உதயகுமார் மீது தவறு இருந்தால், ஒரு நிமிடம் கூட இந்த போராட்டக் களத்தில் தாக்குப் பிடிக்க முடியாது. அழித்து நசுக்கியிருப்பார்கள் என்பதை, யோசிக்கத் தெரிந்த அனைவருமே உணரவேண்டாமா!

  இது அன்னா ஹசாரே, கேஜ்ரிவால் போன்றோருக்கும் பொருந்தும் தானே….central govt tried by all means to create a bad impression on Anna team…..why didn’t it crush them yet if Anna team has done anything wrong?

  _____________

  ஹஸாரே, கேஜ்ரிவால் போன்றோர் மீது இதுபோன்ற வன்முறை ஏவப்பட்டிருந்தால், அந்த இயக்கம் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஊழல் எதிர்ப்பை நாம் முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால் அதன் பின்னணியில் உள்ள ஹஸாரே குழுவின் அரசியலும், ஊழலும்தான் அவர்களை இன்று களத்திலிருந்தே விரட்டியிருக்கிறது. ஆனால் அணுஉலைக்கெதிரான போரில் களத்தில் இருப்பது ஏழை மக்கள், மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தையும் சந்ததியையும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற துடிப்புள்ளவர்கள்.

  அணுஉலைப் போராட்டம் வாழ்க்கைப் பிரச்சினை… உண்மையிருக்கிறது. ஹஸாரே குழுவின் ஊழல் ஒழிப்பில் அரசியல் மட்டுமே இருக்கிறது.. உண்மை இல்லை. அதுதான் பிரச்சினை!

  -வினோ

 12. Murali

  இங்கே போராடும் ஒவ்வொருவரும் கூடம்குலம் ஆரம்பித்த பின்னர் மின்சாரத்தை வேண்டாம் என்பார்களா . இங்கே போராடும் பலர் அரசியல் பின்னணில் தான். காசுக்கு ஒட்டு என்பது போல . சுயமாக யோசிக்கும் மனிதர்கள் இங்கே வெகு குறைவு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *