BREAKING NEWS
Search

ரஜினி, மகேந்திரன்… பொக்கிஷமாய் சில புகைப்படங்கள் – என்வழி ஸ்பெஷல்

ரஜினி, மகேந்திரன்… பொக்கிஷமாய் சில புகைப்படங்கள் – என்வழி ஸ்பெஷல்

யக்குநர்களில் ஹீரோக்களாகப் பார்க்கப்பட்டவர்கள் என்றால் மகேந்திரனும் பாரதிராஜாவும்தான்!

இந்த இருவரின் இயக்கத்திலும் நடித்த ஹீரோக்களையும் தாண்டிய ஹீரோக்களாக ஆளுமை செலுத்தியவர்கள்.

குறிப்பாக மகேந்திரன்… ஒரு குறிஞ்சி மலர் மாதிரி. அவர் பெயரைச் சொன்னாலே அனைத்து ரசிகர்களும் மரியாதை ஆச்சர்யம் ஈர்ப்புடன் கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அத்தனை ஆளுமை மிக்க படைப்பாளி.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மறக்க முடியாத படங்களுக்குச் சொந்தக்காரர். ஒவ்வொரு படமும் ஒரு விதம். காட்சிகளின் செய்நேர்த்தி, இசையைப் பயன்படுத்திய விதம், நடிகர்களின் திறமையை மிளரச் செய்த பாங்கில்… மகேந்திரன் சிகரம். அதனால்தான் தன்னை அறிமுகப்படுத்திய குருவிடமே தனக்குப் பிடித்தமான இயக்குநர் என மகேந்திரனைக் குறிப்பிட்டார் ரஜினி!


மகேந்திரனின் மகன் இயக்குநர் ஜான் ரோஷன். சச்சின் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். ஆணிவேர் என்ற தமிழர் உணர்வோடு கலந்த அருமையான படத்தை ஈழப் போர் நடந்த களத்துக்கே போய் உருவாக்கியவர். இப்போது இரு புதிய படங்களை இயக்கி வருகிறார்.

தந்தையின் பொக்கிஷத்திலிருந்து சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள சில படங்கள் நினைவுகளை கலைத்து, மனதை பால்யத்துக்கே இழுத்துப்போய்விட்டன. அந்தப் படங்களில், பெரும்பாலானவை மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த முள்ளும் மலரும் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்டவை. தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் ஒரு அற்புதமான க்ளாஸிக்!

ரஜினி, மகேந்திரன், பாலு மகேந்திரா, ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு, இளையராஜா, ஜேசுதாஸ்… மனமெங்கும் செந்தாழம்பூவின் வாசனை கமகமக்கிறது!

அந்தப் படங்களுக்கு வர்ணனை எழுதுவது கடினம். பார்த்து ரசிப்பது மகா இனிமை. கஷ்டமான வேலையை நான் விட்டுவிட்டேன்…. இனிமையை நீங்கள் அனுபவிக்கலாம்!


நன்றி: இயக்குநர் ஜான் ரோஷன்

-என்வழி




6 thoughts on “ரஜினி, மகேந்திரன்… பொக்கிஷமாய் சில புகைப்படங்கள் – என்வழி ஸ்பெஷல்

  1. Ravi

    எவ்வளவு மக்கள் இருந்தாலும் நம் கண்கள் தலைவரை கண்ட பிறகே அடுத்தவரை காணும் மாயம் எப்படி என்றே புரியவில்லை. As usual, Thalaivar looks great! Thanks!!!

  2. Manoharan

    அந்த ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *