BREAKING NEWS
Search

ராமானுஜங்களும் ரயில் சீட்டுகளும்!

ராமானுஜங்களும் ரயில் சீட்டுகளும்!

எந்நாளும் பொருந்தும் அண்ணலின் ஆய்வுக் கட்டுரை!

எந்நாளும் பொருந்தும் அண்ணலின் ஆய்வுக் கட்டுரை!

வர் பெயர் ராமானுஜம்.

தன்னுடைய மூட்டை முடிச்சுக்களோடு சென்னை செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார்.

அவரைப்போலவே மூட்டை முடிச்சுகளோடு இன்னும் சிலர் காத்திருக்கிறார்கள். காலை ரயில் என்பதால் காலியாக இருக்கிறது.

தயாராக வந்திருந்த எல்லோரும் கம்பார்ட்மெண்டில் ஏறிக்கொள்கிறார்கள்.

காலியாக உள்ள இடங்களில் எல்லாம் தன்னுடைய மூட்டை முடிச்சுக்களை வரிசையாக அடுக்கிவைத்து விட்டு, காலை சாஷ்டாங்கமாக நீட்டிப் படுத்து சொகுசாக தூங்கத் தொடங்குகிறார் ராமானுஜம். அவரைப் போலவே அந்த சிலரும் தூங்கத் தொடங்குகிறார்கள்.

திருச்சி ஸ்டேஷன் வந்ததும் டிக்கெட் வாங்கி காத்திருந்த சிலர் அந்த கம்பார்ட்மெண்டில் ஏறுகிறார்கள். அவர்களுக்கு உட்கார இடம் வேண்டும் என்பதால், சலித்துக்கொண்டே தன்னுடைய மூட்டை முடிச்சுக்களை எடுத்து கீழே வைக்கிறார் ராமானுஜம். மீண்டும் முனகிக்கொண்டே காலை நீட்டிப் படுத்து சொகுசாக தூங்கத் தொடங்குகிறார். லால்குடி, விருத்தாசலம் என்று சிலர் ஏறும்போதும் இந்த முனகல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

விழுப்புரம் வந்ததும் இன்னும் நிறையபேர் டிக்கெட் வாங்கி அந்த கம்பார்ட்மெண்டில் ஏறினார்கள். கால் நீட்டிப் படுத்திருந்த ராமானுஜம் இப்போது வேறு வழியின்றி எழுந்து உட்கார்ந்து கொண்டார். அப்போதும் மூன்று பேர் உட்கார வேண்டிய இடத்தில் இவர் ஒருவரே தாராளமாக உட்கார்ந்திருந்தார். “இவர்களெல்லாம் ரயிலில் வரவில்லை என்று யார் அழுதார்கள்? கண்டவர்களெல்லாம் ஏறி ரயிலின் தரத்தை குறைத்துவிட்டாளே,” என்ற வருத்தம் அவருக்கு.

செங்கல்பட்டு வந்ததும் கூட்டம் இன்னும் அதிகமானது. தனக்கு உரிய ஒற்றை சீட்டில் அமரவேண்டிய நிலைக்கு வந்தார் ராமானுஜம். கால்நீட்டிப் படுத்து சொகுசாக பயணித்த தன் பயணம் தடைபட்டது அவருக்கு தீராத சோகத்தையும், சகபயணிகள் மீது அதீத கோபத்தையும் உண்டாக்கியது. ஆனால் பயணிகள் எல்லோரிடமும் டிக்கெட் வேறு இருந்ததால் அவரால் பொருமுவதை தவிர எதுவும் செய்ய முடியவில்லை.

பக்கத்தில் அவருடைய பொருமலை பொறுமையாக கேட்டுகொண்டிருந்த ராமசாமி சொன்னார், ‘உங்களுக்குரிய இடத்தை யாரும் இங்கு கேட்கவே இல்லை நண்பா. இங்கு அவரவர்கள் தங்களுக்கு உரிய இடத்தைதான் தேடி வருகிறார்கள்.. இதுவரை உட்காரவே வழியில்லாதவர்கள் உரிமையுடன் உட்கார முயற்சிக்கிறார்கள்,’ என்று எவ்வளவோ எடுத்து சொன்னார். ராமானுஜம் கேட்டபாடில்லை.

கூட்டம் இன்னும் அதிகமானது. இப்போது பெண்களுக்கு சிலர் தங்கள் இடங்களை கொடுக்க வேண்டி இருந்தது. அப்போதும் சிலர் முனகத் தொடங்கினார்கள். சிலர் மாற்றுத் திறனாளிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டி இருந்தது. அப்போதும் சிலர் முனகிக் கொண்டே இருந்தார்கள்.

ரயில் சென்னை வந்து சேர்ந்தது. எல்லோரும் இறங்கி தங்கள் வீடுகளுக்குப் போனார்கள். ரயிலின் இலக்கு கும்பகோணத்திற்கு மாற்றப்படுகிறது.

தற்போதும் டிக்கெட் வாங்கி காத்திருக்கும் பயணிகளை ராமானுஜம் கோபமாகவே பார்த்துக்கொண்டு போகிறார்.

ராமானுஜத்திடம் யாரேனும் சொல்லவேண்டும். நீங்கள் சொகுசாக இதுவரை பயணித்தது, மற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட (உரிமையான) இடத்தில் என்று!

-நெல்சன் சேவியர்

செய்தி: மோடி அரசை விமர்சித்தார்கள் என்று கூறி, முழுக்க பார்ப்பணர் ஆதிக்கத்தில் உள்ள ஐஐடி (ஐயர் அன்ட் ஐயங்கார் ட்ரஸ்ட் ஆப் மெட்ராஸ் என்றும் சொல்கிறார்கள்) யில் அம்பேத்கர் – பெரியார் மாணவர் வட்டத்துக்கு (APSC) மத்திய அரசு அங்கீகார மறுப்பு செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கர், பெரியார் ஆகிய பெயர்களே பெரும்பான்மை இனத்தின் பிரதிநிதிகள்தான் என்பதை மீண்டும் அழுத்தமாக நிரூபித்திருக்கும் சிறுபான்மை அதிகார வர்க்கத்தை அடையாளம் காண்போம். இது நமக்கான அரசல்ல!

-என்வழி
6 thoughts on “ராமானுஜங்களும் ரயில் சீட்டுகளும்!

 1. Ananth

  தவறான நோக்கத்தில் எழுத பட்டுள்ளது . தவறான கருத்துக்களுடன்.

 2. குமரன்

  பொய்யுரைகளைப் பரப்பியே சிலர் அதிகாரசுகத்தைக் கடந்த பல பத்தாண்டுகளாக அனுபவித்துவருகின்றனர்.

  அம்பேத்கார் பெரியார் மாணவர் வட்டம் என்ற பெயரைச் சூட்டியதில் பயன்படுத்திய இவர்களது உள்நோக்கம் வெளிவந்து விட்டது.

  பெரியாரை அவரது இயற்பெயரால் ஈ.வே.,ரா என்று குறிக்காமல் பெரியார் என்று குறித்த இவர்கள், அண்ணல் பாபாசாகேப் அம்பேத்காரை மட்டும் வெறுமே அம்பேத்கார் என்று குறிக்கும் அளவுக்கு இவர்களது பாசத்திலும் மரியாதையிலும் பாரபட்சம் இருக்கிறது.

  சரி, அண்ணலும் பெரியாரும் ஒன்றா? ஒரே மாதிரியான ஒத்த நோக்கத்துடன் போராடியவகளா? இந்தக் கேள்விக்கு விடை அனைவருக்கும் தெரியும். அண்ணல் ஒருவர்தான் எஸ்.சி, எஸ்.டி என அரசியல் அமைப்புச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட, தலித் எனத் தற்காலத்தில் வசக்ங்கப் படுகின்ற தாழ்த்தப்பட்ட ஒடுக்கப் பட்ட பிரிவினருக்காக அவர்களது கல்வி, வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டாதோடு, வெறும் பேச்சோடு நிற்காமல் ஆக்கபூர்வமாக – மறுமுறை அழுத்தத்தோடு சொல்கிறேன்- ஆக்கபூர்வமாகத் தொண்டாற்றியவர். அண்ணல் பார்ப்பனர்களை விமரிசித்ததெல்லாவற்றிலும் ஆக்க பூவமான அணுகுமுறை இருந்தது. அவரது எழுத்துக்கள் இன்றும் அவரது தலைசிறந்த அணுகுமுறைக்குச் சான்றளிக்கின்றன.

  ஆனால் பெரியாரோ, டாக்டர், நாயர், சர்.பிட்டி தியாகராசச் செட்டியார், சர்.ராஜா அண்ணாமலைச் செட்டியார், ஆர்க்காட்டு முதலியார்கள், கீழவெண்மணி கோபாலகிருஷ்ண நாயுடு வரியிலான அனைத்து பிராமணரல்லாத முற்பட்ட வகுப்பினரின் பாதுகாவலராக அவர்களைக் காக்கப் பார்ப்பனர்களைத் தாக்கியே பெரும்புகழ் எய்தியவர். கருணா நிதியின் தலைமையிலான தி.மு.கவாவது பிற்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 1971இல் 31%க்கு உயர்த்தியது. 1980இல் எம்.ஜி.ஆரின் அ.தி,மு.க பிற்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 50% ஆக்கியது.

  பெரியாரோ ஆக்க பூர்வமான வழிமுறைகளால் தனக்குப் பொறுப்பு வந்துவிடக் கூடாது என்றே தேர்தலில் நிற்பதைத் தவிர்த்தார். அண்ணா அவர்கள் எத்தனை கேட்டும் தேர்தலில் நிறக பெரியார் ஒப்பாததாலும்தான் திமுக பிறந்தது. பேச்சோடு நின்றால் நிம்மதியாக இருக்கலாம், ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் கொண்டால் எல்லார் கேள்விக்கும் பதில் சொல்லவேண்டுமே? இது தவிர, பெரியார் தலித் விடுதலைக்கோ அல்லது கல்வி, வேளை வாய்ப்பு முன்னேற்றத்துக்கோ போராடினார் என்று சொல்லவேமுடியவில்லையே? அவர் பேசியது சூத்திரன் என்று பொதுவாக அனைத்து பிராமணர் அல்லாதோருக்காக அன்றி, தலித் மக்களுக்காக மட்டுமே என்று அல்ல. வைக்கம் போராட்டம் காங்கிரஸ் கட்சியின் ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் ஒரு அங்கம்தான், அதில் பெரியாருக்கு இடப்பட்ட இடம் வைக்கம் என்பதுதானே உண்மை?

  ஆனால் அண்ணல் அம்பேத்காரோ, ஆராய்ச்சி, எழுத்து, அழுபவர் பிரிட்டிஷ் ஆனாலும் நமது இந்தியர் எவராயினும் அவருடன் பேச்சுவார்த்தை, அறவழியில் அமைதிவழியில் ஜனநாயக முறையில் இடஒதுக்கீட்டை அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்தார். அண்ணலையும், பெரியாரையும் சமத் தட்டில் வைப்பது அண்ணலுக்குச் செய்யும் சிறப்பு அல்ல, அத்துடன் நில்லாது அண்ணலை அம்பேத்கார் என்று இயற்பெயரிலும், பெரியாரை உயர்த்தும் பட்டத்திலும் வைத்ததே இந்த அமைப்பின் நோக்கத்தைப் பறை சாற்றும்.

  ஆக, அம்பேத்கார் இவர்களுக்கு ஒரு அடையாளத்தைத் தருவதற்கான சொல்லே அல்லாமல், கொள்கைப் பிடிப்பு காரணம் அல்ல. இன்னமும் இருக்கிறது. பிறகு தொடர்கிறேன்.

 3. குமரன்

  //அழுபவர் பிரிட்டிஷ் ஆனாலும் நமது இந்தியர் எவராயினும்//

  இதனை “ஆள்பவர் பிரிட்டிஷ் ஆனாலும் நமது இந்தியர் எவராயினும்” எனப் படிக்கவும், தயவு செய்து பிழை பொறுக்கவும்.

 4. குமரன்

  ஜனநாயக வாலிபர் சங்கம் என்ற பெயரில் இளம் சிறுவர்களை வெளியில் இருந்து கொண்டுவந்து ஐ.ஐ.டியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது ஆகும்.

  மார்க்சிய லெனினியக் கருத்துக்களைப் பரப்பவேண்டும் என்றால் அதை வெளிப்படையாக சொல்லிப் பரப்பட்டும், அதில் ஏதும் தவறில்லை. அதைவிட்டுவிட்டு, அம்பேத்காரது பெயரைப் பயன்படுத்தி சாதிய வெறியைத் தூண்டி விட்டு சாதி வெறுப்பு அரசியல் போர்வையில் மார்க்சிய லெனினிய அரசியல் செய்வது நரித்தனம்.

  இதில் ஈடுபட்டுள்ள கும்பல்தான் கடந்த நவம்பர் 2014 இல் ஐ.ஐ.டியில் முத்தப் புரட்சியை நடத்தியது.

  Mr Milind Brahme has been nominated as the Advisor of this APSC at the request of the APSC. This Milind Brahme was the one who was prominant at the Kiss of Love – Facebook event on that day. He carefully avoided participation of his family in the event, while he went merrily kissing those who had come for the event! Such is the Quality of the persons behind this “Study Centre” Babasaheb and Periyar would never have dreamt that their names would be misused so much.

 5. குமரன்

  ஐ.ஐ.டிகிறிஸ்தவ பெல்லோஷிப் அமைப்பில் இருப்பவர்கள் இந்த அமைப்பிலும் அதிக ஈடுபாடு காட்டுவது ஏன் என்பதையும் கவனிக்க வேண்டும்.

 6. குமரன்

  நான் சொல்லவருவது இதுதான்: இந்த ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வட்டம் துவக்கி இயக்குபவர்களின் நோக்கம் பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளைப் பரப்புதலோ அல்லது பெரியாரின் கொள்கைகளைப் பரப்புதலோ இல்லை.

  பாபாசாகேப், பெரியார் ஆகியோர் பெயரை வைத்துக்கொண்டு சாதி வெறுப்பு அரசியலைப் போர்வையாக்கி (அதுவும் கூட பிரதான நோக்கம் அல்ல – அதுவும் போர்வை மட்டுமே), திட்டமிட்ட உள்நோக்கத் தோடு வேறு இலக்கை நோக்கிச் செயல்படுவதே இவர்களது நோக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *