BREAKING NEWS
Search

தனி ஒருவன், தவிர்க்க முடியாதவன்!

தனி ஒருவன்

Thani-Oruvan-Review-

த்திரிகையாளர் காட்சிகளை விட, மக்களோடு மக்களாக தியேட்டரில் பார்ப்பதுதான் அற்புதமான அனுபவமாக உள்ளது.

தனி ஒருவன் படத்தை இரண்டாம் முறை பார்த்துவிட்டு இந்த கட்டுரையை எழுதுகிறேன். படத்தில் எந்தக் காட்சியும் அலுப்புத் தட்டவில்லை. படம் முடிந்து மோகன் ராஜா பெயர் போட்ட பிறகும் கூட, மக்கள் அசையாமல் இருக்கையில் அமர்ந்திருந்ததைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.

படத்தின் கதையைச் சொல்லி விமர்சனம் எழுதும் வழக்கத்திலிருந்து விமர்சகர்கள் வெளியில் வர வேண்டும். படத்தின் சிறப்பு, நிறை குறைகளைச் சொன்னால் போதும். படத்தைப் பார்க்கும்போது கதை தெரியட்டுமே!

தனி ஒருவன் ஜெயம் ரவி – அர்விந்த்சாமி – அந்த நான்கு நண்பர்கள் – தம்பி ராமய்யாவை அப்படி ரசிக்கிறார்கள் ரசிகர்கள்.

ஜெயம் ரவிக்கு ரசிகனாகவே ஆகிவிட்டேன். அப்படி ஒரு உடல் மொழி, பர்ஃபெக்ஷன், வேடப் பொருத்தம்!

கடைசி காட்சியில் ஹீரோவை தூக்கிச் சாப்பிட்டுவிடும் அர்விந்த்சாமி கேரக்டர் ஏனோ சூப்பர் ஸ்டார் ரஜினியை நினைவூட்டியது. சொந்தத் தம்பி ஹீரோவாக நடித்தாலும், கதை என்ன கேட்கிறதோ அதை மட்டுமே செய்த மோகன் ராஜாவின் தொழில் நேர்மைக்கு கிடைத்த வெற்றி இது.

சில காட்சிகளே வரும் தம்பி ராமய்யாவை இன்னொரு ஹீரோ என கமெண்ட்கள் வந்ததைக் கேட்க முடிந்தது. இறுக்கமான கதையில் அந்த லகுவான பாத்திரம் அந்த அளவு எடுபடுகிறது.

கதாநாயகிகள் என்றால் லூசுத்தனமாகக் காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் இன்றைய சினிமாவில், நயன்தாராவை ஒரு சாதுர்யமிக்க பெண்ணாகக் காட்டியதை ரசிக்க முடிந்தது. இன்னும் பத்தாண்டுகள் நடித்தாலும் நயன்தாராவை ரசிக்கலாம். அபார திறமைசாலி.

ஒரு மாதத்துக்கு முன் இந்தப் படத்துக்காக மோகன் ராஜாவை பேட்டியெடுத்தபோது, இந்தப் படம் குறித்தும், அதன் வெற்றி குறித்தும் அத்தனை நம்பிக்கையுடன் பேசினார். படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் அவரது அபார உழைப்பு தெரிந்தது. குறிப்பாக வசனங்களில் அவரது பங்களிப்பு…

இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பீமா பாடலை நினைவூட்டும் பின்னணி இசையைத் தவிர்த்து வேறு புதிதாக முயற்சித்திருக்கலாம். அந்த கடைசி டூயட்டை தவிர்த்திருக்கலாம். செயின் பறிப்பு கும்பலுடன் ரவியும் அவரது சகாக்களும் மோதும் காட்சியில் ராம்ஜியின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.

மோகன் ராஜா மாதிரியான உற்சாக இளைஞர்கள் ஜெயிப்பது, நாமே ஜெயிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. பாராட்டுகள்!

-வினோ
என்வழி




3 thoughts on “தனி ஒருவன், தவிர்க்க முடியாதவன்!

  1. Rajagopalan

    i also thought after watching the film…
    What will be the range of this movie if thalaivar was Sidharth Abimanyu…..
    It will be goose bumps…

  2. sharajinis

    எல்லாம் சரி அந்த நயன் பாட்டியை ஏன் இன்னும் இந்த தமிழ் சினிமா பயன் படுத்துகிறது என்று தான் தெரியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *