BREAKING NEWS
Search

ரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்!


சென்னை: 10 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று இரவு 9 மணிக்கு சென்னை திரும்பினார்.

ஏராளமான ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அவரை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

உடல் நல பரிசோதனை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த ஏப்ரல் 26-ம் தேதி அமெரிக்கா சென்றிருந்தார் ரஜினிகாந்த்.

சொந்த வேலைகள் முடிந்ததும் நேற்று இரவு 9 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார் ரஜினி. அவரை ரசிகர்களும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் திரளாக வந்து வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் உற்சாகமாக ரசிகர்களைப் பார்த்து கையசைத்த ரஜினி, போயஸ் கார்டன் சென்றார்.

அங்கு செய்தியாளர்கள் மைக்கை நீட்டியதும், “உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றேன். பேச வேறு ஒன்றும் இல்லை. பின்னர் சந்திக்கிறேன்,” என்றார்.

அங்கு அவரது மனைவி லதா ரஜினிகாந்த் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *