BREAKING NEWS
Search

விநாயகர் சதுர்த்தியன்று தலைவர் தரிசனத்துக்கு தயாராகுங்கள்.. வெளியாகிறது லிங்கா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

விநாயகர் சதுர்த்தியன்று தலைவர் தரிசனத்துக்கு தயாராகுங்கள்.. வெளியாகிறது  லிங்கா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Lingaa - Thalaivar2 copy1

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் முதல் தோற்ற படங்கள் வரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகவிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி – சோனாக்ஷி – அனுஷ்கா ஜோடியாக நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் படம் லிங்கா.

கடந்த மே மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் மைசூரில் தொடங்கியது. 40 நாட்கள் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும், அதே சூட்டோடு ஹைதராபாதில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடந்தது.

இறுதிக் கட்டப் படப்பிடிப்பு இப்போது ஷிமோகாவில் நடந்து வருகிறது. 3000க்கும் மேற்பட்ட துணை நடிகர்களுடன் நடக்கும் இப்படப்பிடிப்பு, இன்னும் மூன்று வாரங்களில் முடிந்துவிடும் எனத் தெரிகிறது.

இதுவரை படத்தின் ஸ்டில்கள் எதுவும் மீடியாவில் வெளியாகாமல் பார்த்துக் கொண்டுள்ளனர். படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்படும் ஸ்டில்கள் மற்றும் ரசிகர்கதள் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட படங்கள் மட்டுமே வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ முதல் போஸ்டரை வரும் விநாயகர் சதுர்த்தி (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர். அன்று காலையிலேயே போஸ்டர் வெளியாகிவிடும் என்று அப்படத்தின் எடிட்டர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு படத்தின் இசை வெளியாகும் என்றும், தலைவரின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

-என்வழி




4 thoughts on “விநாயகர் சதுர்த்தியன்று தலைவர் தரிசனத்துக்கு தயாராகுங்கள்.. வெளியாகிறது லிங்கா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

  1. கணேசன் நா

    காத்திருக்கிறோம் தலைவா – லிங்காவின் தரிசனத்திற்காக

  2. Elango

    முறுக்கு மீசை நன்றாக அமைந்திருகிறது …படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *