BREAKING NEWS
Search

கோச்சடையான் – இந்திய சினிமாவுக்கே பெருமை!

கோச்சடையான் – இந்திய சினிமாவுக்கே பெருமை!

TRICHY1

பேசாத ஊமைப் படத்திற்கு, தியேட்டரில் வாத்தியக் கருவிகளுடன் கதை சொல்பவர்கள் ரொம்ப பிரபலமாம். இன்னார் கதை சொல்கிறார், இன்ன குழு வாசிக்கிறது என்றால் அதற்கென்றே தனிக்கூட்டம் கூடுமாம்.

பேசும் படம் வந்த போது, திரைக்கு பின்னால் இருந்து யாரோ சொல்றாங்க, நம்ம ஆளுங்க கதை சொல்ற மாதிரி இல்லையே, இது ஏதோ ஏமாத்து வேலை என்றெல்லாம் சில ‘அதி மேதாவிகள்’ சொன்னார்களாம். சிவாஜி நடித்த ஏதோ ஒரு ஈஸ்ட்மென் கலர் படத்திற்கு கூட்டிச் சென்ற போது ’அந்தததக்க்க்க்கால’ சினிமா அனுபவத்தைப் பத்தி என் தாத்தா சொன்னது தான் மேலே உள்ளவை.

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தமிழ் சினிமா புதுப்புது மாற்றங்களை கொண்டு வந்திருப்பதை கண்கூடாகப் பார்க்க முடியும்.

இப்போது ‘கோச்சடையான்’ முறை.

புதிய தொழில் நுட்பத்தில், விறுவிறுப்பான கதையோட்டத்துடன் சூப்பர் ஸ்டாரின் ஒரிஜினல் ஸ்டைலில், கம்பீரமான குரலுடன் வந்திருக்கும் கோச்சடையான் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே பெருமை.

படத்தின் முதல் நாயகன் தலைவர்தான். என்றாலும் அவருக்கு நிகரான மரியாதைக்குரியவர் கே.எஸ்.ரவிக்குமார்தான். விறுவிறுப்பான கதை மட்டுமல்ல, எதிர்ப்பார்க்காத திருப்பங்களும் நிறைந்தது. வசனங்களோ குத்தீட்டிகள். கதை பண்டைய தமிழர்கள் காலம் என்றாலும் வசனங்கள்இன்றைய வாழ்வியல் சூழலுக்கு மிகவும் பொருத்தமாகவும் இருக்கின்றன.

அடுத்தவர் இசைப் புயல் ரஹ்மான். இசையிலேயே கோச்சடையானை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றுவிட்டார். ஒவ்வொரு காட்சியிலும் இசையின் பிரம்மாண்டத்தில் அசத்துகிறார். பாத்திரங்களுக்கு உயிரோட்டம் கொடுப்பதில் இசையும் வசனமும் பெரும் பங்கு வகிக்கிறது. படத்துக்கு அறிமுகம் தரும் அவர் குரலை குறிப்பிடாமல் விட முடியுமா?

அமிதாப் பச்சன் சொன்னது போல் இனிமேல் இந்திய சினிமா கோச்சடையானுக்கு முன்னது, பின்னது என்று பிரித்துப் பார்க்கப்படும். மறைந்த நாகேஷ் திரையில் தோன்றியதை பார்க்கும் போது அமிதாப் பச்சனின் கருத்தின் உண்மையை உணர முடிகிறது. படத்தில் நாகேஷ் வரும் போதெல்லாம், ஒரிஜினல் நாகேஷின் நகைச்சுவையை அனுபவிக்க முடிகிறது. ‘வா சின்னவனே’ என்று அவர் தோன்றும் முதல் காட்சியிலேயே மனதை கொள்ளை கொண்டுவிட்டார். டெக்னாலஜியின் ஆச்சரியத்திலும் உறைய வைத்து விட்டார். அங்குதான் நிற்கிறார் நம் சகோதரி சவுந்தர்யா!

rajnikant 1
ஜாக்கி ஷராப் அருமையான வில்லன் என்றால், நாசரை என்னவென்று சொல்வது. அச்சு அசலாக தோன்றும் ஆதியின் வில்லத்தனமும் ரசிக்க வைக்கிறது. பாட்ஷா படத்திலேயே தம்பியாக நடித்திருக்கவேண்டிய சரத் குமார், கவுரவ வேடம் என்றாலும் மிகவும் கவுரமான முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எதிரி நாட்டில் அடிமையாக இருக்கும் தன் நாட்டு மக்களை மீட்டு வந்து தந்தையின் சபதத்தை நிறைவேற்றினாரா ராணா என்பதுதான் ஒற்றை வரிக் கதை என்றாலும், யார் வில்லன் யார் ஹீரோ என்று கணிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையை மிகவும் புத்திசாலித்தனமாகவும், சுவராஸ்யமாகவும் அமைத்துள்ளார் ரவிக்குமார்.

ஏன் அடிமையானர்கள், ராணா அவர்களை எப்படி மீட்டு வந்தார் என்பது திரையில் காணவேண்டிய விஷயங்கள். கோச்சடையான் வரும் காட்சிகள் அதிரடி சரவெடி.

ராணாவிடம் சூப்பர் ஸ்டாரின் துள்ளலும், எள்ளலும், வேகமும் அச்சு அசலாக அப்படியே  இருக்கிறது. தங்கையிடம் காட்டும் பாசம், நண்பனின் காதலை நிறைவேற்றும் லாவகம், காதலியுடன் உருக்கம், அந்த போர்வீரன் என ராணா தோன்றும் காட்சிகள் அனைத்துமே விறுவிறுப்பு. அழகுப் பதுமை தீபிகா அனிமேஷனிலும் ஜொலிக்கிறார். அவருடைய சண்டைக் காட்சிகள், நடனங்கள் மிகவும் இயற்கையாக, மற்ற படங்கள் போலவே இயல்பாக இருக்கின்றன.

சவுந்தர்யா ரஜினிகாந்தை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. அவர் வெறும் திரைப்படத்தை இயக்கவில்லை. இந்தியாவுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளார். பிரபல கம்ப்யூட்டர் நிறுவனங்களின் முயற்சியால்தான் இந்தியா கணிணித் துறையில் வல்லரசாக உயர்ந்துள்ளது.

அதேபோல் மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி துறையில் இந்தியாவில் புதிய வேலை வாய்ப்புகளை சவுந்தர்யாவின் இந்த புதிய் முயற்சி உருவாக்கும். நினைத்துப் பார்க்க முடியாத பின்னணித் தளங்கள், எங்கேயும் தொய்வே இல்லாத இயக்கம் என இரண்டு பக்கமும் செஞ்சுரி அடித்துள்ளார் சகோதரி சவுந்தர்யா. தமிழக கணிணிப் பொறியாளர்களின் திறமைகளை வெளிப்படுத்தியதோடு அல்லாமல், அவர்களை திரையில் உலகம் அறியவும் செய்துள்ளார்.

கடைசிக் காட்சியை சற்று கவனத்துடன் மாற்றி அமைத்திருக்கலாம். குழந்தைகளும் பெருவாரியாக பார்ப்ப்பார்கள் என்பதால், கடைசிக் காட்சியை சற்று கவனத்துடன் மாற்றி அமைத்திருக்கலாம்.

அவதார், டின் டின் போன்ற படங்களை உதாரணப்படுத்தி சிலர் பேசக்கூடும். டெக்னாலஜி குறைகளை வைக்கக்கூடும். மைக்ரோசாப்டோ, கூகுள் அல்லது ஆரக்கிள் போன்ற நிறுவனங்கள் எப்போதாவது குறையே இல்லாத மென்பொருளை உருவாக்கியிருக்கிறார்களா? அது கணிணித் துறையில் இயற்கை. அதைபோல சில டெக்னாலாஜி குறைபாடுகள் இருக்கக்கூடும். ஆனால் சாமானிய சினிமா ரசிகனுக்கு தெரியும் வகையில் எந்த டெக்னாலஜி குறைபாடுகளும் தெரியவில்லை!

rajinikanth_fans

கோடை விடுமுறையில் குடும்பத்துடன் கொண்டாடவேண்டியது கோச்சடையான். ‘மாற்றம் ஒன்று தான் மாறாது’ என்ற ஒரு வரியிலேயே ஏகப்பட்ட அர்த்தங்கள் ஒளிந்திருக்கிறது. கோச்சடையான், இந்திய திரையுலகத்திற்கே ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கி தந்துள்ளது என்பதுதான் முக்கியமான அர்த்தமாகும். இது பொம்மைப் படம் என்றெல்லாம் பரப்பி விட்டவர்களுக்கும் மேலே குறிப்பிட்டுள்ள ‘அந்தக் கால அதிமேதாவிகளுக்கும்’ பெரிய வித்தியாசம் இல்லை.

தமிழ் திரையுலகத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்ச வந்துள்ள கோச்சடையானை முதலில் வாழ்த்தி வரவேற்போம். பேசாத (ஊமைப்) படங்கள் தவிர, திரைப்படத்தின் அனைத்து பரிமாணத்திலும் நடித்துள்ள ஒரே உலக நடிகர் நம்ம சூப்பர் ஸ்டார் என்பது இந்தியத் திரையுலகின் பெருமை.

பக்கத்து சீட்டில் படம் பார்த்துக் கொண்டிருந்த நண்பரின் மகளிடம் படம் எப்படியம்மா என்று கேட்டேன். ‘சூப்பர் அங்கிள், எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு) என்றார். அமெரிக்காவிலேயே இளம் தளிர்களை கோச்சடையான் கட்டிப் போட்டுவிட்டது என்றால் இதற்கு மேல் நாம் சொல்ல என்ன இருக்கிறது.

கோச்சடையான் உலகை வெல்வது நிச்சயம்!

-உதயன்
டல்லாஸ் (அமெரிக்கா)
13 thoughts on “கோச்சடையான் – இந்திய சினிமாவுக்கே பெருமை!

 1. Manoharan

  பொதுவாக ரஜினியின் படங்கள் அதன் முதல் வார வசூலில் பெரும் சாதனை படைக்கும் …எனக்கென்னவோ கோச்சடையான் இரண்டாவது வார வசூலில் மிகப் பெரும் சாதனை படைக்கப் போவதுபோல் தெரிகிறது…

 2. Deen_uk

  எனக்கு பிடித்த சில டைரக்டர்களில் திரு.கே . எஸ். ரவிக்குமாரும் ஒருவர்.மிகத் திறமையான டைரக்டர்..நமது தலைவருக்கு கொடுத்த சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை பார்த்தாலே தெர்யும்.அவரது மற்ற படங்களும் நல்ல பொழுது போக்கு படங்களே.வெற்றி உத்தரவாத டைரக்டர்..தலைவரின் ஜக்குபாய் படத்தின் ஸ்டில் மிரட்டலாய் இருக்கும்.அந்த படம் கைவிடப்பட்டது மனது வருத்தமாய் இருந்தது.அடுத்து ராணாவில் சேர்ந்த போது சந்தோசமாய் இருந்தது.ஜக்குபாயை விட மிரட்டல் ஸ்டில் .! யார் கண்பட்டதோ தலைவர் உடல்நலம் சரியில்லாமல் அதுவும் கைவிடப்பட்டது..நம்மை விடுங்கள்..அவர் எவ்வளவு வருத்த பட்டிருப்பார்? அவருக்கும் தலைவருக்கும் ராசி இல்லை போல என்று அவரை சுற்றி இருப்பவர்கள் கூட சொல்லி இருப்பார்கள்.(இது நம் நாட்டில் சகஜம் ).எனக்கு ஒரே ஆசை,தலைவர் ரவிக்குமாருக்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் ..அந்த வெற்றி தலைவரின் முந்தைய படங்கள் வசூலை (இந்தியாலேயே தலைவரின் பட வசூலை தலைவர் மட்டுமே முறியடிக்க முடியும்!) முறியடிக்கும் என காத்திருந்தேன்.கோச்சடையானில் என்னை மிக சந்தோஷ படுத்திவிட்டார் ரவிகுமார்.அடுத்து தலைவருடன் லிங்காவில்!! நான் நினைத்த மாதிரியே தலைவர் அடுத்து ரவிக்குமாருடன்.! நாமே இவ்வளோ யோசிக்கிறோம்னா,தலைவர்னா சும்மாவா! வாழும் ஞானி! மனிதநேயம் மிக்க தலைவன்.ரவிகுமாருகாகவே இந்த படம் செய்கிறார் தலைவர்..!

 3. பாண்டியன்

  //பேசாத (ஊமைப்) படங்கள் தவிர, திரைப்படத்தின் அனைத்து பரிமாணத்திலும் நடித்துள்ள ஒரே உலக நடிகர் நம்ம சூப்பர் ஸ்டார் என்பது இந்தியத் திரையுலகின் பெருமை.//

  உலகின் எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை…

 4. Rajagopalan

  Surely Part 2 will come with more strong punch & super animation…
  Only thalaivar can do it…

  There are Heroes There are Superheroes But Only One Super Star…

 5. kumaran

  தலைவருக்காக K S ரவிக்குமார் நிறைய தியாகங்களை செய்திருக்கிறார் .

 6. Harrison Ford

  Hi

  This movie is a sub standard one. Just a hype from the fans only. For a good motion capturing film experience, please watch Avatar.

  Regards,
  Harrison Ford

 7. பாண்டியன்

  ஏண்டாப்பா அம்பி, பேரை ஃபோர்டுன்னு வச்சுண்டா, அவரோட பேரன்னு நம்பிடுவோமா. தமிழ் படிக்கத் தெரிகிற ஃபோர்டு அண்ணாத்தே,, எங்களுக்கும் தெரியும் அவதார். 10 வருடமா எடுத்து இதைவிட நூறு மடங்கு செலவு பண்ணி எடுத்த படம்ன்னு நல்லாவே தெரியும். அனிமேஷன் ஒரு அங்கம் தான் தம்பி. தலைவரோட வசனம் மட்டுமே போது இந்த படத்திற்கு. கூடவே ரவிக்குமாரின் கதை, திரைக்கதை வசனம், ஏஆர் ரஹ்மானின் இசை.. இதெல்லாம் உங்க அவதாரில் இல்லவே இல்லை. போய் மூடிக்கிட்டு ஓரமா உக்காந்து வேடிக்கை பாருங்க..

 8. saranya

  @Harrison Ford அவதார் படத்தோட இந்த படத்த தயவு செஞ்சு compare பண்ணாதீங்க. அந்த படத்த 12 வருஷமா 1400 கோடி செலவு செஞ்சு எடுத்தாங்க. ஆனா அந்த james cameroon ஆளேயே 125 கோடி budget ல 2 வருஷத்துல ஒரு சீன் கூட எடுக்க முடியாது. ஏண்டா வேணும்னே எதாவது சொல்லி எங்க வாயில வந்து மாடிக்கிறீங்க. இங்கிலீஷ் ல பேசிட்டா நீ பெரிய அறிவாளி நு நெனப்பா. ரஜினி படத்த கிண்டல் பண்ணிட்ட அறிவாளி நு நம்மள ஊரு நம்பும்னு ஒரு கூட்டம் அலையிது.

 9. Thalaivar fan

  Ford,
  Did u happen to notice that this so called avatar was actually a live action film with just the blue skinned creatures being mo-caped?
  Did u notice our movie had everyone mo-caped n every detail being created?
  Those creatures r half naked.
  Our’s had to hv elaborate deatils in costumes as well n the surroundings, which r far more challenging to recreate.
  Did the creatures had the distinct features of the actors playing them?
  Fictional pointy eared, long tailed, blue creatures..very hard to create huh?

  Avatar is just a sub standard lame-o movie.
  Just huge hype from fans like ford.
  For a good entertaining n mind blowing treat, watch Kochadaiiyaan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *