BREAKING NEWS
Search

அனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன்! – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து


சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன் குவிந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் இன்று பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார்.

தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, சூரியனை வணங்குவதோடு ஜல்லிகட்டும் பாரம்பரிய கலாசாரத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தை திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் தமிழர்களால் உற்சாக கொண்டாடப்படுகிறது.

சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன் குவிந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் இன்று பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார். “இந்த பொங்கல் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மனநிம்மதியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *