BREAKING NEWS
Search

என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது! – தலைவர் ரஜினிகாந்த்  

சென்னை: என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள கடிதம்:

என்னை வாழவைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு,

நான் கடந்த 23 ந்தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லி இருந்தேன். அது கசப்பாக இருந்தாலும் அதில் உள்ள உண்மையையும் நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உங்களை போன்ற ரசிகர்களை அடைந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். ரசிகர்களையும் என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான். என ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

– ரஜினிகாந்த்
தலைவர்
ரஜினி மக்கள் மன்றம்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *