BREAKING NEWS
Search

ஜல்லிக்கட்டு தமிழர் கலாச்சாரம், கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது! – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

rajini-vikatan

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வந்த வேளையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது குறித்து எந்த ஒரு கருத்தும் கூறாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த விகடன் விருது வழங்கும் விழாவில், ரஜினி, கமல் மற்றும் விஜய் என பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது ஜல்லிக்கட்டு குறித்து ரஜினி கூறுகையில், “ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம், கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது.

என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்காதீர்கள்.

பெரியவர்கள் ஒரு கலாச்சாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். அதனை நாம் காப்பாற்ற வேண்டும்.

சில கட்டுப்பாடுகளை விதியுங்கள், ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

-என்வழி




2 thoughts on “ஜல்லிக்கட்டு தமிழர் கலாச்சாரம், கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது! – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

  1. Rajagopalan44

    atlast..
    waiting for this…
    everyone started already y muratu kalai did not support jallikattu…
    thank god atleast he said now…

  2. Rajagopalan

    Boss
    where r u n how r u?
    Y long time no updates?
    One more round of negative remarks started for thalaivar in social media.
    Disheartened to see that.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *