BREAKING NEWS
Search

பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன்! – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

பாலகுமாரனுக்கு தலைவர் அஞ்சலி

சென்னை: பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் எழுத்தாளர் பாலகுமாரன் என ரஜினிகாந்த் புகழஞ்சலி செலுத்தினார்.

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் சினிமாத்துறையினரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனா்.

பாலகுமாரன் எழுத்தாளராக மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் பல படங்களுக்கு தன்னுடைய வசனத்தை எழுதியிருக்கிறார். இவரின் உடல் அஞ்சலிக்காக மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாலகுமாரனுடன் நெருக்கமான நட்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் அவா் பேசுகையில், “பாலகுமாரனின் மறைவு எழுத்து உலகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. பாலகுமாரன் எனது மிக நெருங்கிய நண்பர். பாட்ஷா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் இவரது வசனங்கள்தான். சமீபத்தில் கூட பல மணி நேரங்கள் அவர் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்.

எனது மற்ற படத்திற்கு வசனம் எழுதவைக்க முயற்சித்தேன், அவர் ஆன்மிகமும், இலக்கியமும்தான் முக்கியம். பணமோ, சினிமா வாய்ப்போ அல்ல என தவிர்த்து விட்டார்,” என்றார்.

-என்வழி




One thought on “பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன்! – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

  1. yasin

    Mr. Dhanus please post pone kala release 7th June instead of release eid because of Muslim fans during of Ramadan difficult to watching movie
    please send the dhanus mobile no also
    Mr. vinodth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *