BREAKING NEWS
Search

ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கிறாரா தலைவர் ரஜினி?

ரசிகர்களைச் சந்திக்கிறாரா தலைவர்?

சென்னை: ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தலைவர் ரஜினிகாந்த் 2–ந்தேதி அவசர ஆலோசனை நடத்துகிறார் என்று இன்றைய தினத்தந்தியில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து மாநிலம் முழுக்க ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இந்த செய்தியில் உண்மையில்லை என்பது உறுதியாகியுள்ளது.

 முன்பெல்லாம் தனது ரசிகர்களை அடிக்கடி சந்தித்து, படமெடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தேவையற்ற அரசியல் சர்ச்சைகளைத் தவிர்க்க கடந்த 10 ஆண்டுகளாக இத்தகைய சந்திப்புகளைக் குறைத்துக் கொண்டார்.

ஆனாலும் தனது பிறந்த நாளில், புத்தாண்டு தினங்களில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன்னால் திரளும் ரசிகர்களை பார்த்து வணக்கம் தெரிவித்து செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தங்களை அழைத்து பேசும்படி ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் தொடர்ந்து கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் ‘வருகிற 2–ந்தேதி காலை 9.30 மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாவட்ட ரசிகர் மன்ற தலைவரும் செயலாளரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்,’ தினத்தந்தியில் செய்தி வெளியானது.

ஆனால் இதுகுறித்து விசாரித்தபோது, அப்படி எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆகவே வரும் ஏப்ரல் 2-ம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை தலைவர் ரஜினி சந்திக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்.  ரசிகர்கள் தேவையற்ற கருத்துகளைப் பரப்பாமல் அமைதி காக்கவும்!

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *