BREAKING NEWS
Search

கஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்!

நாகை: நாகை மாவட்டத்தில் கஜா புயலினால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு தலைவரே ரஜினிகாந்த் தன் சொந்த செலவில் கட்டிய வீடுகளை வழங்கினார்.

நாகை மாவட்டம் கோடியக்கரை, தலைஞாயிறு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த ஆண்டு கஜா புயலால் பலர் பாதிக்கப்பட்டனர். கஜா புயல் தாக்கியதிலிருந்து அந்தப் பகுதி மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் ஏராளமான உதவிகளை வழங்கி வந்தனர். கிட்டத்தட்ட ரூ 5 கோடி மதிப்பிலான பொருட்கள் டெல்டா மாவட்ட மக்களுக்கு ரஜினி மன்றத்தினரால் வழங்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக கஜா புயலில் வீடுகளை இழந்த 10 பேருக்கு புதிய வீடுகள் வழங்கப்படும் என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்றது.

இதனையடுத்து பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில், நாகை மாவட்ட செயலாளர் ராஜேஷ்வரன் முன்னிலையில் பயனாளர்கள் 10 பேருக்கும் புதிய வீடுகளின் சாவிகளை நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார்.

வீடுகளைப் பெற்றுக்கொண்ட 10 குடும்பங்களும் மிக ஏழ்மையான நிலையில் இருந்தவர்கள். தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக கான்கிரீட் வீடுகளில் வசிக்கப் போவதாகவும், தன் சொந்தப் பணத்தில் இந்த உதவியைச் செய்த ரஜினிகாந்துக்கு காலம் முழுக்க நன்றிக் கடன் பட்டிருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

படங்கள்:

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *