BREAKING NEWS
Search

பூரண நலமுடன் இருக்கிறார் தலைவர் ரஜினி!

தலைவர் நலம்!

thalaivar-latest

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. மாலையில் அவர் வீடு திரும்பினார்.

தலைவர் ரஜினிகாந்த் ‘கபாலி’ மற்றும் ‘2.0’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் தீவிரமாக நடிப்பதாலும், இந்தப் படங்களுக்காக  வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாலும் களைப்பு ஏற்பட்டதால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ரஜினிகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்குச் சென்றார். அங்குள்ள அறை எண் 101-ல் ரஜினிக்கு டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் டாக்டர்கள் குழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டது.

‘ரஜினிக்கு சாதாரண மருத்துவ பரிசோதனைகள்தான் நடந்தது. அவர் உடல் நலத்தோடு இருக்கிறார். மாலையே வீடு திரும்பி விடுவார்’ என்று மருத்துவமனை சார்பில் தெரிவித்தனர். அதுபோலவே சிகிச்சை முடிந்து மாலையில் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.

இதுகுறித்து தலைவர் வீட்டில் நாம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, “தலைவருக்கு எந்த உடல் நலக் கோளாறும் இல்லை. அவர் மிகவும் நலமாக இருக்கிறார். 2011-ம் ஆண்டு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பிறகு அவர் பரிசோதனை எதுவும் செய்யாமல் இருந்தார். இப்போது அந்த வழக்கமான  பரிசோதனைதான் நடந்தது. அவர் உடல் நிலை சிறப்பாக இருப்பதாக மருத்துவர் குழு தெரிவித்துள்ளது,” என்றனர்.

அந்த நாட்கள்…

ரஜினிக்கு கடந்த 2011 ஏப்ரல் மாதம் ‘ராணா’ படப்பிடிப்பில் இருந்தபோது ரஜினிகாந்துக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டது. உடனடியாக சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமச்சந்திரா மருத்துவமனையிலும் சிகிச்சை நடந்தது. டாக்டர்கள் பரிசோதித்து சிறுநீரக பாதிப்பு இருப்பதாக கூறினர்.

இதைதொடர்ந்து சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்கள் அங்கு தங்கி இருந்து சிகிச்சைப் பெற்றார்.

தீவிர சிகிச்சைக்குப்பிறகு பூரண குணம் அடைந்து சென்னை திரும்பினார்.  அதன்பிறகு கோச்சடையான் மற்றும் லிங்கா படங்களில் நடித்தார்.

என்வழி




12 thoughts on “பூரண நலமுடன் இருக்கிறார் தலைவர் ரஜினி!

  1. srikanth1974

    தலைவருக்கு எதுவும்,ஆகாது.ஆம் அவர் குடியிருப்பது
    நமது இதயங்களில்.

  2. jegan N

    வணக்கம் தலைவரின் வெறியர்களே!

    இந்த பதிவை எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன், ஆனால் தற்போது கேள்விப்பட்ட தலைவரின் உடல்நலக்குறைவு செய்தி என்னை இப்படி எழுதவைத்துவிட்டது!

    இந்த பதிவு நம் தலைவரின் உறவுகளை புன்படுத்தவேண்டும் என்பது என் நோக்கம் அல்ல!

    தலைவர் அரசியலுக்கு வந்தால்தான் நான் அவருக்கு ரசிகன் என்று சொல்பவர்களுக்கு இந்த பதிவு பக்காவாக பொருந்தும்!

    நிதர்சனம் பேசுவோம், எதார்த்தம் பேசுவோம் உறவுகளே!

    நாமெல்லாம் யார்?

    ரஜினி ரசிகர்கள் & ரஜினி வெறியர்கள் & ரஜினி பக்தர்கள்!
    எதனால் நாம் இப்படியெல்லாம் சொல்லிக்கொள்கிறோம் என்ற சந்தேகம் எனக்கு பல காலங்களாகவே இருந்து வருகிறது!

    அதாவது

    அவரை அனு அனுவாக ரசிப்பதால் நாம் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்கிறோம்!
    அல்லது
    அவருக்கு உயிரை கொடுக்கும் அளவுக்கு இருப்பதால் நாம் வெறியர்கள் என்று சொல்லிக்கொள்கிறோம்!
    அல்லது
    இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் அவரை தெய்வமாக வணங்குவதினால் நாம் பக்தர்கள் என்று சொல்லிக்கொள்கிறோம்!

    ஆனால்
    இவை அனைத்துக்கும் அப்பார்ப்பட்டு, அவர் அரசியலுக்கு வரவேண்டும், அப்படி வந்தால்தான் நல்லது என்று உறுதியாக கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதுதான் என்னுடைய கேள்வி!

    அவர்[தலைவர்] அரசியலுக்கு வந்தால் நாடு நலம் பெறும் என்று நினைக்கும் வெறியர்களின் சிந்தனை வரவேற்புக்கு உரியதுதான்!
    ஏன்?
    சொல்லப்போனால் எனக்கும் அந்த எண்ணம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது!
    ஆனால் அது தலைவரின் விசயத்தில் சாத்தியமாகுமா?

    அதாவது
    நமக்கு ஆசைகள் இருப்பதில் தவறில்லை!
    அது எத்தகைய ஆசையாகவும் இருக்கலாம்! அது நம் கற்பணையின் பிரதிபலிப்பு!
    ஆக அந்த ஆசைக்கு அடுத்தவரை அல்லது நமக்கு வேண்டியவரை பலிகெடா ஆக்க நினைப்பது எவ்வளவு பெரிய சுயநலம் என்பது நான் சொல்லித் தெரியவேண்டியது இல்லை!

    அதுவும் நம் உயிரைவிட மேலாக விளங்கும் நம் தலைவர் ரஜினியை இதற்கு பயன்படுத்த நினைப்பது எவ்வளவு பெரிய சுயநலம்!

    நண்பர்களே!

    அண்ணன்களே!

    தம்பிகளே!

    தோழிகளே!

    சகோதரிகளே!

    நீங்கள் ஒன்றை மட்டும் உற்றுப்பார்க்க வேண்டும், ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்!

    தலைவர் அரசியலுக்கு வந்து நல்லது செய்வார் என்ற எதிர்பார்ப்பில்தான் நாம் அவருக்கு ரசிகர்கள், ரசிகைகள் ஆனோமா என்ன?

    100% இல்லை

    பிறகு ஏன் இந்த அரசியல் மமதை நமக்கு[சில ரசிகர்களுக்கு]

    ஒருவேளை சிறுவயதில் இருந்து அவரின் படங்களுக்கு பாலாபிசேகம் செய்து, பேனர்கள் அமைத்து, பல நலத்திட்ட உதவிகளை செய்து அதிக பொருட்செலவு பணச்செலவு ஆனதால் அந்த பணத்தை திருப்பி அடைந்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் கையாளும் திட்டமா இது!

    5 ரூபாய் போட்டு பத்து ரூபாய் எடுப்பதற்கு இது என்ன கத்தரிக்காய் வியாபாரமா என்ன?

    ஒருவேளை பப்லிசிட்டிக்காக ரஜினி எனும் பெயரை பயன்படுத்திக்கொண்டு, பின்பு “நானும் ரஜினி வெறியன்தான்” என்று சொல்லிக்கொள்ளும் பகல்நாடகமா இது?

    அவருக்காக பணம் செலவழித்தோம், வீடுவாசலை இழந்தோம் என்று நீங்கள் சொல்லும் காரணங்கள் உங்களுடைய தரப்பில் நியாயமாக இருக்கலாம்! ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்று பார்த்தால் ஆகவே ஆகாது!

    உங்களை இப்படியெல்லாம் செய்ய சொன்னது யார்?

    *படம் பார்க்க சொன்னது யார்?

    *பாலாபிசேகம் செய்ய சொன்னது யார்?

    *பேனர்கள் வைக்க சொன்னது யார்?

    *அலங்காரங்கள் பன்ன சொன்னது யார்?

    *அலப்பரைகளை கொடுக்க சொன்னது யார்?

    இதெல்லாம் எதற்காக நீங்கள் செய்தீர்கள்?

    அவர்மீது உங்களுக்கு இருக்கும் எல்லையில்லா பாசத்தின் வெளிப்பாடுதானல்லவா அது!

    தெருவில் போகும் கண்ட கண்ட நாயெல்லாம் தலைவரை விமர்சனம் செய்து கேள்வி எழுப்பும்போது, “டேய் உன்னைய எவன்டா படம் பார்க்க சொன்னது” என்று அவர்களை சட்டையை பிடித்து கேள்வி கேட்ட நம்மை பார்த்து இனிவரும் காலத்தில் அவர்களே இதே கேள்வியை நம்மிடம் கேட்கும் நிலை வரலாமா?
    அதைவிட ஒரு அவமானம் நம் தலைவருக்கும் நமக்கும் வேறு இருக்கிறதா என்ன?

    “அரசியலுக்கு வாங்க தலைவா” என்று சொன்னால் பரவாயில்லை, அதைவிடுத்து “அரசியலுக்கு மட்டும் வரலன்னு வைங்க” என்று திமிராக கூறுவது எந்த விதத்தில் நியாயம்?

    என்ன மெரட்டுறிங்களா???

    இல்ல என்னான்னு கேக்குறேன்?

    அரசியலுக்கு வான்னு சொல்றிங்களா? இல்ல அரசியலுக்கு வரலேன்னாலும் பரவாயில்ல, நாங்க இதுவரைக்கும் செலவழிச்ச பணத்த கொடுத்திருங்க இனி நாங்க உங்கள அரசியலுக்கு கூப்பிடமாட்டோம்னு சொல்ல வர்றிங்களா?

    தெளிவா சொல்லுங்க பாஸு, அப்பதான தலைவருக்கு புரியும், எல்லாருக்கும் புரியும்!

    நமக்கு ஏதாவது பிரச்சனையின்னா தலைவர் ரசிகர்கள் காப்பாத்துவாங்கன்னு நினைச்சு தைரியமா இருக்கலாம்! ஆனால் தலைவர் ரசிகர்கள்குள்ளயே பிரச்சனையின்னா யாருங்க காப்பாத்துவாங்க???

    “கிடப்பதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மடியில் போடு” என்ற பழமொழிக்கு உதாரணமாக, தலைவர் அரசியலுக்கு வரவில்லையென்றால் அவர்மீது வழக்கு தொடர்வேன் என்று ஒரு ரசிகர் கூறியது எவ்வளவு பெரிய மூடத்தனம்! நீங்கள் ஒரு தலைவருக்கு தொண்டரென்றால் அந்த தலைவரின் விருப்பம்தானே உங்களின் விருப்பமாகவும் இருக்க முடியும்!

    “அதுதானயா உலக வழக்கம்”

    அதற்கு மாறாக தன்னுடைய விருப்பத்தைத்தான் அந்த தலைவனே கேட்கவேண்டும் என்பது புதுமையாக அல்லவா இருக்கிறது!

    அவர் அரசியலுக்கு வரவேண்டும், தமிழகத்தை ஆளவேண்டும், இந்தியாவை ஆளவேண்டும் என்று எதிர்பார்க்கும் ரசிகர்களில் எத்தனை பேருக்கு தெரியும் அவர் அரசியலுக்கு வந்தால் அவரின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று?

    சிங்கப்பூர் மருத்துவமணைக்கு சென்று உயிருக்கு போராடி, பின் மறுபிறவி எடுத்து வந்த பிறகு அவருக்கு மருத்துவர்கள் விதித்த நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?

    *பலரின் மூச்சுக்காற்றுகள் ஒன்றாக பரவியிருக்கக்கூடிய இடங்களுக்கு செல்லக்கூடாது[ஆனால் பாலசந்தர், எம் எஸ் வி, மனோரமா அவர்களின் இறுதி சடங்குகளுக்கு சென்றுவிட்டார், பின்பு மருத்துவர்களால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்]

    *மூளைக்கு அளவுக்கு மீறி வேலை கொடுக்கும் செயல்கள், மன உளைச்சலை தரும் பணிகளில் தயவுசெய்து ஈடுபடவே வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளார்
    [இப்போதைய காலகட்டத்துல நல்ல நிலையில இருக்குற ஆள் யராவது அரசியலுக்கு வந்தாலே மென்டல் ஆக்கிவிட்ருவாய்ங்க, இதுல இந்த உடல்நிலையில நம்ம தலைவர் அரசியலுக்கு வந்தால் அவரு நிலைமை என்னாகும்னு நீங்களே யோசிச்சு பாருங்க]

    *அதிகப்படியான சிரமம் எடுத்து நடிக்கும் படங்களை தவிருங்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளார்

    இதெல்லாம் யாருக்காவது தெரியுமா?
    இல்லை இதையெல்லாம் தன் கண்மணிகளான ரசிகர்களிடம் அவர் காட்டிதான் இருப்பாரா?

    “பீசு பீசா கிழிக்கும்போது இயேசு போல பொருமை பாரு” என்ற வரிகளுக்கு ஏற்றார்போல வழக்கம்போல் தன் கள்ளங்கபடமற்ற புன்னகையை வெளிக்காட்டி தன் கஷ்டங்களை மறைத்து வாழ்கிறார் அந்த மகான்!

    2.0 என்று ஒரு படம் இப்பொழுது தலைவரின் நடிப்பில் தயாராகிக்கொண்டு இருக்கிறது!
    இந்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பானதும் எத்தனை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்ததோ அத்தனை ரசிகர்களுக்கும் சிறிதளவேனும் உள்ளுக்குள் பயத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்!

    ஏன் தெரியுமா?

    சங்கர் எனும் ஒரு பிரம்மாண்டம் விரும்பி இயக்குனரால் எந்திரன் படத்தில் தலைவர் எவ்வளவு வேலை வாங்கப்பட்டார் என்பது நாம் அறிந்ததே! அப்படி ஒரு நடனம், அப்படி ஒரு வேகம், அப்படி ஒரு நடிப்பை இந்த வயதில் நாம் எதிர்பார்க்கவில்லை!
    இதனால் இயக்குனர் சங்கர் அவர்களை நான் குறையெல்லாம் சொல்லவில்லை!
    ஒரு இயக்குனர் என்ற முறையில் அவருடைய வேலையை அவர் செய்தார், ஒரு நடிகர் என்ற முறையில் தன்னுடைய கடமையை தலைவர் செய்தார் அவ்வளவுதான்!
    இது உங்களுக்கு ஒரு நினைவூட்டல்தான்!
    இவ்வாரு ஒரு கடினமான வேலையை அவர் ஏன் கையாள வேண்டும் என்று சிந்தித்து பாருங்கள்!

    எல்லாம் தன் ரசிகர்களுக்காகதான்!

    இப்படி இருக்கும்போது எந்திரன் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்று நான் சொல்லித்தெரியவேண்டியது இல்லை!

    இந்த ரிஸ்க் எதற்காக?

    தன் ரசிகர்களுக்காகதான்!

    நமக்கு ஏதாவது பிரச்சனையென்றால் நமக்காக குரல்கொடுக்க, அக்கறைப்பட நம் தலைவர் இருக்கிறார்! அப்போ அவருக்கு ஒரு பிரச்சனையென்றால் அதில் அக்கறை காட்ட நாம்தானே[ரசிகர்கள்] இருக்கிறோம்!

    அவரின் மகிழ்ச்சியில் மட்டும் பங்கெடுக்க நினைப்பவன் ரசிகனா[வெறியனா]?
    இல்லை அவரின் துன்பத்தில் பங்கெடுக்க நினைப்பவன் ரசிகனா[வெறியனா]?

    தன் சுயநலத்தை, ஆசைகளை அவர்மூலம் நிறைவேற்றிக்கொள்ள நினைப்பவன் ரசிகனா[வெறியனா]?
    இல்லை
    அவரின் உடல்நலத்தை விரும்பி அவரின் ஆசைகளை நிறைவேற்ற நினைப்பவன் ரசிகனா[வெறியனா]?

    அதனால்தான் சொல்கிறேன்

    “நீங்க வந்தா மட்டும் போதும் தலைவா” என்ற எண்ணத்தை மாற்றியமைத்து “நீங்க நல்லா இருந்தா மட்டும் போதும் தலைவா” என்று சொல்லி மகிழ்ச்சியடைவோம், ஒன்றிணைவோம், ஒற்றுமையாய் இருப்போம் என்று கூறி இந்த பதிவிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்!

    எங்களுக்கு ராஜ்யமும் வேணாம்! இமயமும் வேணாம் தலைவா!
    உங்க அன்பு மட்டும் போதும் தலைவா!

    இந்த பதிவ படிச்சிட்டு “சூப்பர்டா தம்பி”னு தோள் மேல கைய போட்டாலும் சரி!

    என்ன நீ ஓவரா பேசுறன்னு சொல்லி என் சட்டைய பிடிச்சாலும் சரி!

    போடா…! என் தலைவரே என்பக்கம் இருக்கார்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பேன்!

    #எல்லாம்_தலைவர்_பாத்துப்பார்

    நன்றி!!!

    #ரஜினி_வெற

  3. அறிவு.. நாகை

    எத்தனை ஸ்டார்கள் ஜொலித்தாலும்..
    உலகம் முழுவதும் உச்சத்தில் ஜொலிக்கும் ஒரே ஸ்டார்…
    நம் சூப்பர் ஸ்டார்…
    தலைவா வாழ்க பல்லாண்டு…

  4. murugan

    thalaivarin unmaiyaana rasigargalin mananilaiyai thella thelivaaga padhivu seidhamaikku enadhu ulamaarndha paaraattukkal Jeagan avargaley

    thlaivarin udal nalam mattrum mana amaidhi ullitta vishayangalil endhavidha compromise um koodaadhu

    kabali mattrum 2.0 pudhiya saadhanaigal padaiththidavum, thalaivar eppodhum poorana udal nalaththudan irundhidavum ellaam valla iraivanai praarththippom

  5. Sargunaraj

    Thanks Jegan.

    I know, Intha alavukku oru message a paakum poothae theriuthu, your Verithanam.

    I accept 100% no 200% your points.

    Oru unmaiyaana Veriyanudaya Asai ” Thalaivar nalla irunthalae poothum ”

    Entrum Thalaivar Valiil…

    J. sargunaraj.

  6. jegan N

    அவர் வந்தால் என்ன ?

    வராட்டி என்ன ? ?

    அவர் வருவார் என்றா ,

    நாம் நேசித்தோம் ?

    அவர் வருவார் என்றா

    நாம் சுவாசித்தோம் ?

    அவர் வருவார் என்றா

    நாம் பயணித்தோம் ?

    ஆம் ,

    என்று என்னும் சொந்தங்களா நீங்கள் ?

    இந்த பதிவு ,

    உங்களுக்குத்தான் !

    தலைவரை வைத்து அரசியல் , பின்பு ஆட்சி , பின்பு பதவி . . .
    அதிகாரம் , பணம் , சம்பாத்தியம் !

    இதான்னா உங்கள் இலக்கு ?

    ஆயிரக்கணக்கான கட்சிகள் நாட்டில் உள்ளதே ,

    அதில் உங்களுக்கு பிடித்த இடத்தில்
    போய் உங்கள் இலக்கை எட்டி விட
    முயச்சிக்கலாமே ?

    என்னற்ற தலைவரின் சொந்தங்கள்
    பொறுமை இழந்து ,
    பல்வேறு கட்சிக்குள் போய் ,
    தங்களின் சுயலாபத்துக்காக இனைந்து
    விட்டார்கள் !

    மிச்சம் மீதி உள்ள எங்களுக்கு

    தலைவர் நல்லா இருந்தா போதும் !

    ஆன்மிகமோ , அரசியலோ

    என்றென்றும் தலைவருக்காக

    காத்திருக்கும் கோடிக்கனக்கான

    கூட்டத்தில் நாங்களும் சிலர் . . !

    40 ஆண்டுகளாக காத்திருந்தோம் ,

    30 ஆண்டுகளாக காத்திருந்தோம் ,

    20 ஆண்டுகளாக காத்திருந்தோம் !

    அவர் வரலையே ?

    என்ன மெரட்டுறிங்களா ?

    இல்லே ,

    உங்களோட ஏதும் அக்ரிமென்ட் இருக்கா ?

    இவர்தான் நம் தலைவர் என்று

    தன் ஐம்புலன்களையும் சோதித்து

    தேர்ந்தெடுத்து விட்ட பின் ,

    அந்த தலைவரின் வழியில்

    செல்பவனே ,

    ஆறறிவு படைத்த தொண்டன் . . !

    நீ இப்படி இரு ,

    நீ அப்படி இரு ,

    நீ அங்கே வா ,

    நீ இங்கே வா . . .

    தேர்ந்தெடுத்த தலைவரையே

    ஆர்டர் பன்றது ,

    ஆறறிவுக்கு கம்மியா உள்ள

    மூடர்களின் முட்டாள்தனம் . . ! !

    தன் தலைவரையே ,

    தவறான முறையில் விமர்ச்சிக்கும்

    எண்ணம் எப்போது , எந்த நொடியில்

    அவனுது மனதில் தோன்றியதோ

    அந்த நொடியே ,

    அவனுக்கும் , தலைவருக்கும்

    சம்பந்தமில்லை !

    ஒரு வகுப்பில் பயிலும் மாணவர்கள்

    எல்லாம் ஆசிரியர்களை மதிப்பதில்லை

    ஆனால் ,

    அந்த உண்மையான ஆசிரியரோ ,

    மாணவர்களிடம் பேதம்

    பார்ப்பதில்லை !

    ஒருவன் தவறு செய்தால் ,

    அந்த ஊர் எப்படி பலியாகும் ?

    இழியவன் ஒருவனுக்காக

    இழப்பது ஓராயிமா ? ?

    சிந்திப்பீர் !

    தலைவரின் சொந்தங்களே ! !

    நமது முயற்சி வெற்றி பெற

    தலைவரின் ஆசியை வேண்டுவோம் !

    ஜெய் ரஜினிகாந்த் !

    வாழ்க ரஜினிகாந்த் ! !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *