BREAKING NEWS
Search

இன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி!

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணமாக சென்றிருந்த தலைவர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் வாஷிங்டன் டல்லஸ் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்ற அவர் வெள்ளிக்கிழமை காலை 7:30 மணி அளவில் துபாய் வந்து இறங்குகிறார்.

அங்கிருந்து மதியம் 3 மணி அளவில் சென்னை செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் புறப்படுவார் எனத் தெரிகிறது. இந்த விமானம் சென்னைக்கு இரவு 8:30 மணிக்கு வந்து சேர்கிறது.

அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனைக்காக சிகாகோ உள்ளிட்ட ஊர்களுக்கு மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் சென்றுள்ளார். அவரை உள்ளூர் விமானநிலையங்களில் பார்த்த ரசிகர்கள் இதை உறுதிப் படுத்தியுள்ளார்கள்.

ஷாப்பிங் மால்கள், மெட்ரோ ரயில்களில் தனியாக சுற்றினார் என்று எல்லாம் பிரபல ஊடகங்களும் செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.

ஆனால் முதலில் வெளியான படங்கள் அனைத்தும் வாஷிங்டன் டல்லஸ் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டவை. விமான நிலைய உள் பகுதி, அங்குள்ள மின் படிக்கட்டு, டெர்மினல் டூ டெர்மினல் செல்லும் விமான நிலைய ரயிலில் ரஜினிகாந்த் சென்ற போது எடுக்கப் பட்ட படங்கள் தான் வெளியானது. வணக்கம் இந்தியாவில் அது குறித்து தெளிவான விவரங்களுடன் கூறியிருந்தோம்.

இந்தப் பயணம் முழுக்கவும் ஓய்வெடுக்கவும் மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே ரஜினிகாந்த் மேற்கொண்டார். சில ஊடகங்கள் ஹேஷ்யங்களாகச் சொன்ன வேறு எந்த அரசியல் பணிகளிலும் அவர் ஈடுபடவில்லை என்று தெரியவந்துள்ளது.

நன்றி: வணக்கம் இந்தியா




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *