BREAKING NEWS
Search

தலைவரும் தலைவியும்!

தலைவரும் தலைவியும்!

superstar-madam

தையோ கனவோ
நாம் பேசுவோம்!

வெயிலோ மழையோ
நாம் நடப்போம்!

சுகமோ துக்கமோ
நாம் சுகிப்போம்!

பசியோ விருந்தோ
நாம் களிப்போம்!

வசதியோ வறுமையோ
நாம் வாழ்வோம்!

கோபமோ கொஞ்சலோ
நாம் கடப்போம்!

ஊடலோ கூடலோ
நாம் ரசிப்போம்!

சத்தமோ முத்தமோ
நாம் நிறைப்போம்!

ஆணோ பெண்ணோ
நாம் மகிழ்வோம்!

சண்டையோ சமரசமோ
நாம் செய்வோம்!

புதுமையோ புரட்சியோ
நாம் வெல்வோம்!

பேரனோ பேத்தியோ
நாம் மகிழ்வோம்!

இளமையோ முதுமையோ
நாம் சிரிப்போம்!

நீயா நானா….
நாம் என்போம்!

இல்லறப்பாடலில் ….
இசையோ பாடலோ
நாம் இனிமையாவோம்!

இதுபோல் என்றும்….
இருவிழிப்பாதை தரும்
ஒற்றைக் காட்சிபோல்
இருவரல்ல ஒருவரென
வாழ்ந்திடும் ….
வாழ்ந்திட ….
இறையருள் வாழ்த்திடும்!

(சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லதா தம்பதியரின் 35வது திருமண நாள் கவிதை)

முனைவர் சித்ரா மகேஷ்




2 thoughts on “தலைவரும் தலைவியும்!

  1. RAVI

    சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி . ரஜினி என்றால் அவர் மட்டும் தான் சூப்பர் ஸ்டார்

  2. srikanth1974

    இன்றுபோல் என்றும் எங்களை ஆசீர்வதியுங்கள்.
    வணங்குகிறேன் தலைவா!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *