BREAKING NEWS
Search

‘இனி தாணு கையை கட்டிப்போட மாட்டேன்!’ – மெகா கொண்டாட்டத்துக்கு ஓகே சொன்ன தலைவர்!

தலவைரே சொல்லிட்டார்… கபாலி மெகா  கொண்டாட்டத்துக்கு தயாராகுங்க!

1465819900-kabali-1

பாலிக்காக மிகப் பெரிய விழாக்களுக்கு ஏற்பாடு செய்ய தயாரிப்பாளர் கலைப்புலி தாணி சொன்ன போதெல்லாம், அதைத் தடுத்து, இப்போதைக்கு எதுவும் வேண்டாம். ஆர்ப்பாட்டமில்லாமல் படத்தை வெளியிடலாம்… பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி வந்தார் தலைவர் ரஜினி.

அதனால்தான் டீசர் வெளியீடு, இசை வெளியீடு, படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு என எதுவுமே இல்லாமல் வெளியானது கபாலி.

படம் வெளியாகி ஒட்டு மொத்த இந்தியா முழுவதும் வெற்றிப் படம் என ஒருமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, சமீபத்தில் வெளியான மலாய் பதிப்பு என அத்தனை மொழிகளிலும் கபாலி சூப்பர் வெற்றியைப் பெற்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதுவரை படம் ரூ 500 கோடிக்கும் மேல் வசூலித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரிலீசுக்கு முந்தைய வருமானம், தியேட்டரில் கிடைத்த 10 நாட்கள் வசூல் அனைத்தும் சேர்த்து ரூ 645 கோடியை கபாலி ஈட்டியுள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

13681089_1662938464032211_8794867386367915440_n

ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை. விரைவில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே இதனை அறிவிக்கவிருக்கிறார்.

இந்த நிலையில் கபாலி படக்குழுவினருடனான ஜெயா டிவி சந்திப்பில், தலைவர் ரஜினி தொலைபேசியில் பேசியதை ஒளிபரப்பினார்கள் (பேச்சுக்குப் பேச்சு ரஜினி, ரஜினி தலைவரை கிட்டத்தட்ட ஏக வசனத்தில் ராதிகா அழைக்க, ரசிகர்கள் செம கடுப்பானது தனி!).

அதில் தாணு பற்றி மிக உயர்வாகக் குறிப்பிட்ட ரஜினி, “தாணு மீரான் சாகிப் தெருவில் பிறந்து வளர்ந்து பெரிய ஆளானவர். தமிழ்நாட்ல எந்த தியேட்டர்ல டிக்கெட் எவ்ளோ போகுது, கேன்டீன்ல எவ்ளோ போகுது… ஸ்டேன்ட்ல என் வசூல்.. கம்ப்ளீட்டா அவருக்கு அத்துப்படி. அத்தனை விஷயங்களும் அவருக்குத் தெரியும். தாணு 42 ஆண்டுகளாக இந்த இன்டஸ்ட்ரியில் இருப்பவர். இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ ஜாம்பவான்கள் காணாம போயிருக்காங்க. இந்த இன்டஸ்ட்ரியில் தாக்குப் பிடிப்பது எவ்வளவு கஷ்டம்… தாணுவின் அணுகு முறை, பழகும் விதம் எல்லாமே அருமை. தொழில் பத்தி அவருக்கு நல்லா தெரியும். மிகக் கடினமான உழைப்பாளி. ரொம்பப் பெரிய விழா நடத்தணும்னு தாணு ஆசைப்படறாரு… நான்தான் அவர் கைகளை ரொம்ப கட்டிப்போட்டுட்டேன். இனி கட்டிப்போட மாட்டேன்…,” என்றார்.

-என்வழி




2 thoughts on “‘இனி தாணு கையை கட்டிப்போட மாட்டேன்!’ – மெகா கொண்டாட்டத்துக்கு ஓகே சொன்ன தலைவர்!

  1. Prasanna

    Even I did not like the way Radhika spoke to thalaivar

    Once in Neengallum vellalam oru kodi shos howted by prakashraj she sarcastically she said about thalaivar still acting with Aishwarya rai and deepika

    It was really irritating just came to know how jealous she is

    She has to control her tongue

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *