BREAKING NEWS
Search

அம்பேத்கர் வசனம் ரொம்ப நல்லாருக்கு… நான் பேசறேன்! – ரஞ்சித்தை தட்டிக் கொடுத்த தலைவர்

கபாலியில் தலைவர் ரஜினி ரசித்த அந்த அம்பேத்கர் வசனம்!

Kabali-exl

ரு காலத்தில் அரசியல் வசனங்களை தலைவர் ரஜினி மாதிரி படங்களில் பேசியவர் யாருமில்லை.

அதில் டாப் வசனம் இது:

‘என் பாட்டுக்கு என் வேலைய செஞ்சிக்கிட்டு ஒரு வழில நான் போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்..   சொல்லாததையும் செய்வேன்… இந்த அண்ணாமல பானியே தனி. நம்ம கிட்ட நியாயத்துக்கு நியாயம் பதிலுக்கு பதில்… அடிக்கு அடி ஒதைக்கு ஒதை..

மேடைக்கு மேடை காந்தி காமராஜ் அண்ணா எம்ஜிஆர் பத்தி பேசறீங்க… வருஷத்துக்கு ஒரு முறை அவங்க சிலைக்கு மாலை போடறீங்க… அந்த மாலை போட்ற ஒரு நிமிஷம் ஆகாது அவங்க சொன்ன கருத்துக்களைப் பத்தி யோசனை பண்ணிப் பாத்திருக்கீங்களா… தேர்தல் வரும்போது மட்டும் கையெடுத்து கும்பிட்டு ஓட்டுக் கேக்கறீங்க.. ஜெயிச்சிட்டா வயித்திலடிக்கிறீங்க… நாமெல்லாம் பாவம் செஞ்சிருக்கோம்யா… அதான் ஜென்மம் எடுத்திருக்கோம். நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மங்க…  நமக்கு உதவி செய்யலன்னாலும் உபத்திரவம் செய்யாதீங்க.

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு.. ஆயிரம் தொழில் இருக்கு. ஆனா இந்த புனிதமான அரசியலப் பயன்படுத்தாதீங்க.’

-அண்ணாமலையில் இடம் பெற்ற இந்த வசனம்தான் ரஜினியின் சினிமா வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அதன் பிறகு அவரது ஒவ்வொரு படத்திலும் இந்த மாதிரி அதிரடி காட்சிகள், வசனங்களை எதிர்ப்பார்க்க ஆரம்பித்தனர் ரசிகர்கள்.

உழைப்பாளியில் ‘நேற்று கூலி, இன்னைக்கு நடிகன், நாளை…?’

முத்துவில் ‘நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது… ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்…’

இடையில் எந்திரன் படத்தில் மட்டும்தான் அரசியல் வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

இப்போது கபாலியில் அவர் பேசும் ஒரு வசனம் அத்தனைப் பேருக்கும் செம ஷாக். காரணம் அது நேரடியான அரசியல் வசனம்.

‘நண்பா… காந்தி சட்டையைக் கழட்டினதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் பின்னால நிறைய அரசியல் இருக்கு…’

பலருக்கும் எழுந்த சந்தேகம் புரட்சிகரமான அந்த அம்பேத்கர் வசனத்தைப் பேசும்போது ரஜினிக்கு தயக்கம் இருந்ததா? எப்படி ஃபீல் செய்திருப்பார்?

பா.ரஞ்சித்திடம் கேட்டோம்…

“வெளியில் இருப்பவர்கள்தான் ஏதேதோ எழுதுறாங்க… ரஜினி சாருக்கு தெரியாம எதையாவது பண்ண முடியுமா? அந்த வசனத்தை ஷூட் பண்ணும்போது நான் தான் கொஞ்சம் தயங்கினேன். தயங்கிகிட்டே அவர்கிட்ட போய் வசனத்தை படிச்சு காமிச்சு, இதத்தான் நீங்க பேசணும் சார்.. வேணாம்னா மாத்தி தரேன்,” என்றேன்.

அவர் படிச்சிட்டு, ‘அட.. ரொம்ப நல்லாருக்கு.. எனக்கு ரொம்பப் புடிச்சுருக்கு.. இதையே பேசறேன்… எதையும் மாத்தாதீங்க..’’ என்று பாராட்டிட்டு உடனே பேசிக் காமிச்சாரு.

ரஜினி சாருக்கு வாசிக்கிற பழக்கம் உண்டு. இப்பக் கூட படத்துக்கு வர்ற எல்லா விமர்சனங்களையும் ஒண்ணு விடாம அவரோட பார்வைக்கு போய்டுது. மிஸ் பண்ணவே மாட்டார்,’’ என்றார் ரஞ்சித்.

-என்வழி
3 thoughts on “அம்பேத்கர் வசனம் ரொம்ப நல்லாருக்கு… நான் பேசறேன்! – ரஞ்சித்தை தட்டிக் கொடுத்த தலைவர்

  1. sivashanmugam

    எனக்கு இந்த மனுஷனை பார்க்க எப்போ பாக்கியம் கிடைக்குமோ …. இறைவா ………

  2. arul

    yeppa rathina kumar mudiyalana ethavathu legiyam vaangi saapidu allathu rathinakumar engira un peyarai mudiyalai kumar endru maattri vaithukollavendiyathuthane.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *