BREAKING NEWS
Search

செய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்!

இதான்(டா) பிரஸ் மீட்!

சென்னை: தமிழக அரசியலும் செய்தி – ஊடகத் துறையும் ஒருவிதத்தில் ஒரே மாதிரி என்றுதான் கூற வேண்டும். இந்த இரு தரப்பையும் யாராலும் கட்டுக்குள் வைக்கவே முடியாது. அப்படிக் கட்டுப்படுத்த முனைந்தால் குய்யோ முறையோ என கூப்பாடு போடுவார்கள். கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என ஏகப்பட்ட சுதந்திர முழக்கங்கள் எழும். எதுக்குடா வம்பு என்று யாரும் கண்டு கொள்ளாமல் போய்விடுவது இதனால்தான். ஆனால் இந்த இரண்டையும் கட்டுக்குள் வைத்துவிட்டால், ஒட்டு மொத்த தமிழகமும் ஒரு ஒழுக்கத்துக்கு வந்துவிடும்.

முன்பெல்லாம் தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு என்றால், ஊசி விழுந்தால் கூட தெளிவாகக் கேட்கும் அளவுக்கு அமைதி நிலவும். மைக் இல்லாமலேயே தலைவர்கள் பேசுவது அனைவருக்கும் தெளிவாகக் கேட்கும்.

ஆனால் மீடியாவின் வளர்ச்சி, செய்தியாளர்களின் பெருக்கம் காரணமாக இன்றைக்கு ஒரு பிரஸ் மீட்டே மினி பொதுக்கூட்டம் அளவுக்குப் போய்விட்டது. சந்தைக்கடை மாதிரி இரைச்சல். ‘ஏய், ஊய், கேமராவ நகர்த்து, போட்டோகிராபர் ஓரமா நில்லு…, சார் இந்தப் பக்கம் பாருங்க..’ என மீடியாக்காரர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் சத்தம் சகிக்க முடியாத அளவுக்குப் போய்விட்டது.

ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்தபிறகு நடந்த செய்தியாளர் சந்திப்புகளிலும் முதலில் இப்படித்தான் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் போகப் போக ரஜினி – செய்தியாளர் சந்திப்பின் நிறமே மாறி வருகிறது. ‘டோட்டல் கன்ட்ரோல்’ என்பார்களே.. அப்படி ஒட்டுமொத்த செய்தியாளர்களையும் தன் ஒரு பார்வையால் கட்டுப்படுத்தி நிறுத்துகிறார் தலைவர்.

தேவையில்லா கேள்வி என்றால், கையை உயர்த்தி நிறுத்துங்க என்பது போல ஒரு செய்கை, கேட்ட கேள்வியையே திரும்பக் கேட்டால் ஒரு சின்ன முறைப்புடன் அதான் சொல்லிட்டேனே… நெக்ஸ்ட் எனும் கண்டிப்பு, ஒருவர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இன்னொருவர் பேச ஆரம்பித்தால் ஒரு பார்வையால் அவரை அடக்கும் லாவகம்… இந்த மாதிரி கட்டுப்பாட்டை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கூட கொண்டு வர முடியவில்லை. ஜெயலலிதா ஒரு முறை கடுப்பாகி ‘இதுக்குதான் உங்களையெல்லாம் நான் பார்க்கவே விரும்பறதில்லை’ என்று முறைத்துக் கொண்டு போனார். அதன் பிறகு அவர் இறக்கும் வரை செய்தியாளர்களைச் சந்திக்கவே இல்லை.

அரசியலில் இன்னும் முழு வீச்சில் ரஜினி செயல்படும்போது மொத்த அரசியல் களமே மாறும். இன்று அவருக்கு எதிராக சத்தமிட்டுக் கொண்டிருக்கும் சிலரும் கூட, இந்த செய்தியாளர்கள் மாதிரி ஒரு கட்டுக்குள் வந்து நிற்பார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. அதான் ரஜினி என்ற மனிதரின், தலைவரின் சிறப்பு!

– எஸ் ஷங்கர்

என்வழி ஸ்பெஷல்
6 thoughts on “செய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்!

 1. arulnithya

  mutrilum unmai ..seithiyalarkalidamum maatram irunthanthu ..avarkalukku aatharavaga, sve sekarukku ethira pesiyathanalaya? but seithiyalakal mariyathunalathaan “take care sir” nu sonnanggannu ninaikkiren

 2. Arun

  Shankar sir article ellam tamil.oneindia la publish agum. Athukaga ve antha website ah adhigam perukku share pannen. Ippo nane antha website pakurathu illa. Because they spreading wrong news about thalaivar. Eppa pathalum rajini kannada kannada enru ezhuthukindranar. Ana antha website owner eh kannadar than. So publish shankar sir article in this website en vazhi.com

 3. karthi

  i felt same arun,thatstamil trying to create bad impression, negative image on rajini,
  And like rajini said media run by or articles created by kids

  for them one actor is bigger than mgr and rajini,
  directors like few knows everything and bigger than rajini

  once envazhi reader said don’t blame other heroes here bcoz it is rajini website
  only for rajini fans, that is why i have hide other names

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *