BREAKING NEWS
Search

12.12.12… இது நம்ம தலைவர் தினம்!

லைவர் பிறந்த நாளுக்கு இன்னும் கொஞ்சம் டைமிருக்கே என்று நினைப்போடு திரும்பிப் பார்த்தால்…. அட இன்னும் 15 நாட்கள்தான் மிச்சமிருக்கு!

12.12.12… நூறாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் அபூர்வ கால நிகழ்வு. ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறைதான் இப்படி ஒரு மகத்தான மனிதன் பிறப்பான் என காலமே நிர்ணயித்திருக்கிறது!

தலைவர் ரஜினி குறித்து ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும்… இதற்கு முன் எப்போதும் பார்த்திராத அளவுக்கு தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாட ரசிகர்கள் முடிவு செய்து, அதற்கான வேலைகளில் மும்முரமாக உள்ளனர்.

மன்றங்கள் சார்ந்த கொண்டாட்டங்கள் ஒருபக்கம்… மன்றமோ.. அரசியல் சார்போ இல்லாமல் ரஜினி என்ற ‘அச்சை’ சார்ந்து மட்டுமே இயங்கும் தனி நபர்களின் கொண்டாட்டங்கள் என பெரும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எந்த சார்பும் இல்லாத ஒரு தனி மனிதனுக்கு இந்த நூற்றாண்டு பார்த்திராத அளவுக்கு சிறப்பான விழாவினை இந்த டிசம்பர் மாதம் காணவிருக்கிறது.

அந்த நிகழ்வுகள் அனைத்தையும் தலைவரின் வழியில் எதையும் சீர்தூக்கி நடைபோடும் ‘என்வழி’ பதிவு செய்கிறது. அதற்காகவே இந்தப் பகுதி.

ரசிகர்கள், மன்றம் சார்ந்த நிர்வாகிகள், மன்றம் சாராதவர்கள் என அனைவரும் தலைவர் ரஜினி குறித்த தங்கள் கருத்துக்களை, தலைவருக்கான விழா குறித்த தகவல்கள், நிகழ்வுகளை இந்தப் பகுதியில் பதிவு செய்யலாம்.

மறக்காதீங்க… இது உங்கள் பகுதி!

-வினோ




10 thoughts on “12.12.12… இது நம்ம தலைவர் தினம்!

  1. sakthi

    தலைவா
    நீ சிந்தித்து கொண்டே இருக்கிறாய்…
    நீ என்ன சிந்திக்கிறாய்
    என்பது தெரியாவிட்டாலும்,
    எங்களுக்காக சிந்திக்கிறாய்
    என்பது மட்டும்
    தெளிவான உண்மை!

    தலைவனுக்கு வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *