BREAKING NEWS
Search

வயசை வென்ற நம் தலைவர்… ஸ்பெஷல் படங்கள்!

வயசை வென்ற நம் தலைவர்… ஸ்பெஷல் படங்கள்!

தலைவர்.. தி அல்டிமேட்!

தலைவர்.. தி அல்டிமேட்!

லிங்கா படத்தின் படப்பிடிப்பு இடைவெளியில் கர்நாடகக் கடற்கரையோரம் நம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி ஓய்வாக நடக்கும் காட்சி இது. இந்த மனிதருக்கு 63 வயது என்றால் யாராலாவது நம்ப முடிகிறதா.. கடவுளின் சிறப்பு படைப்பு நம் தலைவர்!

இந்தப் படம் சில தினங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. இன்னும் அவர் மைசூர் மற்றும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில்தான் முகாமிட்டுள்ளார். லிங்காவுக்கு தலைவர் 40 நாட்கள்தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்ற வெளியான டுபாக்கூர் செய்திகளின் நம்பகத்தன்மை புரிகிறதா நண்பர்களே… அவர் லிங்காவுக்காக நடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 30 நாட்கள் ஆகிவிட்டன. மைசூர் ஷெட்யூல் முடிந்த பிறகே தலைவர் ஹைதராபாத் செல்கிறார். அதுதான் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு.

Nam-thalaivar-rajini-2

தன் ரத கஜ துரக பதாதிகளுடன் தலைவர்…

இந்த ஷெட்யூல் முடிந்ததும், ஷங்கருடன் அடுத்த பட விவாதத்தில் இறங்குகிறார் தலைவர் என்கின்றன மீடியா செய்திகள்… வாரே வா தலைவா!!

-என்வழி




5 thoughts on “வயசை வென்ற நம் தலைவர்… ஸ்பெஷல் படங்கள்!

  1. Manoharan

    ஷங்கருக்கு அடுத்த படம் செய்வதைவிட ராணாவுக்கு உயிர் கொடுத்து லைவ் மற்றும் அனிமேஷன் கலந்து செய்யலாம்…உண்மையில் கோச்சடையான் effect ல் இருந்து இன்னும் மீளவில்லை…கடைசியாக சில நாட்களுக்கு முன் என்வழியில் கோச்சடையான் பற்றி ஒருவித பய உணர்வுடன் பின்னூட்டம் போட்டிருந்தேன் …ஆனால் படம் பட்டாசாக வந்து ஒரு இன்ப பேரதிர்ச்சியை கொடுத்துவிட்டது…ரஜினியை உட்ச பட்ச தொழில்நுட்பத்தில் எந்திரணில் பார்த்த பின் ஷங்கரை விட்டால் இனி யார் இவ்வளவு உச்சத்தை தொட முடியும் என்ற கேள்வி இருந்தது…என்னதான் ரவிகுமார், சுரேஷ்கிருஷ்ணா போன்றவர்கள் ரஜினியை மாஸ் ஹீரோவாக காட்டினாலும் எந்திரனின் நேர்த்தி வருமா என்பது கேள்விக்குறியாக இருந்தது…ஆனால் இப்போது நம் புலிக்குட்டி வந்துவிட்டது..கதையை மட்டும் கொடுத்தால் போதும் டெக்னிகலாக மிரட்ட நம்மிடமே ஆள் இருக்கிறார் என்ற தைரியம் வந்துவிட்டது..

  2. Deen_uk

    வாவ்!! என்ன ஒரு கம்பீர ஸ்டைல்!! ஸ்டைல் மன்னா!!
    இப்படி தலைவரை பார்க்க மிகவும் சந்தோசமாக உள்ளது..நாங்கள்லாம் மேக்கப் இல்லமா கூட ….ச்சும்மா நின்னாலே ஸ்டைல் தான்!!! பட்டைய கிளப்புங்க தலைவா!! நாங்கள் என்றும் உங்களுடன்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *