BREAKING NEWS
Search

அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’!

காலாவின் ஆடியோ விழா வெற்றிகரமாகவும் திருப்திகரமாகவும் நடந்து முடிந்துள்ளது. இன்றைய தேதியில் சினிமா விழாவோ அரசியல் விழாவோ கூட்டத்தை திரட்ட படாதபாடு படவேண்டும். அரசியல் கட்சிகள் பிரியாணி போட்டு கூட்டம் சேர்ப்பார்கள். சினிமா துறையினர், சேராத கூட்டத்தை கேமரா அங்கிள் வைத்து, சவுண்ட் எபக்டீல்லாம் போட்டு எடிட் செய்து ஒளிபரப்புவார்கள். காலா ஆடியோ விழா – லைவ் பார்த்தவர்கள் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார்கள். ஏனென்றால் தலைவர், தான் கால் பதித்த இடமெல்லாம் மாநாடுதான் என்பதை நிரூபித்து வருகிறார்.

விழா இரவில் நடந்தது என்றாலும், காலை முதலே அரசியல் கட்சிகளை கலங்க ஆரம்பித்துவிட்டன. கட்சி சார்ந்த முக்கிய ஊடகங்கள், இந்த நிகழ்ச்சியை அரசியலுக்கு பயன்படுத்துகிறாரா ரஜினி? எனும் பொருள்பட கருத்துக்கணிப்பு நடத்திக்கொண்டிருந்தன. அமைச்சர் ஒருவர் இன்னும் ஒரு படி மேலே போய், “பாடல்கள் மூலம் மக்களை திசை திருப்புகிறார் ரஜினி,” என கண்டனம் தெரிவித்து இருந்தார். சிலர் விழா அரங்கிற்கு வெளியில் கண்டனப் போராட்டம் செய்ய முயற்சித்து, பின்பு வந்த கூட்டத்தை பார்த்து ஓடிவிட்டனர். எல்லோரும் பயத்தின் உச்ச நிலையில் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

இந்த நிகழ்ச்சியில் சினிமாவைப் பற்றி மட்டும் தலைவர் பேசியிருந்தாலும் அவர் சொன்ன விஷயங்கள் மிகவும் அர்த்தமுள்ளவை. முக்கியமாக, நதிநீர் இணைப்பு – இதை தன் வாழ்நாள் லட்சியம் என்றும், இது நடந்த அடுத்த நாள் தன் உயிர் பிரிந்தால் போதும் என உணர்ச்சிமயமாக கூறியுள்ளார். தான் ஆரம்பிக்கும் கட்சியின் பிரதான கொள்கையே நதிநீர் இணைப்பும், தண்ணீர் பிரச்னையும் தான் என்பதை ஆழமாக உணர்த்தியுள்ளார். நதிநீர் இணைப்பை தவிர பல மாற்று திட்டங்களையும் தலைவர் ஆலோசித்து வைத்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. தண்ணீரை வைத்து அரசியல் பிழைப்பவர்களுக்கு சரியான பதிலடி காத்திருக்கிறது.

புத்திசாலி – அதிபுத்திசாலி மேற்கோள்கள் மூலம், தன்னை பலர் சந்தித்தாலும், அதில் சிலர் ரஜினி யாருடன் கூட்டணி வைத்தால் ஜெயிக்கலாம் என மீடியாவில் பேசினாலும், என்ன முடிவு எடுப்பது, யார் சொல்வதை கேட்பது என தனக்கு நன்றாக தெரியும் என உணர்த்தியுள்ளார். மேலும், தன் முடிவை, தன் பாதையை யாராலும் திசை திருப்ப முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்றே தெரிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தலைவர் தன் ரசிகர்களுக்கு சொல்லும் மெசேஜ் யார் என்ன பேசினாலும் நாம் நம் காதை செவிடாக்கி நம் வேலை பார்த்தாலே போதும் என்பதே. தன் அரைமணி நேர பேச்சில் பல நுணுக்கமான செய்திகளை மிக அருமையாக கடத்தியுள்ளார்.

பத்து பேர் சேர்ந்தாலே கட்டபொம்மனாக மாறி வசனம் பேசும் மனிதர்கள் மத்தியில், இவ்வுளவு பெரிய கூட்டத்தை கண்டபோதும் மிக அடக்கமாக விழாவை தாண்டிய விஷயங்களை பேசாமல் அனைவரும் positive எண்ணங்களை வளர்க்கவேண்டும், பெற்றோர்களை மதிக்க வேண்டும் என அக்கறையான அறிவுரைகளை மட்டும் கூறி விழாவை முடித்தார். அதுதான் தலைவர், அதனால்தான் “தலைவர்”.

– சுப்ரமணியன்
3 thoughts on “அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’!

  1. kumaran

    ippadi oru koottathill veru yaaraga irundhaalum unarchi vasapattu ulariirupaanga ,aanna THALAVAR GREAT ENBADHAI MEENDUM NIRUBITHU ULLAAR

  2. yasin

    Mr. Dhanus please post pone kala release 7th June instead of release eid because of Muslim fans during of Ramadan difficult to watching movie
    please send the dhanus mobile no also
    Mr. vinodth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *