BREAKING NEWS
Search

கபாலி மேக்கிங் வீடியோ: அட, அவர் நடைய பாருய்யா… அந்த ஸ்டைலப் பாருங்கய்யா!!

கபாலி மேக்கிங் வீடியோ: அட அவர் நடைய பாருய்யா… அந்த ஸ்டைலப் பாருங்கய்யா!!

kabali-making-3

சிவாஜியில் தலைவர் ரஜினியைப் பார்த்ததும் சாலமன் பாப்பையா அடிக்கும் கமெண்ட்தான் கபாலி படத்தின் ஒரு நிமிட மேக்கிங் வீடியோவைப் பார்த்ததும் நமக்குத் தோன்றியது.

நேற்று இரவு 10 மணிக்கு வெளியிடப்பட்ட அந்த வீடியோவை இன்று காலைக்குள் 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

kabali-making-2

இந்த வீடியோவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும்  ஒரு ஆக்ஷன் காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் ரஜினியின் வேகமும் ஸ்டைலும், அவருக்கே உரித்தான அந்த அதிவேக நடையும் பார்ப்பவரை பிரமிக்க வைக்கிறது.

இந்த வயதில், இத்தனை வசீகரமாக, ஸ்டைலாக, வேகமாக நடிக்கக் கூடிய ஒரே நடிகர் ரஜினியாகத்தான் இருக்க முடியும். அப்படி ஒரு மாஜிக் அவரது நடிப்பில்!

kabali-making-4

நாளை மறுநாள் உலகெங்கும் கபாலி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு முதல் வாரம் முழுக்க எங்கும் டிக்கெட் கிடைக்கவில்லை.

இந்த மேக்கிங் வீடியோ பார்த்த பிறகு, ‘தலைவா… எப்படியாவது முதல் நாள் முதல் காட்சி உங்களை திரையில் பார்த்தாக வேண்டும்…’ என்று தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.

-என்வழி




2 thoughts on “கபாலி மேக்கிங் வீடியோ: அட, அவர் நடைய பாருய்யா… அந்த ஸ்டைலப் பாருங்கய்யா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *