BREAKING NEWS
Search

மின்சார போதையில் மிதக்கும் சென்னைக்கு கிராமங்களின் கஷ்டம் தெரியாதுதான்!

மின்சார போதையில் மிதக்கும் சென்னைக்கு கிராமங்களின் கஷ்டம் தெரியாதுதான்!

TRIBAL_117900f

சென்னைக்கு மின்வெட்டின் வலி இரண்டு மணிநேரம்தான். அதனால் அவர்களுக்கு அது ஒரு விஷயமாகவே தெரியவில்லை. அவர்களை ஒருவித போதையிலேயே வைத்திருப்பதுதான் தமக்கு பாதுகாப்பு என்பதில் ஆட்சியாளர்கள் தெளிவாக உள்ளனர். எந்த பத்திரிகையும் இப்போது மின்வெட்டு பற்றி எழுத ஆர்வம் கூட காட்டுவதில்லை.

ஆனால் வட மாவட்டங்களில் 20 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருக்கிறது. நேற்று ஜோலார்பேட்டையில் பகலில் மின்சாரம் இருந்தது வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே.

வேலூர், தர்மபுரி மாவட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவில் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருந்தது. கடுமையான வெக்கை ஒருபக்கம். நள்ளிரவில் போன மின்சாரம் மீண்டும் காலை 6 மணிக்கு வந்தது. 8.30 மணிக்குப் போய்விட்டது. அப்புறம் எப்போது வந்தது என நினைவில்லை!

தொழில் நகரம் எனப்படும் ஓசூரில் நிலைமை மிக மிக மோசம். கிருஷ்ணகிரியில் 4 மணிநேரம் கூட இல்லை.

மின்சாரம் என்பதே இல்லாத சூழலில், அதை நம்பி விவசாயம் செய்தவர்கள் வெலையின்றி வெட்டியாய் திரிகின்றனர். கிடைக்கும் சொற்ப மழை நீயும் அலட்சியமாக கோட்டை விட்டதன் பலனை அனுபவிக்கிறார்கள்.

இனி மின்சாரத்தை நம்பி விவசாயம் செய்ய முடியாது. தஞ்சையின் ஒரு பகுதியே வறண்டுவிட்ட சூழலில், ஏற்கெனவே வறட்சி தாண்டவமாடும், ஆறுகளில்லாத வட மாவட்டங்களின் நிலையை சொல்ல வேண்டியதில்லை. ஆட்சியாளர்கள் உதவ மாட்டார்கள். அவர்கள் கமிஷன் தரகர்கள் மட்டுமே. இயற்கையை நாசமாக்காமல், கிடைக்கும் நீரை பாதுகாத்து வைத்துக் கொள்ளாவிட்டால், வட மாவட்டங்கள் நிரந்தரமாகவே பாலைவனமாகிவிடும் அபாயம் நெருங்கி வருகிறது.

மக்கள் தங்களுக்கு தேவையானதை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் வந்திருக்கிறது. விஞ்ஞானமும் தொழில்நுட்ப உச்ச வளர்ச்சியும் கம்ப்யூட்டர், செல்போன், விண்வெளி என்ற அளவோடு நின்றுவிட்டது.

இதுவும் கடந்து போகும் என வரட்டு வேதாந்தம் பேசாமல், இயற்கையோடு இயைந்து வாழப் பழகிக் கொள்வதே புத்திசாலித்தனம்!

வினோ
-என்வழி ஸ்பெஷல்
6 thoughts on “மின்சார போதையில் மிதக்கும் சென்னைக்கு கிராமங்களின் கஷ்டம் தெரியாதுதான்!

 1. Jegan

  Jeyalalita aatchiyil mazhai peiyathu
  this is history.
  ‘as thalaivar says, ‘even god cannot save tamilnadu’

 2. குமரன்

  As soon as I entered this page, I saw the beauty of the huts with the nature as its background. These houses do not spoil the natural beauty and they just merge with the nature. I imagined the concrete constructions in their place and just could not digest as to how much they would spoil this beautiful skyline.

  The final sentence of this article said the same message.

  We need to merge with nature and lead a peaceful life.

  The question arises:

  Are the huge dams across the rivers needed?
  Do they not tamper with nature?
  Aren’t they the primary cause of drying of wet lands in the lower riparian areas?
  Aren’t they the primary cause of all the water disputes and division among people of different regions of the same Nation?
  Would it not be better to have smaller check dams at shorter distances to support irrigation than huge Dams across rivers?

  The Narmada and Tehri agitations are meaningful and need to be supported.
  (I am sorry the Tamil typing is not properly enabled today and I could not postpone expression of my views on this most important matter)

 3. srikanth1974

  வெள்ளத்தில் வீழ்ந்தவரைக் கரையேற்ற சக்தி கொடு
  பள்ளத்தில் கிடப்பவரை மேடேற்ற சக்தி கொடு
  தீமைக்கும்,கொடுமைக்கும்,தீ வைக்க சக்தி கொடு
  வறுமைக்குப் பிறந்தவரை வாழ்விக்க சக்தி கொடு
  எரிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு
  ஒரு வார்த்தை சொன்னாலே ஊர்மாற சக்தி கொடு

  இறைவா தலைவருக்கு சக்தி கொடு விரைவா .

 4. karthik

  உணர்வுள்ள ஒரு தமிழன் என்று தமிழக முதல்வன் ஆகிறானோ அன்று தான் நாம் இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு விடியல் வரும்…

 5. enkaruthu

  முடியவில்லை சென்னைவாசிகளே அவர் அவர் குளிர்சாதனம் வைத்ததால் இரவு 3 மணி வரை ஒரே புழுக்கம்தான்.எங்கள் மக்கள் மற்றும் குழந்தைகள் நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *