BREAKING NEWS
Search

சிவாஜி சிலையை அகற்ற தமிழக அரசு ஒப்புதல்!

சிவாஜி சிலையை அகற்ற தமிழக அரசு ஒப்புதல்!

ijhabbjb
சென்னை: மெரினா கடற்கரைச் சாலையில் வைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக தொடரப்பட்ட பொது நல மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசு, அந்த சிலையை அகற்றலாம் எனத் தெரிவித்துள்ளது.

இதுபற்றிய ஒரு விரிவான செய்தித் தொகுப்பு:

மறைந்த சாதனை நடிகர் சிவாஜி கணேசனின் சிலை, மெரினா கடற்கரைச் சாலையில் சில ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி முதல்வராக இருந்த போது தமிழக அரசால் நிறுவப்பட்டது.

ஒரு பிரமாண்ட விழாவில் அந்த சிலையை கருணாநிதிதான் திறந்து வைத்தார்.

ஆனால் சிலை வைக்கும் முடிவு வெளியானதுமே முன், 2006-ம் ஆண்டிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.என்.சீனிவாசன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘காமராஜர் சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், காந்தி சிலைக்கு முன்பாக நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை வைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து காரணங்களுக்காக இந்த சாலையில் சிவாஜி கணேசனின் சிலையை வைக்க அனுமதிக்கக்கூடாது. அதை வேறு ஒரு இடத்தில் நிறுவ அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். என்றாலும், அரசு முடிவு செய்திருந்த அந்த இடத்தில் சிவாஜி கணேசனின் சிலை வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சிவாஜி கணேசன் சிலையை ராணிமேரி கல்லூரி முன்பு நிறுவப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று அட்வகேட் ஜெனரல் வாதிட்டார்.

இதற்கு மூத்த வக்கீல் காந்தி பதில் அளித்து வாதிட்டபோது, “நெடுஞ்சாலைகளில் சிலைகள் நிறுவப்படக்கூடாது. அங்கு சிலை அமைப்பதற்கு அனுமதி கிடைத்திருந்தாலும், போக்குவரத்துக்கு அந்த சிலை இடையூறாக உள்ளது.

காமராஜர் சாலையில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு வலதுபுறமாக திரும்பும்போது, வாகன ஓட்டிகள் பக்கவாட்டில் பார்க்க முடியாத அளவுக்கு பார்வையை சிலை மறைக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

உடனே இந்த வழக்கில் தமிழக அரசின் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி இன்று தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனு:

காமராஜர் சாலையிலிருந்து வலது புறமாக ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்புவோருக்கு சாலை சரியாக தெரியாமல் மறைக்கும் வகையில் சிவாஜி கணேசன் சிலை உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. எனவே அந்தச் சிலையை அகற்றலாம். சிலையை அகற்றி மெரினா கடற்கரையோரம் வைக்கலாம்,  என அரசு பதில் மனுவில் பரிந்துரைத்துள்ளது.

திரைப்படத் துறையினர் அதிருப்தி

இந்த சிலையை அகற்றக் கூடாது என தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களும் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் மனு கொடுத்திருந்தன.

இப்போது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு, தமிழ் சினிமாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தாலும், அதுபற்றி குறைந்தபட்சம் கருத்து தெரிவிக்கக்கூட யாரும் முன்வராதது குறிப்பிடத்தக்கது!!

-என்வழி செய்திகள்




10 thoughts on “சிவாஜி சிலையை அகற்ற தமிழக அரசு ஒப்புதல்!

  1. sakthi

    தமிழ் சினிமா காரங்க கருத்து சொல்ல யாரு முதலில் வாரங்கனு பார்க்கலாம்?

  2. மிஸ்டர் பாவலன்

    //போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சிலைகளை அகற்றுவது நல்ல விஷெயம். //

    அதே! அதே! யார் சிலை என்பதை நாம் பார்க்க வேண்டாம். யாரால்
    நிறுவப்பட்டது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். சிலை எங்கு
    இருக்கிறது என்பதைத் தான் பார்க்க வேண்டும். அமரர் சிவாஜி
    உலகெங்கும் தன் நடிப்பால் சாம்ராஜ்யம் அமைத்தவர்.

    //அரசியல் காரணம் கூடாது. //

    இதில் எந்த அரசியல் காரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

    நல்ல முடிவு – நான் வரவேற்கிறேன்.

    -== மிஸ்டர் பாவலன் ==-

  3. kumaran

    வேறு இடத்தில வைக்கலாம் என்று சொன்ன பிறகு திரை துறையினர் என்ன கருத்து சொன்னாலும் பிரச்சினை தான்

  4. மிஸ்டர் பாவலன்

    சென்ற பதிவில் ஒரு typo உள்ளது:

    அதே! அதே!

    யார் சிலை என்பதை நாம் பார்க்க வேண்டாம்.

    யாரால் நிறுவப்பட்டது என்பதையும் நாம் பார்க்க வேண்டாம்..

    சிலை எங்கு இருக்கிறது என்பதைத் தான் பார்க்க வேண்டும்.

    அமரர் சிவாஜி உலகெங்கும் தன் நடிப்பால் சாம்ராஜ்யம் அமைத்தவர்.

    நன்றி!!

    -== மிஸ்டர் பாவலன் ==-

  5. jey

    போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் சிலையை அகற்றி வேறு இடத்தில் வைத்தால் பரவாயில்லை.கண்ணகி சிலை போல் ஆகிவிடக்கூடாதே என்பது தான் என் கருத்து. மற்றபடி சிவாஜி அவர்கள் புகழை ஆட்சியாளர்களே நினைத்தாலும் மறைக்க முடியாது.

  6. மிஸ்டர் பாவலன்

    //கண்ணகி சிலை போல் ஆகிவிடக்கூடாதே என்பது தான் என் கருத்து. //

    கண்ணகி சிலை என்ன ஆச்சு?

    -== மிஸ்டர் பாவலன் ==-

  7. Jey

    மிஸ்டர் பாவலன் உண்மையிலேயே தெரியாமல் கேட்பது போல இல்லையே? இதில் ஏதேனும் உள் குத்து இல்லையே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *