BREAKING NEWS
Search

தமிழகத்துக்கு மே 16-ல் தேர்தல்… புதிய முதல்வர் யார்? மே 19-ம் தேதி தெரியும்!

தமிழகத்தின் புதிய முதல்வர் யார்? மே 19-ம் தேதி தெரியும்!

டெல்லி: தமிழ்நாட்டில் மே 16ஆம் தேதி திங்கள்கிழமை 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு தேர்தல் நடக்கும் அன்றே கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

தமிழ்நாட்டில் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு 5 நாளுக்கு முன்பு இவர்களுக்கு வாக்குச் சீட்டு தரப்படும். வாக்காளர் படத்துடன் கூடிய பூத் சிலிப் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் இரு கட்டங்களாகவும், மேற்கு வங்காளத்தில் 6 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 29ஆம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற மே 2ஆம் தேதி இறுதி நாளாகும்.

5 மாநிலத்திலும் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான எண்ணிக்கை மே 19ஆம் தேதி வியாழக்கிழமை எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். அன்றே தமிழகத்தின் புதிய முதல்வர் யார் என்பது தெரிந்துவிடும். மே 21-ம் தேதிக்குள் அனைத்து தேர்தல் நடைமுறைகளும் முடிவுக்கு வந்துவிடும் என தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

என்வழி செய்திகள்




3 thoughts on “தமிழகத்துக்கு மே 16-ல் தேர்தல்… புதிய முதல்வர் யார்? மே 19-ம் தேதி தெரியும்!

  1. Rajagopalan

    Boss edhunala Kabali release thalli poguma?
    June month school college ellam open ayidum…

  2. Rajagopalan

    Ana onnu Boss..
    Ennikum namaku Mudhalvan Thalaivar matume…
    Kabali – The Emperor…

  3. srikanth1974

    நூறு முட்டாள்கள் சேர்ந்து ஒரு அயோக்கியரை தேர்ந்து எடுப்பதற்கு
    பெயர் தேர்தலாம் வெங்காயம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *