BREAKING NEWS
Search

இந்தப் பிழைப்புக்கு…!


மிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்களின் படங்கள் வெளியாகின்றன. மிக மிக சுமாராக இருந்தால் கூட கண்டு கொள்ளாமல் கடந்து போகிறார்கள் விமர்சகர்கள் அல்லது சமூக வலைத்தளங்களில் எதையும் எதிர்மறையாகவே சித்தரிக்கும் வலைவாசிகள். குறிப்பாக சில முன்னணி நடிகர்களின் மோசமான படங்களைக் கூட கொண்டாடுகிறார்கள். இத்தனை கோடி அத்தனை கோடி என எந்த ஆதாரமும் இல்லாமல் அடித்துவிடுகிறார்கள்.

ஆனால் ரஜினிகாந்த் நடித்த படம் என்று வந்தாலே அத்தனை வன்மத்துடன் எதிர்மறைக் கருத்துகளைப் பரப்புகிறார்கள்.

ட்ரேக்கர்ஸ் என்ற பெயரில் யாருக்கோ கூலிக்கு மாரடிக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்கிறார்கள் சில ட்விட்டர் குருவிகள். அவர்களுக்கு இணையாக சில இணைய தளங்களும் செய்தி எனும் பெயரில் விஷமத்தனம் செய்து வருவதை இப்போது கண்கூடாகவே பார்க்க முடிகிறது.

இன்னொரு கூட்டம் இருக்கிறது. இவர்கள் சினிமாவிலேயே இருப்பவர்கள். தினந்தோறும் ‘என்ன ரஜினி படம் ஊத்திக்கிச்சாமே.. கூட்டமே இல்லையாமே.. காத்து வாங்குதாமே’ என தங்கள் ஈகோவைத் திருப்திப்படுத்திக் கொள்பவர்கள். இவர்கள் வேலையே தினமும் இப்படி சக சினிமாக்காரர்களிடம் பிரச்சாரம் செய்வதுதான். ‘இந்த வாரம் 2.0 படத்துக்கு நாலு டிக்கெட் வாங்கித் தாயேன் பார்க்கலாம்’ என்று கேட்டால், ‘அது… வத்தலகுண்டு பக்கத்துல என் பிரண்ட் இருக்குன்னு சொன்னாண்ணே…’ என்று கூறிவிட்டு எஸ்ஸாகிவிடுவார்கள்.

சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே வீழ்த்த முடியாத சக்தியாக ரஜினிகாந்த் செயல்படுவதுதான் இவர்களின் பிரச்சினையே என்பதை சாமானியர்கள் இப்போது எளிதாக உணர்ந்துவிட்டனர்.

செய்தி இணைய தளம் என்ற பெயரில் தமிழில் இயங்கும் சில தளங்கள் ரஜினி எதிர்ப்பு செய்திகளை மட்டும் வெளியாக வேண்டும் என தீர்மானமாக முடிவெடுத்துச் செயல்படுகின்றன(ர்). ரஜினி என்ன செய்தாலும் அதை எதிர்மறையாக சித்தரிப்பது மட்டும்தான் இந்த தளங்களின் அதிமுக்கிய வேலை. எடிட்டோரியல் டீமே இதற்காக ஓவர் டைம் வேலைப் பார்க்கிறது. வெளியில் சொன்னால் காரித் துப்பிவிடுவார்கள். ரஜினி என்ற ஆளுமைக்கு மாற்றாக ஒருவரை முன் நிறுத்த வேண்டும் என்பதே இவர்களின் அதி தீவிர முனைப்பாக உள்ளது.

‘அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமுள்ள யாரும் என் கட்சியில் சேர வேண்டாம்’ என ரஜினி முன்பு அறிவித்தார். இதை யாராவது குற்றம் சொல்ல முடியுமா… சொல்லப் போனால், ரஜினிக்கு பாராட்டு மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் வெளியில் அரசியல் வியாபாரமாகிவிட்டதே என நீலிக் கண்ணீர் வடிக்கும் இந்த இணைய ரவுடிகள், ரஜினி அதைச் சொன்ன உடனே ரஜினிக்கு எதிராக கம்பு சுற்ற ஆரம்பித்தனர். எப்படித் தெரியுமா? ‘பணம் சம்பாதிக்காமல் எப்படி ரஜினி ரசிகர்கள் இயங்க முடியும்?’ ‘அப்படியென்றால் மற்ற அரசியல்வாதிகள் அரசியலில் பணம் சம்பாதிக்கிறார்களா?’ ‘ரஜினிக்கு கள நிலவரம் தெரியவில்லை. செலவழிக்காமல் எப்படி வெற்றி பெறுவார்?’ என்றெல்லாம் பிதற்ற ஆரம்பித்துவிட்டர். இதை வைத்து டிவிக்களில் விவாதங்கள் வேறு.

இதோ… கஜா புயல் நிவாரணம். அரசு அறிவிக்கும் முன்பே ரூ 50 லட்சம் உதவியும், தனது மக்கள் மன்றம் மூலம் ரூ 2 கோடி வரை நிவாரணப் பொருள்களும் அனுப்பியவர் ரஜினி ஒருவர்தான். ஆனால் ஒரு மேதாவி பிதற்றுகிறது… ‘ரஜினி கஜா பாதிப்புக்கு ஒன்றுமே செய்யவில்லையே… அட்லீஸ்ட் நேரிலாவது போயிருக்கலாம்.. நல்ல வாய்ப்பை இழந்துவிட்டாரே!’ என்று. அட காப்பி & பேஸ்ட் கம்னாட்டிகளா… குறைந்தது உங்கள்ல யாராவது ஒருத்தனாவது ஸ்பாட் விசிட் பண்ணி செய்தி எழுதியிருப்பீங்களா… எங்கோ கண்காணாத இடத்தில் உட்கார்ந்து கொண்டு, ரஜினி இப்படி பண்ணியிருக்கலாமே என அட்வைஸ். இதுக்குப் பேரா மீடியா தர்மம்!

2கடந்த வாரம் வெளியான 2.0 படம் எந்த அளவுக்கு வெற்றி என்பதை சர்வதேச திரையுலகமே அறியும். வட இந்தியாவில் கொண்டாடுகிறார்கள். இந்தியில் 6 நாட்களில் ரூ 122 கோடி வசூல் செய்த முதல் தமிழ் டப்பிங் படம். தமிழில் சரித்திரம் காணாத அளவு ரூ 125 கோடியைக் குவித்துள்ளது. இன்னும் பல நாடுகளில் வியப்பை ஏற்படுத்தும் வெற்றியைப் பெற்றுள்ளது. சீனாவில் 56000 அரங்குகளில் வெளியாகப் போகிறது. எத்தனை பெருமை தமிழ் & இந்திய சினிமாவுக்கு? ஆனால் இந்த ‘தமிழ் நண்டு’கள் சில இந்தப் படத்தைப் பற்றி எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு கேவலப்படுத்த முயல்கின்றனர். ஆனால் அந்தப் படமோ நாளாக நாளாக இன்னும் இன்னும் மக்களை ஈர்த்துக் கொண்டுதான் உள்ளது.

இதெல்லாம் சாம்பிள்தான். இன்னும் நிறைய… கிட்டத்தட்ட தினந்தோறும் நடக்கிறது ரஜினிக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரம்.

ரஜினி என்ற பெயரை வைத்து இந்த இணையதளங்களும், டிவிக்களும் எந்த அளவு பணம் பார்க்கிறார்கள் தெரியுமா? ஏன்.. முற்றாக அவர் பேச்சை, செய்திகளைப் போடாமல் விட்டுப் பார்க்கட்டுமே… மானம் மரியாதை இருந்தால் அவரது பெயரைக் கூட உச்சரிக்காமல் இருக்கட்டும் பார்க்கலாம். ஆனால் இவர்களால் முடியாது. ஈ ஓட்ட வேண்டி வரும். அதனால் ரஜினி பெயரை வைத்து தினந்தோறும் அவதூறுகள் பரப்பி, அதில் லாபம் பார்ப்பதுதான் இவர்கள் பிரதான பிழைப்பே.

இந்தப் பிழைப்புக்கு…!

-வினோ

என்வழி
4 thoughts on “இந்தப் பிழைப்புக்கு…!

 1. arul

  Naayum pilaikkumaa intha pilaippu ..pattu kottaiyaar sonnathu thaan manathukku varuthu..DMK and others are doing this..thats why they are sombu thooking VIJAY

 2. ஈ.ரா

  100% உண்மை ….மிகச் சரியாக எழுதி உள்ளீர்கள்.. ஒவ்வொரு உண்மையான ரசிகனின் மனதில் நினைத்திருப்பது ..

 3. காந்தி

  வினோ சார்
  உங்களின் பதிவை சமீப காலமா காண முடிவதில்லை ஏன்
  பைசா வாங்கி கொண்டு நிறைய இணைய தளங்கள் இப்படிதான் இருக்கின்றன.அவங்களுக்கு பிழைப்பு ஓட ரஜினி வேணும்

 4. Saravanan Madderi Sivalingam

  indha media echchaigal …. namma thalavara onnum cheyya mudiyadhu …

  do not worry sir…

  our thalaivar is the NEXT CM.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *