BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் பட்டமா…. அய்யோ, எனக்கு வேணாம் சாமி… அலறும் ஹீரோக்கள்!!

ஹீரோக்களே… அந்த பயம் இருக்கட்டும்!

kabali-stills-02

தொடக்கூட இடத்தை தொட்டால் படக்கூடாத வேதனையை பட வேண்டும் என்பதை ரொம்ப லேட்டாக உணர்ந்திருக்கிறார்கள் தமிழ் சினிமாவின் இன்றைய ஹீரோக்கள்.

எம்ஜிஆருக்கு பிறகு தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்குத்தான் ரசிகர்கள் அதிகம். இன்று இருக்கும் ஹீரோக்களுக்கு ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட நிச்சயம் ரஜினி ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். ரஜினி நடிப்பதை கொஞ்சம் குறைத்துக்கொண்டதால் பிற ஹீரோக்களுக்கு ரசிகர்களாக மாறி இருப்பார்கள். ஆனாலும் உள்ளுக்குள் அந்த ரஜினி ரசிகன் இருந்துகொண்டேதான் இருப்பான். இந்த உளவியலால்தான் ‘நான் ரஜினி ரசிகன்’ என்று சொல்லிக்கொள்ளும் ஹீரோக்களுக்கு பின்னால் கூட்டம் கூடுகிறது. விஜய், சிவகார்த்திகேயன் முதல் லாரன்ஸ் வரை அப்படித்தான். ஆனால் அந்த பொன்முட்டையிடும் வாத்தை அறுக்க நினைத்தால்?

ஆமாம்… ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கே ஆசைப்பட்டால்… சும்மா விட்டுவிடுவார்களா? லாரன்ஸ் கதிதான். மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை லாரன்ஸ் போட்டுக்கொள்ள சமூக வலைதளங்களில் மட்டுமல்லாது தியேட்டர்களிலும் கழுவி ஊற்றப்பட்டார். ஒரு படம் டைட்டில் கார்டிலேயே தோல்விப் படமான வரலாற்று சம்பவத்துக்கு காரணமானது லாரன்ஸின் மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம். இப்போது லாரன்ஸ் மட்டுமல்ல அனைத்து ஹீரோக்களுமே நல்ல பாடத்தை கற்றுக்கொண்டிருப்பார்கள்.

‘ரஜினிக்கு இருப்பதெல்லாம் வயதான ரசிகர்கள்… அவர்களுக்கும் சமூக வலைதளங்களுக்கும் பரிச்சயம் இருக்காது’ என்று நினைத்தவர்களுக்கு சமூக வலைதளங்களில் இருக்கும் லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து விட்டார்கள். ரசிகர்களைத் தாண்டி பொதுவான இளைஞர்கள் லாரன்ஸை காய்ச்சி எடுத்துவிட்டார்கள். அவர்கள் போட்ட ஒவ்வொரு மீம்ஸூம் ஒரு கட்டுரைக்கு சமம்.

5249883e-a9ca-42db-a8d8-4b7ce4bea271

இதையெல்லாம் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்த, சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்ட மற்ற நடிகர்கள், இப்போது ‘அந்தப் பட்டமே வேணாம்டா சாமி’ என்று அலறுகிறார்களாம்!

அந்த பயம் இருக்கட்டும்!

– க ராஜீவ் காந்தி




4 thoughts on “சூப்பர் ஸ்டார் பட்டமா…. அய்யோ, எனக்கு வேணாம் சாமி… அலறும் ஹீரோக்கள்!!

  1. anbudan ravi

    அதுவும் அவர் நடித்திக்கொண்டிருக்கும்பொழுதே அவரின் பட்டத்தை தட்டி பறிக்க நினைக்கும் இவர்களுக்கு மூளை இருக்கிறதா என்றே தெரியவில்லை. லாரன்ஸ் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தோம் இன்னமும் வைத்திருக்கிறோம்….அவருக்கு தெறியாமல் பட்டத்தை இயக்குனர் போட்டுவிட்டார் என்று சொல்கிறார், அவர் பல நற்காரியங்கள் செய்துகொண்டிருக்கிறார் என்கிற அடிப்படையில் நாமும் நம்புவோம்.

    அன்புடன் ரவி.

  2. ஸ்ரீகாந்த்.1974

    சூரியனை எட்ட நின்னு ரசிப்பதோடு நிறுத்திக்கொள்

    கிட்டப்போய் தொடனும்னு நினைக்காதே தாங்க மாட்ட ……

  3. Raghul

    “எம்ஜிஆருக்கு பிறகு தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்குத்தான் ரசிகர்கள் அதிகம்”.

    Is it needed ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *