BREAKING NEWS
Search

ஈழமும் தமிழக மக்களும்… – ஒரு வரலாற்றுப் பார்வை

ஈழமும் தமிழக மக்களும்… – ஒரு வரலாற்றுப் பார்வை

ழ விஷயத்தில் திமுக அவ்வப்போது தடுமாறுவதற்கும், நிலையான நிலைப்பாட்டை எடுக்கமுடியாமல் அதை இரண்டாம்பட்சமாகவே நோக்குவதற்குமான காரணம் இந்த கட்டுரையில் உள்ளதென நம்புகிறேன். மக்களின் எதிர்வினையே ஒவ்வொரு அரசியல் கட்சியின் நடவடிக்கைகளையும் நிர்ணயிக்கிறது!

தமிழகத்தில் ஈழ உரிமைப் போராட்டம் பற்றிய வெவ்வேறு கருத்துக்கள் நிலவும் இவ்வேளையில் ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் ஈழம் குறித்த உணர்வுகளை வரலாற்று சம்பவங்களை வைத்து அலசுவதே இந்தக் கட்டுரை!

சூழ்நிலைக்கேற்ப மாறும் மக்களின் நிலைப்பாடுகளையும், அதற்கேற்ப அவ்வப்போது மாறி வந்திருக்கும் தமிழக அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகளையும் சில வரலாற்று நிகழ்ச்சிகளால் நினைவூட்டுகிறேன்.

30-3-1990 அன்று தமிழகச் சட்டப்பேரவையில், இலங்கையிலிருந்து இந்திய அமைதிப்படை தமிழகம் வந்த போது, தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் ஏன் வரவேற்கச் செல்லவில்லை என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்திய ராணுவம் இலங்கையிலே எப்படி நடந்து கொண்டது என்பதைப் பற்றி 1988ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தனக்கு எழுதிய கடிதத்தை கலைஞர் சட்டசபையிலே படித்துக்காட்டி, இந்திய ராணுவத்தின் மீது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சகலவிதமான மரியாதையும் உண்டு, ஆனால் இலங்கையிலே அந்த ராணுவம் இலங்கைத் தமிழர்களையே தாக்கி நசுக்கிட முயற்சித்தது என்பதால் தான் வரவேற்கச் செல்லவில்லை என்றும், ராணுவம் மதிக்கத்தக்கது, மரியாதைக்குரியது, ஆனால் தவறு செய்யும்போது ராணுவத்தை ஆதரிக்க வேண்டுமென்பதில்லை என்றும் பதிலளித்தார்.

இந்த சம்வத்தையும், பத்மனாபா கொலையையும் காரணம் காட்டி ஜெயலலிதா மத்திய அமைச்சரவைக்கு கொடுத்த அழுத்தத்தின் பேரில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

அதன் பின் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போது 1991ல் ராஜீவ் தமிழகத்தில் வைத்து கொல்லப்படுகிறார். அவரின் இறப்பிற்கு புலிகளும், திமுகவும் தான் காரணம் என அதிமுகவால் பிரச்சாரம் செய்யப்பட்டது, தமிழகமெங்கும் காங்கிரஸ்காரர்களாலும், அதிமுகவினராலும் திமுககாரர்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட தாக்கப்பட்டார்கள். 1991ல் நடந்த தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஜெயித்தது. ராஜீவ் கொலைக்கு திமுகவுக்கு கிடைத்த தண்டனையாகவே இது கருதப்பட்டது.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஈழ ஆதரவாளர்களாக இருந்த தமிழக மக்களின் மனநிலை அப்படியே மாறி விடுதலைப்புலிகளுக்கு எதிரானதாக மாறியதை நாம் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிகழ்வித்த கோர சம்பவங்களையும், பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதையும் தமிழக மக்கள் மறந்தே விட்டார்கள்!


தேர்தலில் கிடைத்த படுதோல்விக்குப் பின் அதிதீவிர ஈழ ஆதரவு கட்சியாக இருந்த திமுக தன் புலி ஆதரவை வெளிப்படையாக காட்டாமல் மாநில அரசியலில் மட்டும் கவனம் செலுத்தியது.

1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினியின் தண்டனை குறைப்பிற்காக தீர்மானம் நிறைவேற்றியது. ஒன்றை நாம் நன்றாக கவனிக்க வேண்டும், 1991 தேர்தலில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான மனநிலை கொண்டிருந்த மக்களின் நிலைப்பாட்டில் பெரிய மாறுபாடு இல்லாத நேரத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது திமுக அரசு. இதனால் ராஜீவ்வின் பால இரக்கம் கொண்டிருந்த மக்களின் ஆதரவை பெறுவதற்காக மீண்டும் தன் விடுதலைப்புலிகள் எதிர்ப்பு நிலைப்பாட்டை கையிலெடுத்த ஜெயலலிதா, 1997ஆம் ஆண்டு விடுத்த அறிக்கையில், “சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார், விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புலிகள் தமிழகத்தில் நிம்மதியாக உலவுகிறார்கள்,” என்று நமது எம்.ஜி.ஆரில் கட்டுரை எழுதினார்.

பின் 2001ல் வந்தது அதிமுக ஆட்சி. 16-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையிலேயே ஜெயலலிதா, “விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து தூக்கில் இடுவதற்காக இந்திய அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றும் பேசினார்.

இதன்பின் தமிழ்நாட்டில் கிடப்பில் கிடந்த தமிழுணர்வு – ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்ட போது, இப்போது பேரரிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குக்கு இருக்கும் எதிர்ப்பில் ஒரு துளி கூட அப்போது இல்லை. இப்போது அவர்களைக் காப்பாற்ற களமிறங்கியிருக்கும் எந்த அரசியல்வாதியும் அப்போது எதிர்க்கவில்லை – 2009ல் ஈழப்போரில் நடந்த படுகொலைகள் வெளித்தெரிய ஆரம்பிக்கவும் மீண்டும் எழுந்தது!

அதன்பின் நடந்தது சமீபகாலமாக செய்திகளை பின்தொடர்பவர்களுக்கெல்லாம் தெரியும். ஒரு விஷயத்தை மேலுள்ள வரலாற்றை வைத்து நாம் கவனிக்க வேண்டும்! தமிழ் மக்கள் எப்போதுமே ஈழ ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்தார்கள் என்பது ஈழப்போரின் இறுதிகட்டத்தின் காரணமாக இப்போது தமிழகத்தில் முளைத்திருக்கும் சில அரசியல்வாதிகளின் புனைவு.

தியாகி முத்துக்குமாரின் மரணத்தின் போது எழுந்த ஒரு எழுச்சி அலையை அப்போதைய ஆட்சியாளர்கள் அடக்கியதால்தான் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் எதும் எழவில்லை என்போர் உண்டு.

ஆனால் உலக வரலாற்றில் இதுவரை நடந்த எந்த புரட்சியையாவது ஆட்சியாளர்கள் எதிர்க்காமலோ, அடக்காமலோ இருந்தார்கள் என வரலாறு உண்டா? ஆட்சிக்கு வந்தால் எப்பேற்பட்ட புரட்சியாளனும் கூட அடக்குமுறையாளன் ஆகிவிடுவான்! க்யூபாவில் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்த கேஸ்ட்ரோ தானே இப்போதும் ஆட்சியில் இருக்கிறார்… மக்கள் புரட்சி ஒன்று அங்கே நடக்கட்டுமே பார்ப்போம், இருகரங்களால் நசுக்கிவிடுவார் மக்களை! ஆட்சியாளர்களின் தொழில் அடக்குவது! புரட்சியாளர்களின் தொழில் அத்துமீறுவது! இதுதானே இதுவரைக்கும் உலகில் புரட்சி என்பதின் நியதி?

இதை மறந்து, மறுத்து “ஆட்சியாளர்கள் அடக்கினார்கள் அதனால் எங்களால் புரட்சி செய்ய முடியவில்லை! நாங்கள் அடங்கிவிட்டோம்!” என சீமான், நெடுமாறன் போன்ற அரசியல்வாதிகளும், நடுநிலையாளர்களும் அப்போதைய ஆட்சியாளர்களைக் குறை சொல்வது சரியா?

2009ல் திமுக அரசு காப்பாற்றும் என அமைதி காத்ததும், அதன்பின் அரசியல் காரணங்களுக்காக திடீரென ஈழ ஆதரவாளராய் மாறிய ‘ஜெ’ காப்பாற்றுவார் என அவரை ஆட்சியில் அமர்த்தி வேடிக்கை பார்த்ததும், அமைதி காத்ததும் தமிழக மக்களின் அறியாமை தவிற வேறென்ன? கலைஞரையும், ஜெவையும் ஈழ விஷயத்தில் குறை சொல்லுவது மக்களின், புரட்சியாளர்கள் போல் தங்களைக் காட்டிக்கொள்ளும் சில அரசியல்வாதிகளின் கையாளாகாத்தனம்!

“ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்று தருவேன்” என ஒரு மாநிலத்தின் முதல்வர் வேட்பாளர் சூளுரைப்பதை நம்பி அவருக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்போரை, ஓட்டுப் போடும் மக்களை என்ன சொல்ல?


இந்தி எதிர்ப்பு போராட்டம் வெற்றி பெற்ற போது ராஜாஜியை நம்பியா போராடினார்கள் போராளிகள்? தாங்களே களத்தில் இறங்கினார்கள் மக்கள். நண்டு சிண்டெல்லாம் ரோட்டில் இறங்கியது. அரசை ஆட்டம் காண வைத்தது. மொழிக்காக நடந்த அத்தனை பெரிய போராட்டம் போல ஏன் அத்தனை லட்சம் தமிழர்கள் மாண்டும் நடக்கவில்லை?

இரண்டு காரணங்கள்தான்! ஒன்று, இன்று தமிழனுக்கு அன்றுபோல் தமிழுணர்வில்லை. அதை ஊட்டவேண்டும்! உணர்வின்றி வாழும் பிணங்களை எழுப்பவேண்டும். மற்றொன்று நேர்மையான, உண்மையான தலைவன் இல்லை. ஈழவிஷயத்தை அரசியலுக்காக கையிலெடுக்கும் நடிகர்களே தலைவர்களாய் இருக்கிறார்கள்.

முன்னது மாறினாலே பின்னது தானாய் மாறும்… மற்றதெல்லாம் தானாய் நடக்கும்!

-டான் அசோக்
நன்றி: ஈழமுரசு
13 thoughts on “ஈழமும் தமிழக மக்களும்… – ஒரு வரலாற்றுப் பார்வை

 1. தினகர்

  பின் 2001ல் வந்தது அதிமுக ஆட்சி. 16-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையிலேயே ஜெயலலிதா, “விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து தூக்கில் இடுவதற்காக இந்திய அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றும் பேசினார்

  அப்போ இவர் தான் இலங்கை அர(க்கர்களி)சிடம் ரகசிய கூட்டு வைத்து, நினைத்ததை முடித்துவிட்ட புரட்சித்தலைவியோ?

 2. தினகர்

  ”மொழிக்காக நடந்த அத்தனை பெரிய போராட்டம் போல ஏன் அத்தனை லட்சம் தமிழர்கள் மாண்டும் நடக்கவில்லை”

  ”ஈழ விஷயத்தில் குறை சொல்லுவது மக்களின், புரட்சியாளர்கள் போல் தங்களைக் காட்டிக்கொள்ளும் சில அரசியல்வாதிகளின் கையாளாகாத்தனம்!”

  யோசிக்க வைக்கிறது…

 3. enkaruthu

  அசோக் அவர்களே நேர்மையான அலசல்.இதைதான் எந்தைய முந்திய கம்மேண்டில் ஜெயலலிதா இந்த ஈழ விஷயத்துக்கு செய்தது என்ன என்று கேட்டேன்.

  //அதன் பின் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போது 1991ல் ராஜீவ் தமிழகத்தில் வைத்து கொல்லப்படுகிறார். அவரின் இறப்பிற்கு புலிகளும், திமுகவும் தான் காரணம் என அதிமுகவால் பிரச்சாரம் செய்யப்பட்டது, தமிழகமெங்கும் காங்கிரஸ்காரர்களாலும், அதிமுகவினராலும் திமுககாரர்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட தாக்கப்பட்டார்கள். 1991ல் நடந்த தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஜெயித்தது. ராஜீவ் கொலைக்கு திமுகவுக்கு கிடைத்த தண்டனையாகவே இது கருதப்பட்டது.//

  //சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார், விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புலிகள் தமிழகத்தில் நிம்மதியாக உலவுகிறார்கள்,” என்று நமது எம்.ஜி.ஆரில் கட்டுரை எழுதினார்.//

  அசோக் அவர்களே நீங்கள் எந்த மனநிலையோடு இந்த கேள்வியை கேட்டீர்களோ அதே மனநிலையில்தான் நண்பர் பாவலன்,கிருஷ்ணன் போன்றோர்களுக்கு முந்தைய என் கம்மேண்டில் கலைஞர் துரோகி சரி ஜெயலலிதா அவர்கள் ஆரம்பகாலத்தில் இருந்து ஈழ தமிழ் போராட்டுதுகாக செய்த உதவி என்ன என்பதுதான்.அவர்களும் அனேகமாக இந்த பதிவை பார்த்தபின்பு உணருவார்கள் என்று நினைக்கிறேன்.

 4. தினகர்

  அம்மா திமுக ஆதரவாளார்கள் ஒருத்தர் கூட இந்த பக்கத்திற்கு வரமாட்டார்களே . உணமை சுடும் அல்லவா 🙂

 5. enkaruthu

  //அம்மா திமுக ஆதரவாளார்கள் ஒருத்தர் கூட இந்த பக்கத்திற்கு வரமாட்டார்களே . உணமை சுடும் அல்லவா //

  ஆம் தினகர் அவர்களே.இவர்களால் என்றும் இந்த பதிவிற்கு பதில் தரமுடியாது.இவர்களுக்கு தேவையெல்லாம் இந்த கூட்டத்துக்கும் பிடிக்காத ஈழ தமிழர்களின் விஷயத்தில் கலைஞரை முழு இன துரோகி ஆக்கிவிட்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்காக கலைஞரையும் துரோகி என்று சொல்லி அவரை முடக்கிவிட்டு இந்த போராட்டத்தையும் நீர்த்து போக செய்யவைப்பதுதான் இவர்களின் எண்ணம்.

  இல்ல எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால் ஈழ விஷயத்தில் அதிகம் அக்கறை காக்காத ஜெயலலிதாவை எப்படி இந்த மேடை தோறும் முழங்கும் சீமான் போன்றோர்கள் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை.ஒருவேளை புதிதாக ஈழ தமிழர்களின் நலனை பற்றி பேசி தமிழ் மக்களின் தலைவராக நாம் உருவெடுக்கும் நேரத்தில் முன்னால் தமிழின தலைவர் அந்த பெயரை தட்டி செல்ல கூடாது என்ற பொறாமையா.தமிழன் அழிந்து போவதற்கு காரணமே போராட்டுத்துக்கு நான்தான் என்று கூறும் புகழ் போதையே.

 6. Kumar

  தினகர்…நீர் எப்போ கருணாவின் ஈழ கொள்கையை வக்காலத்து வாங்க ஜெயலலிதாவின் ஈழ கொள்கையை compare பண்ணுரீரோ அங்கயே கருணாவின் கோவணம் காத்துல போச்சு…..

  why you always assume whoever targets Karuna are Jaya’s supporters? Whenever somebody criticize Karuna, you comes up with question like what Jaya did blah blah….

  Do you think people are dumb to support Jaya as you support Karuna…..Jaya is the worst politican TN has produced and I pity your situation that you can’t compare Karuna with none other than Jaya…..

  உம் தலைவரின் குடுமி சோனியா கைல இருக்குயா…..நீர் எதுக்கு சும்மா சலம்பல் பண்ணுறீர்…..

 7. தினகர்

  “ஈழ கொள்கையை வக்காலத்து வாங்க ஜெயலலிதாவின் ஈழ கொள்கையை compare பண்ணுரீரோ”

  எங்கேயும் கம்பேர் பண்ணவில்லையே? அப்படியும் செய்திருப்பாரோ என்று ஒரு கேள்வி எழுப்பியது கம்பேரிசன் ஆகிவிடுமா?

  ஆனாலும் இந்திரா காந்தி, எம்ஜிஆருக்கு அடுத்த ஈழத்திற்க்காக முயற்சி எடுத்தவர் கலைஞர் தான் என்பதில் சந்தேகம் இல்லை, முன்னவர்களை விட இவர் தான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்ததால் அதிகம் சேதாரப்பட்டவர் கூட. இந்த உண்

 8. Manoharan

  இந்த கட்டுரையில் நிறைய உண்மை உள்ளது. ஆனால் சில உண்மைகள் விவாதிக்கப் படவில்லை. ஈழப்படுகொலைகள் நடந்து கொண்டிருந்தபோது கருணாநிதி செய்தது என்ன ?

  காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் நடுவில் ஒரு உலகப் புகழ் பெற்ற உண்ணாவிரதம்.
  மகளுக்காக பதவிகேட்க தள்ளாத வயதில் டெல்லி ஓடினார். ஆனால் ஈழப் மக்கள் விஷயத்தில் கடிதத்தோடு சரி. இவர் மட்டும் மத்திய மந்திரி சபையில் இருந்து விலகி தன MP க்களை ராஜினாமா செய் வைத்திருந்தால் மத்திய அரசு நடுங்கி போயிருக்கும். முள்ளிவாய்க்கால் சம்பவம் தவிர்க்கப் பட்டிருக்கும். ஏன் செய்யவில்லை ? பதவி. பதவி வேண்டும் . பதவி வெறி பிடித்த இந்த ஒ……..ய்க்கு நம் மக்கள் சாவது ஒரு பொருட்டே அல்ல. வருங்காலத்தில் இவர் பெயர் ஒரு தமிழின துரோகி என்றுதான் கூறப்படும்.அதை அழிக்கத்தான் இந்த டெசோ..இப்போது அதிலிருந்தே பல்டி.

 9. enkaruthu

  //நீர் எப்போ கருணாவின் ஈழ கொள்கையை வக்காலத்து வாங்க ஜெயலலிதாவின் ஈழ கொள்கையை compare பண்ணுரீரோ அங்கயே கருணாவின் கோவணம் காத்துல போச்சு…..//

  அய்யா குமார் அவர்களே தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் mgr ஆட்சிக்கு பிறகு சுமார் 22 வருடங்களாக ஜெயாவும் கலைஞரும் தான் ஆட்சி நடத்துகிறார்கள்.இதில் கலைஞர் வந்தவுடன் புலிகளுக்கு ஆதரவாகவும் ஜெயா வந்தவுடன் புலிகளுக்கு எதிராகவும் தீர்மானம் போடுவதுதான் நம் தமிழ் மக்கள் பார்த்து வந்தது.அதை வைத்துதான் சொல்கிறோம் ஈழ தமிழர் விஷயத்தில் மட்டும் கலைஞர் சூழ்நிலை காரணமாகவும் அல்லது,நாம் இப்படி ஒரு அவசர நிலை எடுத்தால் நாம் இங்கே தமிழ் நாட்டில் பாதுகாப்போடு நன்றாக இருப்போம் ஆனால் நம் பேச்சின் வன்மை இலங்கையில் வாழும் தமிழருக்கு கொடுமை நடக்கலாம் என்ற உண்மையான தமிழின பாசம் கொண்ட அச்சமும் இருக்கலாம் அல்லவா.
  எனக்கு தெரிந்தவரை இவர் கொஞ்சம் காலம் முன்பு தன குடும்பத்திற்காக சுயநலமாக இருந்தாலும்(என்ன பண்ணுவது கொஞ்சம் வயசாகிவிட்டாலே மனிதன் தளர்ந்து போகிறானே) கலைஞர் ஒரு தமிழர் .அந்த பாசம் கொஞ்சமாவது அவருக்கு இருக்கும்.அதை வைத்துதான் சொல்கிறேன் இந்த ஈழ விஷயத்தில் ஜெயலலிதாவின் எந்த பங்கும் இல்லை என்று.

 10. enkaruthu

  //பதவி. பதவி வேண்டும் . பதவி வெறி பிடித்த இந்த ஒ……..ய்க்கு நம் மக்கள் சாவது ஒரு பொருட்டே அல்ல. வருங்காலத்தில் இவர் பெயர் ஒரு தமிழின துரோகி என்றுதான் கூறப்படும்.//

  சரி மனோகரன் அவர்களே போன ஆட்சியில் ஒரு தமிழின தலைவராக இருந்து அந்த ஈழ போர் முடக்கப்பட்டதால் அவர் ஒரு ஓநாய் என்று சொல்கிறீர்கள் .அந்த காலகட்டத்தில் இந்த தளத்தோடு சேர்ந்து நாமெல்லாம் விமர்சித்தோம் .ஆனால் ஜெயலலிதாவின் தலைவர் mgr ஆதரித்த விடுதலை புலிகளை இவர் தீவிரவாதி என்று அழைத்தார் .அப்ப ஜெயலலிதா அவர்களை எந்த ***யோடு ஒப்பிடுவது.இதையும் நீங்களே சொல்லுங்கள்.
  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மத்தியில் இடம்பெற்றால் மத்தியஅரசிடம் பேசி நம் ராணுவத்தை அனுப்பி அங்கு உள்ள இலங்கை தமிழர்களின் நலத்தை காப்பேன் என்று வீரமாக பேசினார்.இன்று ஜெயா அவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. இவர் ஏன் மத்திய அரசை கட்டாய படுத்தி ராணுவத்தை அனுப்பவில்லை.எல்லாம் மக்களின் ஓட்டுகளை வாங்க மோடி மஸ்தான் வேலைதான்.

 11. s venkatesan, nigeria

  //விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்ததால் அதிகம் சேதாரப்பட்டவர் கூட// –
  ஒண்ணுமே செய்யாம ஜெயா நல்லவர் ஆகி விடுவார். நம்ம மக்களுக்கு ஞாபக மறதி அதிகம்.
  கருணாநிதி செய்தது எல்லாம் சரி என்று சொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக ஜெயாவை விட அதிகம் உதவி செய்ய போய் வம்பில் மாட்டியவர்.
  //அதன் பின் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போது 1991ல் ராஜீவ் தமிழகத்தில் வைத்து கொல்லப்படுகிறார். அவரின் இறப்பிற்கு புலிகளும், திமுகவும் தான் காரணம் என அதிமுகவால் பிரச்சாரம் செய்யப்பட்டது, தமிழகமெங்கும் காங்கிரஸ்காரர்களாலும், அதிமுகவினராலும் திமுககாரர்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட தாக்கப்பட்டார்கள். 1991ல் நடந்த தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஜெயித்தது. ராஜீவ் கொலைக்கு திமுகவுக்கு கிடைத்த தண்டனையாகவே இது கருதப்பட்டது.// –
  கருணாநிதிக்கு எதிராக இப்போது பொங்குபவர்கள், அந்த தேர்தலில் மட்டும் ஆதரவா தெரிவித்தார்கள்.

 12. s venkatesan, nigeria

  //தினகர்…நீர் எப்போ கருணாவின் ஈழ கொள்கையை வக்காலத்து வாங்க ஜெயலலிதாவின் ஈழ கொள்கையை compare பண்ணுரீரோ அங்கயே கருணாவின் கோவணம் காத்துல போச்சு…..//
  குமார் அவர்களே – உங்களுக்கு ஜெயாவை compare பண்ணது புடிக்கலையா.? அல்லது தமிழ் உணர்வாளர் என்ற பெயரில் கருணாநிதியை தாக்க விரும்புபவரா? (நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு ஆணியும் புடிங்கி இருக்க மாட்டிங்க) அல்லது எங்கே கோமணம் பறக்குது பார்த்து கொண்டு இருக்கும் நபரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *