BREAKING NEWS
Search

என்னவொரு மானங்கெட்ட பிழைப்பு!!

என்னவொரு மானங்கெட்ட பிழைப்பு!!

1980000_892136967477304_9080467431784346537_o

ரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என்பார்கள். மீடியாக்கள் அதைத்தான் இன்றைக்கு செய்து வருகின்றன.

யார் என்ன சொன்னாலும் எழுதுவது… அவரின் தராதரம், சொல்லும் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை என எதையும் யோசிப்பதில்லை.

கோச்சடையான் கடன் விவகாரம், லிங்கா படத்தின் வசூல் ஆகிய இரண்டு விஷயங்களுமே இதற்கு சிறந்த உதாரணங்கள்.

கோச்சடையான் கடன் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்.

மீடியா ஒன் நிறுவனம் இந்தக் கடனை வாங்குகிறது. லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் தருகிறார். கோச்சடையான் படத்துக்காக வாங்கப்பட்ட கடன் இது.

இந்தக் கடன் தொகையை உரிய காலத்துக்குள் மீடியா ஒன் கட்டத் தவறியதால் லதா ரஜினி பெயரில் இருக்கும் திருமுடிவாக்கம் நிலத்தை கையகப்படுத்துவதாக 60 நாள் கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பியது எக்ஸிம் வங்கி.

உடனே களத்தில் குதித்துவிட்டனர் புலனாய்வுப் புலிகள். மீடியா ஒன் நிறுவனமே லதா ரஜினியுடையதுதான். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்றெல்லாம் செய்திகள் பறந்தன.

ஒரே சொத்தை திரும்பத் திரும்ப அடமானம் வைத்ததாக இன்னொரு புலி பொய்யான ஒரு செய்தியை வெளியிட்டது. வங்கியில் கடன் வாங்கும் குறைந்தபட்ச நடை முறை கூடத் தெரியாத இந்த புலனாய்வாளர்களை என்னவென்று சொல்வது?

மீடியா ஒன் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் முதலில் இடம்பெற்றுள்ளார் லதா ரஜினி. அது அந்த நிறுவனத்தின் நிர்வாகம் விரும்பி எடுத்த முடிவு. ஆனால் பின்னர் தனக்கு அந்தப் பதவி வேண்டாம் என்று கூறி வெளியில் வந்துவிட்டார் லதா. அதன் பிறகு பெறப்பட்ட கடனுக்கு நிலத்தை உத்தரவாதமாகக் காட்டியுள்ளார்.

இதில் என்ன குற்றமிருக்கிறது..? என்ன தவறு நிகழ்ந்திருக்கிறது? வங்கியில் முதலில் பெற்ற அனைத்துக் கடன்களையும் முறையாக செலுத்தி, அதற்கான கடிதத்தையும் வங்கியிலிருந்து பெற்றுள்ளார் லதா ரஜினி. அடுத்து கோச்சடையானுக்காகப் பெற்ற கடனை மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்தப் போவதாக வங்கியில் உறுதியளித்துள்ளது மீடியா ஒன்.

இந்த சாதாரண விஷயத்தை ஊதி பூதாகரமாக்கி, கடைசியில் 5000 கோடி கடன் வாங்கி அதை முழுசாய் விழுங்கி ஏப்பம் விட்ட விஜய் மல்லையாவுடன் லதா ரஜினியை ஒப்பிடுகிறது ஒரு பத்திரிகை. என்ன பத்திரிகை தர்மமோ.. புலனாய்வோ..

அடுத்தது லிங்கா விவகாரம்.

இந்தப் படம் நன்றாக ஒடிக் கொண்டிருக்கிறது இன்னமும். ஆனால் அப்படி ஓடிவிடக் கூடாதே என்ற ஒரே நோக்கத்துடன் கூவிக் கொண்டிருக்கிறார் ஒரு மீடியேட்டர். திருச்சி தஞ்சைப் பகுதியில் படத்தை வெளியிட்ட ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் இந்த நபர். ஆனால் தன்னை பெரிய விநியோகஸ்தர் என்று சொல்லிக் கொண்டு, படம் நஷ்டம் என்று கூறி கூப்பாடு போடுகிறார்.

thalaivaa2

தினசரி ஒரு ஸ்டன்ட், மீடியா வாய்க்கு அவல் கொடுக்க வேண்டும் என்பது இந்த ஆசாமிக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட். வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் தினமும் ஒரு அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறார்.

இவரது பேட்டிகள் மற்றும் பிரச்சாரங்களைப் படித்தாலே தெரியும் இவரது நோக்கம் லிங்கா நஷ்டம் குறித்தல்ல என்பது. படத்தைப் பற்றியும், தலைவரைப் பற்றியும், இயக்குநர் ரவிக்குமார் பற்றியும், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் குறித்தும் அவதூறுகளைப் பரப்புகிறார். படத்தை எப்படியாவது பொங்கலுக்குள் தியேட்டர்களிலிருந்து தூக்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

இவருக்குப் பின்னால் ஒரு கூட்டமே ரூம் போட்டு யோசித்து வேலை செய்து கொண்டிருக்கிறது. லிங்கா படத்தை பொங்கலுக்குள் தூக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறோம்.

லிங்கா படத்தில் ஒரு பைசா கூட எந்த விநியோகஸ்தருக்கோ, தியேட்டர்காரர்களுக்கோ நஷ்டமில்லை என்பது நூறு சதவீதம் உண்மை.

உண்மையான வசூல் விவரங்களை – முதல் மூன்று நாட்களும் டிக்கெட் என்ற பெயரில் அடித்த கொள்ளை உள்பட – தெரிவிக்கும் துணிச்சல், அட, குறைந்தபட்ச மனசாட்சி, நேர்மை  எந்த விநியோகஸ்தர் அல்லது தியேட்டர்காரர்களுக்காவது இருக்கிறதா?

திருச்சி – தஞ்சைப் பகுதி திரையரங்குகளில் தொடர்ந்து ஒரு வாரம் இந்தப் படம் 90 சதவீத கூட்டத்துடன் ஓடியது. முதல் மூன்று நாட்கள் சராசரியாக 250, 200 என்று டிக்கெட் விற்றார்கள். இந்த மூன்றே நாட்களில் போட்ட பணம் கிடைத்துவிட்டது. ஆனால் பொய்யான கலெக்ஷன் ரிப்போர்ட்டை கையில் வைத்துக் கொண்டு, பெரும் மோசடியை அரங்கேற்ற, மற்றவர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு அலைகிறது இந்த அற்ப ஜென்மம்.

ரஜினி, லிங்கா பெயர்களை வைத்துக் கொண்டு தன்னை ஒரு பெரிய பிரபலமாகக் காட்டிக் கொள்கிறார் இந்த ஆசாமி.

இதுவரை வேறு யாரும் லிங்கா நஷ்டம் என்று கூறவில்லை. இந்த ஒரு ஆசாமி மட்டும் இந்த இழிவான பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்க, திரையுலகம் வழக்கம்போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் கனத்த மவுனம் காக்கிறார்கள். விசாரித்தால் விரைவில் முழு விவரங்களை வெளியிடுகிறோம் என்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான பல படங்கள் போட்ட தொகையில் கால்வாசி கூட வசூலிக்கவில்லை. அதுகுறித்து எந்த திடீர் விநியோகஸ்தரும் வாய் திறக்கவில்லை. ஆனால் லிங்கா என்றதும் வெளியான நான்காவது நாளே லாப நஷ்டக் கணக்கு பார்கிறார்கள்.

இந்த உண்மைகள் எதையுமே விசாரிக்காமல், அன்றாடங்காய்ச்சிகள் மாதிரி கையில் கிடைத்ததையெல்லாம் செய்தியாக்கிக் கொண்டிருக்கிறது மீடியா.

லிங்கா படத்தால் ஒருவன் நஷ்டம் என்றதும், அதை ஊதிப் பெரிதாக்குவதில்தான் அக்கறை காட்டுகிறது மீடியா. எப்படி நஷ்டம்? ரூ 1000 வரை டிக்கெட் வைத்து விற்றதில் வந்த பணம் எங்கே? உண்மையான வசூல் புத்தகத்தைக் காட்டு? என்றெல்லாம் கேட்கக் கூட எவருக்கும் திராணி இல்லை. ரஜினியை விடவா முக்கியத்துவம் வாயந்தவனாகிவிட்டான் இந்த கூலிக்கு மாரடிக்கும் ஆசாமி? எவனோ ஒருவன் ரஜினியைப் பற்றி வாய்க்கு வந்ததையெல்லாம் சொன்னால் அப்படியே எழுதிவிடுவதா?

என்ன ஒரு மானங்கெட்ட பிழைப்பு இது!

என்வழி
29 thoughts on “என்னவொரு மானங்கெட்ட பிழைப்பு!!

 1. srini

  i dont know what vikatan benefit from this, simply past one week only vikatan publicize all his interview, becoming cheap and low standard how much they would have earned by keeping thalaivar photo in front cover nanri ketta nainga.

 2. V. SURESH

  சூப்பர் உண்மை சொன்னிர்கள். சிலர் இப்படித்தான் மானம் கெட்ட பிழைப்பு நடத்துகின்றனர். நான் தி ஹிந்து தமிழ் வெப்சைட் இல் ஒரு தகவல் அனுப்பினேன் என்வழி இனைய தளத்தை பார்கவும் என்று. ஆனால் அவர்கள் அதை வெளி இடாமல் நெகடிவ் ஆன கருத்தை வெளி இட்டனர். இவர்களை என்ன சொல்வது.

 3. srini

  i know personally they have kept 200 and 250 rs in vellore unofficially for 3 days and chennai FDFS 1000rs sold at kasi, who they are trying to cheat, morons all black they got it.

  even in vanayambadi local theatre they have kept 150rs for 3days.

 4. micson

  அந்த தஞ்சை விநியோகஸ்தருக்கு உங்கள் பதில் சரியான மரண அடி. தலைவரின் பெயரை கெடுக்க முளைத்த காளான்கள்

 5. manithan

  அப்படி தலைவருக்கு எதிர யாராவது உண்ணாவிரதம் இருப்பதுபோல் நடித்தால் ,அவன் மண்டை உடைய வேண்டும் ,உடைப்பவனுக்கு என் அன்பு பரிசு ரூபா பத்தாயிரம் ,சும்மா விளையாட்டிற்கு சொல்லவில்லை ,செய்த பின் என் இ மயிலுக்கு தொடர்பு கொள்ளுங்க சகோதரர்களே (பணம் என்னங்க பணம் தலைவர் போன்ற நல்ல மனிதர் முன்னாலே ,அவருக்காக இதை செய்யுங்க,)

 6. Deepak

  அருமையான தலைப்பு !!!
  பெங்களூர் ல் வரி துறையினர் நடத்திய சோதனை போல் இங்கும் நடத்தி இருக்க வேண்டும். பரதேசி மாறி இருக்கான் அவன் 7 கோடி போட்டு படத்தை வாங்கினனம்

 7. R O S H A N

  என்னங்க இது அநியாயமா இருக்கு……basic கணக்கு போட தெரிஞ்ச சின்ன கொழந்த கூட சொல்லிரும், எவ்ளோ வசூல் ஆச்சுனு……அவன் சொல்ற எந்த விஷயத்துலயும் லாஜிக் இல்ல……இதெல்லாம் படிக்கும் போது கோவம் தலைக்கு ஏறுது…….அப்படி என்ன வைத்தெரிச்சல் இவனுகளுக்கு…….இந்த பத்திரிக்கைகள் அத விட கேவலம்……தொழில் தர்மம் என்ன விலைன்னு கேப்பாங்க போல…….சம்பந்தபட்டவங்க வந்து பேசுனா தான் நல்லது……..இந்த மாதிரி பொய்யா பேசிட்டு இருக்கறவங்கள எல்லாம் பெரடு கெலப்பனும்……

 8. sk

  Who is behind this conspiracy ? Only this guy has been jumping from day 1.
  vendhar movies is observing silence which is not good.
  read the junior vikatan interview & u will understand the intentions of this person ..to defame thalivar
  he talks about unnecessary things like title & tax exemption , producer from karnataka which r irrelevant…useless idiot

 9. arulnithyaj

  சரி ஒரு வாதத்துக்கே ஆனாலும் இதற்கும் தலைவருக்கும் என்ன தொடர்பு ..இவர் என்ன சாகும் வரை உண்ணா விரதம் இருக்க போராரா ?(போறானாம்?)(தலைவர் ரசிகனாம் naan, மரியாதையா சொல்றேன்!!)..மனசாட்சி இல்லாத ஜென்மம். வினோ நீங்கள் சொல்லுவது 100% சரி. இவன் நோக்கம் பணமல்ல .. தலைவரின் புகழை கெடுக்க நினைக்கிறான். அது என்ன அவ்வளவு சாதரணமானதா? அட அற்ப பதறே! அவர் இமயம்டா!..சூரியண்டா !..சூப்பர் ஸ்டார்டா!எங்கள் இதயத்தில் இருப்பவர்டா!எங்களைப் போன்று கோடி ரசிகரின் அன்பு தலைவனடா! அவர் நடிப்பது பேருக்கும், புகழுக்கும், பணத்துக்கும் அல்ல பணத்தாசை பிடித்த ஜென்மமே! அவர் எங்களுக்காக நடிக்கின்றார்! நீ பணத்தாசை பிடித்து அலைவதற்கு என்தலைவன் தான் கிடைத்தாரா? வினோ ரெம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேன்! சாரி vino..

 10. baba

  Total Seats Percentage Booked Seats  Days     Ticket price     Collections
  126000     90%         113400        3      100     34020000
  126000     70%          88200        7       100                 61740000
  90000      60%          54000        7      100                37800000
  75000     40%          30000        7      100      21000000

 11. sharvan

  வினோ டூ not apply fake reasons.. in nagercoil ticket price is still 250rs.. so chk all theater bfore update doc..and u know in same theatre kathi big loss. i know the owner of theatre management very well/ any vijay fans can challage to meet raja theatre owner and ask status abt kathi? coz of lose they request to get linga.. but 3 theatre fighting for linga… finally lucky draw selected by rajas theatre…

 12. sakthi

  hi rajini fans. mullai mullal edukkavendum. atharku our eliya vazhi. lingaa Patri avathuru seithii veliitta anithu pathirikkaigalium rajini rasigargal purakanikkavendum. kasu koduthu paper book vangakoodathu. santhatharargal vilagikollavendum. balathai kattuvoma.

 13. Murali

  வேந்தர் Movies at least can find the source of these bad guys and publish an article exposing their ill intentions. No one is doing this , instead they are letting all true fans to fume among themselves. Somewhere I am totally hating the producers and main distributors who should have powerfully handled the situation instead of watching like bypass onlookers of defaming articles about Super star

 14. Puru

  Hello Friends,

  I am big fan of Rajini, not only me almost all the managers in my company. This is my first comment in Envazhi though i have read from past three years.

  All these nonsense coming because Thaliaver keep silence on all his critics and this is become habit. I know thaliver cant answer everyone atleast he let his fan club act on these kind of idiot.

  As all of us like to him in Politics, this is right time to enter and demolish all the bull shit.

  Thanks,
  Puru

 15. Rajini Rasigan Viswa

  Lingaa 24th Day Box Report

  lingaa box office collectionRajinikanth starrer blockbuster movie of this year Lingaa has broken the total domestic BO Collections record of numerous biggies in that region on its third week’s end. After claiming such a fantastic position it has now entered its fourth week and the total collections are just fabulous. How so ever the film has dropped considerably with respect to every week. This superb action cum romantic entertainer has turned into another motion picture of Rajinikanth whose total box office collection has crossed 150 Crores at domestic level.

  This film is the most astounding grosser of the year at south Indian and also overseas box office collections. Lingaa has now few audiences in the halls owing to the release of firstly super hit PK and now the new flicks and seeing the proper graph the drop in occupancy looks genuine on the grounds that Sunday is off for the greater part of the individuals.

  Film has turned out blockbuster especially in the early two weeks but after that the film dropped gradually each day. It is the 24th day of release for this fanatically supported film and the total income done by Lingaa today is around 2.1 Crores*.
  – See more at: http://boxofficecollection.in/box-office-report/lingaa-24th-day-total-box-office-collection-response-7932#sthash.yZtPkoAy.dpuf

 16. Murali

  Direct communication to Superstar. Hope someone close to him reads this and takes it to him.
  Dear Rajini,
  The best possible time to announce your entry into politics is latest Feb 2015.
  Jaya in Jail (even if its a reduced sentence) is almost a certainty. Announcing your entry after that will have its own draw backs. Announcing before that and giving your best shot at revival of state politics is a must even if it means you will have to fail ( which is a remote possibility). Now is not the time for any other movie. May be Lingaa was God’s final choice.
  Please see how Modi openly presented himself to the challenge without hesitation ( I agree you can’t be like a seasoned politician like him). You have an equally powerful group of friends in your field who can voice for you and give counter to all your detractors. More importantly , after you succeed please make up your mind to function like a King with an iron fist (like ex-singapore PM). Even if it means getting the wrath of all the mean minded scamsters, who may be friendly with you so far. Just one 5 year term of your’s like that would change the face of tamilnadu and the torch will be carried forward by either you or God’s next designate. With all the might of my heart this is one call of consciousness to take your VISWAROOPAM.
  ஓம் …

 17. gandhidurai

  இந்த நாய்ங்களுக்கு பத்திரிகை வியாபாரம் ஆக ரஜினி வேனும் . குமுதம் மற்றும் விகடன் பத்திரிகைகல் லிங்கா ஸ்பெஷல் நு போட்டே 4 வாரம் ஓட்டுனங்க. இப்பவும் ரஜினி பேர் போட்டல்தான் அவங்க பொழைப்பு நடத்தவேண்டிருக்கு .இப்பவும் மக்கள் ரஜினி பற்றி என்ன போட்டுருக்கான்கனு பார்க்கதான் காசு கொடுத்து வாங்குறாங்க .இப்படி எப்படி பார்த்தாலும் ரஜினி ய வச்சுதாணே பொழப்பு நடத்துறாங்க ஈனபிறவிகல் .நன்றி கேட்ட ஜென்மங்கள் .

 18. ss

  we need to discuss how to attack them in media. how to do do? please plan it accordingly and suggest the best way guys. this we need to take very seriously.

 19. kumaran

  ஆண்டவா எங்களுக்கு சக்தி கொடு (தலைவரை பற்றி பொறுப்பற்ற சுய நல வாதிகள் பேசுவதை தாங்கமுடியவில்லை)

 20. குமரன்

  //// இந்த உண்மைகள் எதையுமே விசாரிக்காமல், அன்றாடங்காய்ச்சிகள் மாதிரி கையில் கிடைத்ததையெல்லாம் செய்தியாக்கிக் கொண்டிருக்கிறது மீடியா.
  ……
  என்ன ஒரு மானங்கெட்ட பிழைப்பு இது! ////

  தொடர்ந்து பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் பணத்துக்காக இப்படிப்பட்ட பொய்செய்திகளைப் போட்டு மானம் கேட்ட பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

  செய்தி நிறுவனங்களின் ஊழல் ஒருநாள் – 2-G , தாது மணல், கிரானைட், சொத்துக் குவிப்பு உழல்கள் போல வெளி வரும், வராமல் போகாது.

 21. sakthi

  vanakkam nanbargale, style king vasul chakravarthi super star in yurinum melana rasiga perumakkale. orvarukku cm seat mela pala varusamaga Asai. adiya mudiyale avarukku. linga padamum rasigar kootamum illam chiitukkalin padam parka alikadalena thirandathum avangalukku porukka mudiyale. lingaula rajini chinna paiyangala vida illamaiya surusuruppa adada oh nanba pattu irukke 1000 murai parthalum parthu konde irukka thonumappa.enna panrathu super star innum nadithu kondirukkar. pugalukku mela pugal Petru kondirukkare. vayathu erichal than. lingam patri avathoor seithiya vara nam nattu pulan visarani patthirikkaigal enna seithu kondirukkirathu.yen mounam kakkirathu. ungalukku ethavathu theriuma nanbargale….

 22. simbu

  நாளை உண்ணாவிரதம் போலிஷ் அனுமதி வழங்கியது……

 23. Ar Sherif

  இது Vijay மற்றும் அவன் அப்பன் சதியாக தான் இருக்கும்

 24. simbu

  லிங்கா நஷ்ட ஈடு உண்ணாவிரதம்… சீமான் தொடங்கி வைத்தார்.. வேல் முருகன் முடித்து வைக்கிறார்!
  லிங்கா படத்தால் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், அதை ஈடு கட்ட வேண்டும் என்று கோரியும் சில மீடியேட்டர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

 25. Sathish

  This is well planned ……..there is hidden agenda for some people (Loyola college, Simon alias Seeman & Joseph Vijay). People must understand the fact,….. If any one says why u r dragging Joseph Vijay in this, our Simon alias Seeman said on Saturday’s hunger strike (Many people compensated the loss in the past…..Rajini, Kamal & Vijay)….Shocked by seeing this…when Vijay compensated for the loss? So they are promoting Joseph Vijay and make him as next CM (day dream!!!)…for that they are trying to spoil others character those who are hindrance for this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *