Breaking News

ரஜினி உடல் நிலை குறித்து டாக்டர் பேட்டி – வீடியோ

May 6, 2011 by  
Filed under Videos

ரஜினி உடல் நிலை குறித்து மருத்துவர்கள் பேட்டி & ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேட்டி – வீடியோ

ஜினியின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் அளித்த பேட்டியை நேற்று ஹெட்லைன்ஸ் டுடே உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் ஒளிபரப்பின.

ரசிகர்களின் கவலையை கருத்திக் கொண்டு இந்த வீடியோ பேட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் ரஜினி குடும்பத்தினர்.

ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், அவரைப் பார்க்க சென்னை வராமல், அவரவர் ஊரிலேயே பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் ஐஸ்வர்யா கேட்டுக் கொண்டார்.

இப்போது ரஜினிக்குத் தேவை நல்ல ஓய்வு என்றார் மருத்துவர் கிஷோர்.

நியூஸ் எக்ஸ் ஒளிபரப்பிய அந்த வீடியோ:

பார்வதி அம்மாள் உடல்நிலையில் முன்னேற்றம்!

September 11, 2010 by  
Filed under உலகம் & இலங்கை

பார்வதி அம்மாள் உடல்நிலையில் முன்னேற்றம்!

கொழும்பு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்வதியம்மாள், தற்போது நீராகாரம் மற்றும் திட ஆகாரம் உட்கொள்வதாக அவரது உறவினரும் எம்.பி.,யுமான சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

இந்நிலையில், வடமராட்சி பகுதிக்கு சுற்றுலா வருபவர்களில் ஏராளமானோர் பார்வதியம்மாளை பார்க்க வருவதாக இலங்கை தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்பு கூட, வட இலங்கைக்குக்கு சுற்றுலா வந்த 100 சிங்களவர்கள், வல்வெட்டித் துறை மருத்துவமனைக்கு வந்துள்ளனர். பிரபாகரனின் தாயாரைப் பார்க்க விரும்புவதாகக் கூறிய அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதியளித்தது. அந்த சிங்களவர்களில் பலர் பார்வதியம்மாளைப் பார்த்ததும், காலில் விழுந்து வணங்கியதாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன், உடல் நிலை சீர்குலைந்து, நினைவு தப்பிய நிலையில் மலேசியாவிலிருந்து சென்னை வந்த பார்வதி அம்மாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. அவரை வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பினர் போலீசார்.

இதனால் அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்த நிலையில் சிகிச்சை அளிக்க நிபந்தனையுடன் முன்வந்தன தமிழக – இந்திய அரசுகள். ஆனால் இதனை மறுத்துவிட்ட பார்வதி அம்மாள், மீண்டும் தன் சொந்த மண்ணுக்கே திரும்பினார். வல்வை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Posts with Thumbnails