Breaking News

இந்திய வாடிக்கையாளர்களுக்கு ‘பெப்பே’ காட்டும் ப்ளாக்பெர்ரி!

October 19, 2011 by  
Filed under வணிகம்

உலகெங்கும் 100 டாலர் இலவசம்… ஆனால் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒன்றுமில்லை – ப்ளாக்பெர்ரியின் மோசடி!

டந்த வாரம் தொடர்ந்து மூன்று தினங்கள் ப்ளாக் அவுட் ஆனது ப்ளாக்பெர்ரி. இந்த நாட்களில் அந்த செல்போன் வைத்திருந்த வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

காரணம், மின்னஞ்சல், வங்கிப் பரிவர்த்தனைகள், ஃபேஸ்புக் என பல்வேறு பயன்பாடுகளுக்கும் இவர்கள் இந்த ப்ளாக்பெர்ரியை மட்டுமே நம்பியிருந்ததுதான்.

மூன்று நாட்களுக்குப் பிறகு படிப்படியாக ப்ளாக்பெர்ரி சேவைகள் பழைய நிலைக்குத் திரும்பின. ஆனால் இந்த மூன்று நாட்களும் பட்ட அவதியை எப்படி ஈடுகட்டுவது? வாடிக்கையாளர்கள் பொறுமையோடு இதை சகித்துக் கொண்டதற்கு என்ன பரிசு?

இதற்கு உடனடியாக ஒரு திட்டத்தை அறிவித்தது ப்ளாக்பெர்ரியைத் தயாரித்து வழக்கும் ரிசர்ச் இன் மோஷன் நிறுவனம். அதன்படி உலகமெங்கும் உள்ள தங்களின் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 100 டாலர்கள் இழப்பீடாக வழங்குவதாகக் கூறியது. இந்த இழப்புத் தொகை பணமாக இல்லாமல், செல்போனில் சார்ஜ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் ப்ளாக்பெர்ரி சேவை வழங்கும் டெலிபோனிகா நிறுவனம் ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் கட்டணத்தைக் கணக்கிட்டு வாடிக்கையாளர் கணக்கில் சேர்த்துவிட்டது.

யுஏஇ நாட்டில் இந்த சேவையை அளிக்கும் எடிசாலட், சேவை பாதிக்கப்பட்ட மூன்று தினங்களுக்கான கட்டணத்தை ரத்து செய்துள்ளதோடு, கூடுதலாக மூன்று தினங்களுக்கு இலவசமாக சேவை அளிப்பதாக அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் மூன்று நாட்களுக்கு இலவச சேவை வழங்கியுள்ளன.

ஆனால், ப்ளாக்பெர்ரி சேவைகளை வழங்கும் இந்திய நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் போன்றவர்கள் மட்டும் இந்த இழப்பீடு பற்றி வாயைத் திறக்க மறுக்கிறார்கள்!

இத்தனைக்கும் யுஏஇ போன்ற நாடுகளில் உள்ளதை விட இரு மடங்கு ப்ளாக்பெர்ரி வாடிக்கையர் இந்தியாவில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏர்டெல் சேவையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மூன்று தினங்களுக்கு எந்த வகையில் நஷ்ட ஈடு தரப்போகிறார்கள் என்பதை இதுவரை அறிவிக்கவே இல்லை.

இதுகுறித்து ப்ளாக்பெர்ரி நிறுவனத்திடம் விசாரித்தபோது, பதில் கூறாமல் மழுப்பியுள்ளனர். எங்கள் பார்ட்னர் நிறுவனங்களோடு தொடர்புடைய விஷயங்களை  பேசுவதாக இல்லை என்று மட்டும் பதில் கூறிவிட்டது அந்த நிறுவனம்.

வோடபோன் நிறுவனமும் இதுகுறித்து எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் இந்த பிரச்சினை குறித்து தங்களிடம் சண்டைபோட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு மட்டும் இழப்பீடாக மூன்று ப்ளாக்பெர்ரி செட்களை கொடுத்து அமைதியாக்கிவிட்டார்களாம். அந்த நிறுவனம் அதிக அளவில் வோடபோன் ப்ளாக்பெர்ரியை பயன்படுத்தியதால் இந்த சலுகையாம்!

ஏர்செல், ரிலையன்ஸ் போன்றவையும் ப்ளாக்பெர்ரி சேவை அளித்தாலும், குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையர் இருப்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளன.

ப்ளாக்பெர்ரியின் வருமானம் அமெரிக்கா – கனடா போன்ற நாடுகளில் குறைந்தாலும், இந்தியா போன்ற நாடுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் வருவாயைக் கொட்டும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அந்த நிறுவனம் பெப்பே காட்டியுள்ளது எந்த வகை நியாயம் என்கிறார்கள் ப்ளாக்பெர்ரி வாடிக்கையாளர்கள்!

நன்றி: தட்ஸ்தமிழ்

தியேட்டர் இல்லை, நஷ்ட ஈடு தொல்லை, வெளிநாட்டில் முட்டுக்கட்டை, பலமிக்க சக்திகளின் மிரட்டல்… பெரும் சிக்கலில் காவலன்!

January 7, 2011 by  
Filed under Popcorn

தியேட்டர் இல்லை, நஷ்ட ஈடு தொல்லை, வெளிநாட்டில் முட்டுக்கட்டை… பெரும் சிக்கலில் காவலன்!

ன் திரையுலக அனுபவத்தில் இப்படியொரு நெருக்கடியை முன்னெப்போதும் சந்தித்திருக்கமாட்டார் விஜய். காவலன் படம் அவ்வளவு சோதனைகளை அடுக்கடுக்காக அவருக்கு ஏற்படுத்தி வருகிறது.

சென்சார் சான்று வாங்கி, படம் தியேட்டரைத் தொடும் இந்த நேரத்திலும் பெரும் சிக்கலில் மாட்டி திணறுகிறது காவலன்.

தனது முந்தைய படங்களின் நஷ்டத்துக்கான ஈட்டுத் தொகையை விஜய் தந்தால்தான் காவலனை ரிலீஸாக விடுவோம். இல்லாவிட்டால் அந்தப் படத்துக்கு எந்த ஒத்துழைப்பும் தரமாட்டோம் என அறிவித்துள்ளது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்.

இந்த சங்கத்தின் அவசரக் கூட்டம் திருச்சியில் நேற்று மாலை நடந்தது. துணை தலைவர் நாராயண சாமி தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் ஸ்ரீதர், துணை செயலாளர் ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் பேசிய, சங்கத்தின் செய்தித் தொடர்பாளர், “விஜய்யின் ஆறு படங்கள் தொடர் தோல்வியைத் தழுவியுள்ளன. ஆனால் நாங்கள் கேட்பது அவரது சுறா படத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டத்துக்கு மனிதாபிமான முறையில் பொறுப்பேற்று நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதைத்தான். எங்களது சங்கத்தின் கோரிக்கைகளை இதுவரை விஜய் ஏற்கவில்லை. அப்படித் தராவிட்டால் காவலனை ரிலீஸ் பண்ணவே விடமாட்டோம்,” என்றார்.

மேலும் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படமான வேலாயுதம், சீமான் இயக்கும் பகலவன் படங்களுக்கும் ஒத்துழைப்பு தரமாட்டோம் என அறிவித்துள்ளனர்.

விஜய்க்கு ஆதரவாக செயல்படும் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் ஒத்துழைப்பு தரமாட்டோம் என அறிவித்துள்ளனர். இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நோக்கங்களுக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் செயல்படும் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் புதிய திரைப்படங்களுக்கு தமிழகம் முழுவதும் தொழில் ரீதியாக எந்த வித ஒத்துழைப்பும் கொடுக்கப் போவதில்லை…” என்று குறிப்பிட்டுள்ளனர்.

விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்தான். காவலனின் என்எஸ்ஸி வெளியீட்டாளரும் அவரே.

தியேட்டர்கள் இல்லை

இன்னொரு பக்கம், படத்துக்கு நிதி வழங்கிய பைனான்ஸியர்கள் உடனடியாக பணத்தை செட்டில் செய்தாக வேண்டும் என நெருக்கடி தர ஆரம்பித்துள்ளனர்.

வட தமிழகம், சென்னை போன்ற பகுதிகளில் இந்தப்படத்துக்கு ஒரளவு திரையரங்குகள் கிடைத்தாலும், தென் மாவட்டங்களில் இதுவரை 10 திரையரங்குகள் கூட கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ‘மிகப் பலம் வாய்ந்த சக்திகள்’ அத்தனை திரையரங்குகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக காவலன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிகள் காரணமாக, தனது வேக வேகமான அரசியல் நகர்வுகளை இப்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளார் விஜய். அதிமுக, ஜெயலலிதா, அரசியல் கட்சி துவக்கம் போன்றவை குறித்து அவர் இப்போது வாய் திறப்பதே இல்லை. இதுகுறித்து அதிகம் பேசி வந்த அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகரனும் அமைதியாகிவிட்டார்.

வெளிநாடுகளிலும் காவலனுக்கு நல்ல திரையரங்குகள் கிடைக்கவில்லையாம். மன்மதன் அம்புவின் பெரும் தோல்வி காரணமாக, இப்போதைக்கு புதிய படங்களை அதிக விலைக்கு வாங்க வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் தயங்குவதாகக் கூறப்படுகிறது.

காவலனின் வெளிநாட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு இன்னொரு முக்கிய காரணம் அசின் விவகாரம்.

இந்த பொங்கலுக்கு காவலன் வெளியாக வேண்டுமானால், இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் பேசித் தீர்க்கப்பட்டாக வேண்டும். இல்லாவிட்டால் காவலன் நிலை கேள்விக்குறியதாகிவிடும்!

அஜீத் – விஜய் சந்திப்பு!

வெளியில் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள்.  ஆனால் அவர்களின் தலயும் தளபதியும் ரஜினி – கமல் பாணியில் நட்பு பாராட்டிக் கொள்கிறார்கள்.

இரு நடிகர்களின் இப்போதைய மார்க்கெட் நிலவரமும் ஒன்றும் ஆரோக்கியமாக இல்லை. அரசியல் பற்றி இருவருமே பரபரப்பாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். இப்போதைக்கு அதிமுக அனுதாபிகள் என்ற அழுத்தமான முத்திரை இருவர் மீதும்.

அதே நேரம் இருவருக்குமே ஒரு வெற்றி கட்டாயம் தேவை. அதற்காக மங்காத்தாவில் அஜீத் படுபிஸி. விஜய்யோ காவலனை முடித்து விட்டு, வேலாயுதத்தின் இறுதி ஷெட்யூலில் இருக்கிறார்.

இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் இப்போது சென்னை பின்னி மில்லில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் படப்பிடிப்பு இடைவேளையில் திடீரென்று அஜீத்தும் விஜய்யும் சந்தித்துக் கொண்டனர்.

இருவரும் அவரவர் படம் குறித்து விசாரித்துக் கொண்டனர். அப்போது உடனிருந்த மங்காத்தா பட இயக்குநர் வெங்கட் பிரபு சட்டென்று இந்த சந்திப்பை புகைப்படத்தில் பதிவு செய்து, தனது பேஸ்புக் – ட்விட்டரிலும் அப்லோட் செய்ய, அடுத்த நாள் பரபரப்பான செய்தியானது. பிஆர்ஓ இல்லாமலேயே நல்ல பப்ளிசிட்டியும் கிடைத்தது!

-என்வழி

சாய்மீராவிடம் ரூ.11 கோடி நஷ்டஈடு கேட்டு கமல் வழக்கு!

October 2, 2009 by  
Filed under Cinema

சாய்மீராவிடம் ரூ.11 கோடி நஷ்டஈடு கேட்டு கமல் வழக்கு!

சென்னை: ரூ.11 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பிரமிட் kamalசாய்மீரா பட நிறுவனம் மீது நடிகர் கமல்ஹாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரமிட் சாய்மீரா படநிறுவனம் சார்பில் அதன் இயக்குனர் நாராயணன் என்பவர் ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

அதில், ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனத்துடன் கூட்டாக சேர்ந்து ‘மர்ம யோகி’ படத்தை தமிழ் மற்றும் இந்தியில் தயாரிக்க ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால் இந்த படத்தில் கமல்ஹாசன் நடித்து தராமல், அவரது நிறுவனம் சார்பில் தயாரித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் நடித்துள்ளார் என்றும், எங்களுக்கு சேரவேண்டிய ரூ.7 கோடியே 82 லட்சத்து 47 ஆயிரத்தை தர உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

அதுவரை இந்த படத்தின் பிரிண்டுகளை பிரசாத் லேப்பிலிருந்து வெளியில் கொண்டுவர அனுமதிக்க கூடாது என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ராஜசூரியா விசாரணை செய்து, கடந்த மாதம் 14-ந் தேதி இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். அதில் தற்போதைய நிலை அப்படியே நீடிக்கும் என்று கூறியிருந்தார்.

ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் படநிறுவனத்தின் பங்குதாரரும் கமல்ஹாசனின் சகோதரருமான சந்திரஹாசன், இந்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அதில், சாய்மீரா நிறுவனம் கொடுத்த பணத்தை ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்காக நாங்கள் செலவு செய்யவில்லை. இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்பாக பணத்தை திருப்பி தருகிறோம் என்றும் நாங்கள் தெரிவிக்கவில்லை.

ரூ.40 கோடி செலவில் எடுக்கப்பட்ட ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு தடை விதித்தால் பாதிப்பை ஏற்படுத்தும். எங்களுக்கு இடையூறு செய்து, நிர்ப்பந்தம் செய்து பணம் பெறுவதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும், என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தை திட்டமிட்டப்படி செப்டம்பர் 18-ந் தேதி வெளியிடலாம். ராஜ்கமல் பிலிம் நிறுவனம் சார்பில் வழக்கு தொகை பாதியை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கி உத்தரவாதமாகவோ, அசையா சொத்துக்களின் உத்தரவாதமாகவோ அல்லது பணமாகவோ டெபாசிட் செய்யலாம். தவறினால் அக்டோபர் 1-ந் தேதி முதல் படத்தை திரையிட தடை விதிக்கும் உத்தரவு அமலுக்கு வரும், என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து படமும் வெளியானது.

ரூ.4 கோடிக்கு வங்கி உத்தரவாதம்

இந்த வழக்கு நேற்று நீதிபதி ராஜசூரியா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ராஜ்கமல் பிலிம் நிறுவனம் சார்பில் ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

ரூ.3 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 834-க்கு கனரா வங்கி உத்தரவாதம் அளித்துள்ளோம் என்றும், இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும், இந்த உத்தரவாதம் வழங்குவதால் அப்பீல் செய்யும் உரிமை எங்களுக்கு பாதிக்கக் கூடாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

சாய்மீரா பட நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் ஒரு ஆண்டுக்கு மட்டுமே வங்கி உத்தரவாதம் அளித்திருப்பதாக தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, இந்த வங்கி உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அதேசமயம் ஒரு ஆண்டுக்கு பிறகு புதுப்பிக்க நடவடிக்கையை மனுதாரர் மேற்கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவை பிறப்பித்தார்.

ரூ.11 கோடி நஷ்ட ஈடு

இந்த சூழ்நிலையில், கமல்ஹாசன், சாய்மீரா படநிறுவனம் மீது ரூ.11 கோடி நஷ்டஈடு கேட்டு புதிய வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

‘மர்ம யோகி’ படம் தொடர்பாக சாய்மீரா நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு 2 படங்களில் முக்கியமான வேடத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ரமேஷ் சிப்பி நிறுவனம் ரூ.10 கோடி தருவதாகவும், தங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. ‘மர்ம யோகி’ படம் ஒப்பந்தம் காரணமாக நான் இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டேன்.

அடுத்து, ‘வால்ட் டிஸ்னி’ நிறுவனம் படத்தில் நடிக்க அழைத்தது. ரூ.10 கோடி தருவதாகவும், பின்னர் ரூ.20 கோடியாக உயர்த்தி தருவதாகவும் வேண்டுகோள் விடுத்தது. இதிலும் நான் ஏற்க மறுத்துவிட்டேன். ‘மர்ம யோகி’ படம் ஒப்பந்தம் இல்லாவிட்டால், நான் ரூ.30 கோடி சம்பாதித்திருப்பேன். ‘மர்ம யோகி’ படம் காரணமாக நான் ஒரு ஆண்டாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. `மர்ம யோகி’ படத்துக்காக ஒப்பந்தம் செய்யும்போது சாய்மீரா படநிறுவனத்தின் நிதி நிலைமை எனக்கு தெரியாது. ரூ.1.5 கோடி ‘செக்’ தந்தனர். வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. முழுமையான நிதி நிலைமையை அந்த நிறுவனம் எனக்கு தெரிவிக்கவில்லை.

மேலும், என்னையும் பிற படத்தில் நடிக்க விடாமல் தடுத்ததால் எனக்கு ரூ.40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, எனக்கு ஏற்பட்ட இழப்புக்காக ரூ.11 கோடியை 10 சதவீத வட்டியுடன் வழங்குமாறு உத்தரவிட வேண்டும், என்று கூறியுள்ளார்.

இந்த மனுவையும் நீதிபதி ராஜசூரியா நேற்று விசாரித்தார். வழக்கு விசாரணையை வரும் 9-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். அதற்குள் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு சாய்மீரா நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Posts with Thumbnails